???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-11 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   24 , 2018  10:13:56 IST

சித்த மருத்துவத்தில் மனித உடலானது ‘வாத “, ‘பித்த” சிலோத்தும என வகைப்படுத்தப்பட்டு, அதன் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது அவை தொடர்பான நோய்கள் தலையெடுக்கிறது. 

இரத்த அழுத்தம் இருதய நோய், நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள், வலிப்பு, பக்கவாதம், வாயு போன்றவை வாத நோய்களாகவும்,  சீரணம் தொடர்பான பிரச்சனைகள், வயிறு வலி, புண், மஞ்சட்காமாலை     இரத்த சோகை,  கல்லீரல் மற்றும் பித்தப்பை பிரச்சனைகள் போன்றவை பித்த நோய்களாகவும் மூச்சுவிடுதல், மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, இருமல், ஆஸ்துமா போன்றவை சிலோத்தும நோய்களாகவும் வகுத்துள்ளனர் சித்தர்கள். வானியல் அறிவும், மருத்துவ அறிவும் ஒரு சேர இணைத்து நம் ஞானிகள் நமக்கு பல தீர்வுகளை பரிகாரங்களாகவும், மருத்துவ முறைகளாகவும் கொடுத்துள்ளனர். ஆனால் நமக்கு இன்று இந்த சமுதாயத்தில் இரு துறைகளிலும் போலிகள் உள்ளதால் தான் உண்மையான தன்மையை ஆராய யாரும் முன் வரவில்லை. அப்படி முன் வந்து உண்மையான தகவலை தந்தாலும் மக்களும் அவர்களை அறிவதில்லை.  உதாரணமாக ஒருவான் நட்சத்திரத்தினால் மாமியார் மாமனார் மச்சானுக்கு ஆகாது என்று எந்த மூல நூலிலும் ஞானிகள் சொல்லவில்லை. இதுபோன்ற அபத்தமான கருத்துகள் சோதிடர்களால் காலத்திற்கேற்ப ஏற்படுத்தப்பட்டவை. ஆண் பெண் இருவரின் நட்சத்திரத்தை மட்டும் வைத்து பத்துப் பொருத்தம் பார்க்கும் முறை முற்றிலும் தவறானது. ஜோதிடத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் இந்தப் பொருத்தமும் ஜோதிடர்களால் சொல்லப்பட்டது தான் ஜோதிடத்தை அருளிய சித்தர்கள் இவற்றை சொல்லவில்லை. இடையில் வந்த கோணல் இது என்கிறார் ஆதித்ய குருஜி. என்னுடைய அனுபவபடி பல பேர் ஜாதகங்களை ஆராய்ந்ததில் லக்னம் மாறுபடுகிறது. காரணம் அந்த ஜாதகம் வாக்கியப் பஞ்சாங்கப்படி எழுதப்பட்டது. இப்பொழுது எல்லோரும் திருக்கணிதப்படி பார்க்க ஆரம்பித்து விட்டதால் பிரச்சனையில்லை. ஆனால் முப்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது எல்லாம் வாக்கியப் பஞ்சாங்கபடி, ஆதலால் ஒரு முறை உங்களுடைய பிறந்த நேரத்தை ஊர், தேதியை வைத்து, திருக்கணிதப்படி, கம்ப்யூட்டர் நிலையத்தில் குறிப்பெடுத்து கொள்ளுங்கள். லக்னம் மாறுப்பட்டால் பலன்களே தலைகீழாகி விடும். அப்புறம் நாம் ஜோதிடத்தை குறைகூறி என்ன பலன். பத்துப் பொருத்தத்தை மட்டும் பார்த்து மணம் முடிப்பதை தவிர்த்து, முறையாக அவர்களின் லக்கின ராசியை கணக்கிட்டு, ஒருவருக்கொருவர் நட்பு, ராசி லக்கினமாக பார்ப்பது மிகவும் அவசியம். அதே போல் அவர்களது தசாபுத்திகளும் நட்புபடி இயங்கினால் ஒரு போதும் பிழை வராது. நூற்றுக்கணக்கான ஜாகத்தை ஆராய்ந்ததில், ஒன்று மனைவியை பிரிந்து வாழ்கிறேன் அல்லது திருமணம் ஆகவில்லை என்பதே பிரதானமாக உள்ளது. அடுத்தபடியாக கடன் தொல்லை. தொழில் சரிவர அமையாதது என்றிருக்கிறது. இந்த பிரச்சனையில் அடிப்படையாக உங்கள் மனம் தான் இயக்கப்படுகிறது.  இந்த மனதிற்கு காரகன் யார் தெரியுமா, நம் நிலா என்கிற சந்திரன் தான். சந்திரன் எந்த ராசி கட்டத்தில், நீங்கள் பிறக்கும் போது இருக்கிறாரோ அதுவே உங்கள் ராசி. தாய்க்கும் சந்திரனே காரகன். இந்த மனதை இன்றைய தலைமுறையினருக்கு புரியும்படி பார்ப்போம். உன் மனம் உன்னிடம் தங்காத வரை, உன்னிடம் எதுவும் தங்காது. மனம் அலை வடிவம் கொண்டது. அலைந்து கொண்டு தானிருக்கும். உயிர் காதல் வடிவம் கொண்டது, கலைந்து கொண்டேதான் இருக்கும். உடல் காமவடிவம் முடிந்ததும் விலகிவிடும். காமம் காதலாகி, காதல் அலையாகி, வாழ்க்கை என்ற கரையை இந்த முப்பரிமாண வடிவங்களிலிருந்து எவனொருவன் மீண்டு வருகிறானோ, அவனே சித்தனாவான். எங்கோ ஒருவன் இறந்தால், நம் மனம் அதை கண்டு கொள்வதில்லை. பக்கத்து வீட்டில் நடந்தால் ஓரளவு பதறுகிறோம். அதுவே நம் வீட்டிலானால், மனமும், உடலும் கலங்கி உயிரை விட்டு விடலாமா எனத்தோன்றும். இந்த மூவகை இறப்பிலும் ஒரே மாதிரி உள்ளவனே சித்தனாவான், சித்தர்களின் ஆசியுடன்.

உனை ஏசுவார் பலருண்டு, தூற்றுவாரும் பலருண்டு, இதை கண்டு நம் மனம் தடுமாறலாம். சிலர் உன்னை பொருள் கொண்டு தாக்கினால் உன் உடல் காயப்படலாம். இதையும் மீறி மனைவியின் கடுஞ்சொல் உன் உயிரை காயப்படுத்தும். முக்காயமும், முக்கண்ணனை தொழுதலன்றி நம்மை விட்டு போகாது. ஒவ்வொருவரும் கர்மவினைப்படி பயனை அனுபவித்து கொண்டு தான் இருக்கிறோம். அதையே விதி என்கிறோம். மதியால் விதியை வெல்லலாம் என்ற உண்மை அர்த்தம் என்ன தெரியுமா? லக்னம் என்ற  விதி வலுவிழந்தால், மதி என்ற ராசி (சந்திரன்) நின்ற இடம் கொண்டு உனது வாழ்க்கை இயக்கப்படும் என்பதே. இந்த மதி தான் நமது மனதின் அடிப்படை ஓட்டம். இதையே கண்ணதாசன் குறிப்பிடுவதை பாருங்கள்.  

 

                கந்தையிலே அழுக்கிருந்தால் கசக்கி எடுத்து விடு வெள்ளையப்பா  

                உன் சிந்தையிலே அழுக்கிருந்தால் சிவனடியை நாடிவிடு வெள்ளையப்பா 

                உயிரே அழுக்குதுணி, உவர்மண்ணே நம் பிறப்பு  

                பூவுலக வாழ்க்கையென்னும் பொல்லாத கல்லினிலே 

                மோதி அடிக்கையிலே, முற்றும் கசக்கையிலே 

                ஆதிசிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே  

                அழுக்கெல்லாம் வெளுக்குதடா வெள்ளையப்பா 

                அவன் அருள் என்னும் நிழல் தனிலே வெள்ளையப்பா 

                இந்த உயிரெல்லாம் வாழுதடா வெள்ளையப்பா 

                பஞ்சிலே நூலை வைத்தான், நூலிலே ஆடை வைத்தான்

                ஆடையிலே மானம் வைத்தான், அந்த மானத்திலே உயிரை வைத்தான் 

                                                                                                                                                வெள்ளையப்பா 

                பக்தருக்கு அருள் குறிப்பு, பாமரர்க்கு பொருள் குறிப்பு 

                சத்தியத்தின் ஒரு குறிப்பு வெள்ளையப்பா - அது

                முக்தி தரும் திருக்குறிப்பு வெள்ளையப்பா 

                வானவில்லை போலே இங்கே பல வண்ண வண்ண சேலையெல்லாம்

                பூமியிலே காயுதடி வெள்ளையம்மா 

                எங்கள் புத்தியிலே உள்ள நிறம் வெள்ளையம்மா  

நம் நிலா என்ற மதியின் நிறம் வெண்மை. இந்த வெள்ளை என்ற வார்த்தையை கொண்டு கண்ணதாசன் நம் மனதையும், மனதை இயக்கும் மதியையும் சொன்ன இந்த பாடல் திருவருட்செல்வர் படத்திற்காக கொடுக்கப்பட்டது. எங்கள் புத்தியிலே உள்ள நிறம் வெள்ளையம்மா என்ற வரி கண்ணதாசனின் வானியல் அறிவை எடுத்துக் காட்டுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரை வெண்ணிலா இடம் பெறாத இலக்கியங்களோ, நாவல்களோ, பாடல்களோ இல்லை. நம் தமிழோடும், தமிழர் பண்பாட்டோடும் பின்னி பிணைந்திருக்கும் இக்கிரகம் பூமிக்கு ஓர் துணைக்கோள். சித்தர்கள் சந்திரனை தாயாகவே பார்த்திருக்கிறார்கள். சந்திர கிரகணத்தையும் முன் கூட்டியே உணார்ந்து, அதை ராகு கேதுகளாக்கி, அதன் பாதிப்பையும், அதன் சுற்று வட்டப் பாதையையும் கணித்திருக்கிறார்கள். ஓர் நிழல் சூரியன் என்ற மாபெரும் ஒளியையும், அதே ஒளியை உள்வாங்கி சந்திரன் நமக்கு தருவதையையும் தடுக்கும் அமைப்பு என்றால், அதனால் தான் ராகு கேதுக்கள், சூரியன், சந்திரன்   என்ற ஒளிக்கிரகங்களை விட வலிமையானவர்களாக மூல நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். எல்லா கிரகங்களும் இவார்களுடைய கட்டுப்பாட்டில் இயங்கி கொண்டிருப்பதை கண்டறிந்த நம் ஞானிகளின் வானியல் அறிவை ஜோதிடமாக கொண்டு வந்து உங்களுக்கு கொடுத்ததே நீங்கள் செய்த பாக்கியம் தான். என்னுடைய அனுபவபடி, பல ஜாதகங்களை கண்டறிந்து உணர்ந்ததில், பலருடைய இழப்புகளுக்கு பின்னால் இந்த ராகு கேதுக்கள் தொடர்பு உண்டு. சூரிய திசையில் ராகு புத்தியில் தான் நண்பனின் தகப்பனார் தவறினார். சுக்கிரதசை ராகுபுத்தியில் தான் நண்பரின் மனைவி தவறினார். இதற்காகவே நமது சித்தர்கள் ஒவ்வொரு கிரகங்களுக்கான பரிகாரங்களையும், அதற்கான மந்திரங்களையும், அருளியுள்ளார்கள். அதையறிந்து அதன்படி நடக்க ஒவ்வொருவருக்கும் இறைவனின் அருள் வேண்டும். ஓர் பெண் தாயாவதற்கு உரிய அனைத்து அமைப்புகளும் சந்திரனால் தான் உருவாக்கப்படுகின்றன. பெண்களின் கருமுட்டைக்கு காரணமானவர் சந்திரன். பெண்களின் மாதவிடாய் சுழற்சி தோராயமாக 28 நாட்கள் என்றிருப்பதே சந்திரனுக்கும் தாய்மைக்கும் உள்ள சம்பந்தத்தை எளிமையாக விளக்கும். சந்திரன் பூமியை சுற்றி வரும் நாட்களுடன் தொடர்புடையது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மாறுபடும் நிலை மாறுவதும், பாதிக்கப்படுவதும் நாம் அறிந்ததே.   

 

அதே போல் சந்திராஷ்டம் நாட்களில் அதாவது உங்கள் ராசிக்கு 8-ஆம் இடத்தில் சந்திரன் மறையும் இரண்டு கால் நாட்களில், முக்கியமான முடிவுகளை, நீண்ட பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டாம்  என்பதும் சித்த ஞானிகள் நமக்கு கொடுத்ததே. காரணம் என்னவென்றால் சந்திரன் மனதிற்கும், மனம் எடுக்கும் முடிவுகளுக்கும் காரணமானவர் என்பதால் இந்த நாட்களில் நம் மனம் தெளிவற்ற நிலையில் அலைபாய்ந்து கொண்டிருக்கிருக்கும். இந்த அலையும் மனதை, நம் கண்ணதாசனை தவிர யார் ஒப்பிட முடியும். பட்டினப் பிரவேஷம் படத்திற்காக கொடுக்கப்பட்டது. 

                வான்நிலா தேன்நிலா அல்ல உன் வாலிபம் நிலா 

                தேன்நிலை எனும் நிலா என் தேவியின் நிலா 

                நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா 

                மானில்லாத ஊரிலே சாயல் கண்ணிலா 

                பூவிழாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா 

                .............. தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா 

                இன்பம் கட்டிலா அவள் தேகக்கட்டிலா 

                ............. எண்ணிலா ஆசைகள் என்நிலா கொண்டதேன்.    

              -கண்ணதாசன் 

என்னால் முழுவதும் எழுத முடியவில்லை. எனவே சுருக்கமாகத்தான் எல்லா கண்ணதாசன் பாடல்களையும் கொடுக்கிறேன். தயவு கூர்ந்து இந்த பாடலை முழுவதும் நீங்கள் கேட்டுவிட்டு, இதை மீண்டும் படியுங்கள் அன்பிற்கினிய வாசக நெஞ்சங்களே, தமிழரையும் தமிழர் நெஞ்சத்தையும் பறைசாற்றும் புறநானூற்று பாடல் கூட கண்ணதாசனின் வரிகளில் இதோ பெரிய இடத்துப் பெண் படத்திற்காக தந்தது. 

அன்று வந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா 

என்றும் உள்ளது ஒரே நிலா 

இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா 

அம்பிகாபதி கண்ட நிலா, அமராவதியை தின்ற நிலா   

கம்பன் பாடிய வெள்ளி நிலா, கவியில் ஆடிய பிள்ளைநிலா 

- கண்ணதாசன் 

நிலாவை காட்டி கதை கூறி சோறுட்டும் தாய், எங்கள் தமிழ், எங்கள் நிலவாகி குழந்தை பருவ மொழியாகி, தமிழ் தாயாகி வாழும் எங்கள் நிலமே தமிழ்நாடாகி, பரந்து விரிந்த உலகிற்கு ஓர் உறவாகி, தமிழ் தாய் பிள்ளை பருவத்தில் நிலாவாகி வாழ்கிறோம். 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...