???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-10 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   17 , 2018  06:54:30 IST

மனத்தை அடக்கி வெற்றி கண்ட சித்தர்களும் உண்டு. அதை அலையவிட்டே ஒரு முகமாய் வாழும் தன்மை கொண்ட மனிதர்களும் உண்டு, அதை உசுப்பி விட்டே பல முகமாய் வாழும் மனித அரக்கர்களும் உண்டு. எவ்வகை, எவ்வாழ்வு, எவன் கொடுத்தது என்று அறியதான் மனமில்லை. ஒருவன் மனது ஒன்பது என்ற கண்ணதாசன் கூற்றிற்கிணங்க, பல்வேறு சித்தர் பாடல்கள் மனதிற்காக சிவனை நினைப்பதற்காகவே உள்ளது.

     அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

     அன்பே சிவமாவது யாரும்அறிகிலார்

     அன்பே சிவமாவது யாரும் அறிந்த பின்

     அன்பே சிவமாய் அமர்ந்திருப்ப பாரே.

 

     உடம்பார் அழியின் உயிரார் அழிவர்.

     திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

     உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

     உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

-     திருமூலர், திருமந்திரம்

பதிணென் சித்தர்களில் திருமூலரும் ஒருவரே, சிதம்பரத்தில் அவருடைய ஜீவ சமாதி உள்ளது.  கண்ணதாசனின் பார்வையில் எனக்கு திருமூலர் தெரிகிறார். பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழுக்கும் இன்றைய தமிழுக்கும் இது ஓர் பாலமாக இருக்கட்டும், இருக்கும் என்பதே சித்தரின் ஆசி. 

     இளமையும் முதுமையும் முடிவுமில்லை என்ற கண்ணதாசனின் வரியும் உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்ற திருமூலரின் வரியும் சிவனின் நெற்றிக்கண்ணே, ஒரு கண்ணே. ஃ என்ற தமிழ் வார்த்தை தமிழ் மொழிக்கே உரிய சிறப்பு. எந்த மொழியிலும் இல்லாத ஓர் அமைப்பு. இந்த ஃ என்ற எழுத்து முக்கண்ணையே குறிக்கிறது. இரு கண்களைக் கொண்டு, மூன்றாவது கண்ணை திறத்தலே முழுமையான அறிவுக்கும், ஞானத்திற்கும், இறைநிலை அடைவதற்கும், இறைவன் திருவடி பற்றுவதற்குமான வழி. இந்த வழியை உணர, அடைய, ஒருவர் திருவாசகம், திருக்குறள், திருமந்திரம், சிவசூத்திரம், திருவருட்பா, அவ்வையார் பற்றி தொpந்திருந்தால் தான் முடியும். மனதை ஒருநிலைப்படுத்த போனாலே, நமக்கு பல நாடகங்கள் கண் முன்னே ஓட, இதில் எங்கே மூன்றாது கண்ணை திறக்க, என் கேள்வி எல்லோர் மனதிலும் உண்டு. இதற்காகவே சித்தர்கள் மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்த காய கற்ப மூலிகைகளை பயன்படுத்தியுள்ளார்கள். அதற்கான பதிவுகளை பின்னர் நாம் பார்ப்போம். இப்போது மனதை பற்றி சொல்லும் போது, ஒன்பது கிரகங்களின் வழியே செயல்படும் நிலையையே, கண்ணதாசன் ஒருவன் மனது ஒன்பதடா என்று சொல்லி வைத்தார். அந்தந்த கிரகங்களின் காரகத்துவ வழியாக உங்கள் செயல்பாடு, மனம் இயங்கும். இதையே இயக்குநர் உதிரிப்பூக்கள் மகேந்திரன் தெளிவாக, வேறு நிலையாக ஒரு நிகழ்ச்சியில், எனது மூளை என்னால் செயல்பட்டது என்றால் அது அல்ல. அதற்க்கும் மேலே ஒருவன் இடுகின்ற கட்டளைப்படி இயங்குகிறது. அதே சமயம் நாம் நினைக்க முடியாத தருணங்களையும், நபர்களையும் காலம் இணைத்து வைக்கிறது என்றார். அப்படித்தான் இன்று நான் உங்களோடு இணைந்துள்ளேன் என்பதும் இறைவனின் கருணையே.  

அதாவது நவகிரகங்களின் தன்மையை ஒருவர் அறிந்தால் இந்த உலகம்                  ஒன்பது என்ற எண்ணால் எப்படி பின்னியுள்ளது என்பதை உணர முடியும்.                அதற்கான தேடல்களையும் விளக்கங்களையும், நம் சித்தர்கள் மூலநூல்களில் விளக்கியுள்ளார்கள். அதை அறிவியல் ரீதியாக கண்டுணர்ந்து, எல்லாவல்ல இறைவனை நோக்கி தவமிருந்து, நீ வேண்டுவன அடையலாம் என்கிறது சித்திரியல். இதற்கு அடிப்படையே இந்த மனதை இயக்கும் ஆற்றல் படைத்த நவகிரக, நட்சத்திர ஒளிகளே. வானத்தையும், கோள்களையும் பற்றிய  விளக்கத்தை அறிவியல் ரீதியாக புரிந்து கொண்டால்தான் நாம் எல்லாவற்றையும் உணர அறிவு பெற முடியும் என்பதால், ஜோதிடத்தில் ராசிக்கட்டம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்ற அறிவியலை தருகிறேன்.   

     சூரியன் மையமாக, புதன், சுக்கிரன் (வெள்ளி), நமது பூமி அதற்கான சந்திரன் பிறகு, செவ்வாய் குரு, சனி என சுற்று வட்ட பாதை என்று அண்டத்தை பற்றி படிக்கும்போது தெரிந்திருப்போம். ராகு கேதுகளை சூரிய, சந்திரன கிரணமாக அதன் நிழல் நம் கண் அறியும். இதையே நம் மெய் ஞானிகள், சித்தர்கள் 360°, 12 ராசி கட்டமாக பிhpத்துள்ளார்கள். அதன்படி

                                         

மீனம் 360°

30°  மேஷம்

செவ்வாய் ;                 

60°            ரிசபம் சுக்கிரன்;

மிதுனம்       புதன்;              90°

 

கும்பம்            சனி                330°

 

பூமி

கடகம்          சந்திரன்           தாய்; 120°

மகரம்            சனி                 300°

சிம்மம்             சூரியன்           தந்தை 150°

தனுசு             குரு                            270°

குறி விருச்சிகம் செவ்வாய்      ;       240°

துலாம்                   சுக்கிரன்;                 210°

கன்னி                புதன் 180°

 

 

இந்த ராசிகட்டமும் நான் மேலே கூறிய வரிசையில் அமைந்திருப்பதை கவனிக்க பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, எந்த தொலை நோக்கியும் இல்லாத காலத்தில் நம் சித்தர்களின் வானியல் அறிவை எண்ணி வியக்க இதுமட்டுமல்ல 27 நட்சத்திரங்களையும் இதில் அடக்கியிருக்கிறார்கள். 

 

நான் முன்னா; கூறியது போல 12 மாதங்கள், சூரியனை பூமி சுற்றி முடிக்கும் ஒரு வருடக் காலம், இது ஒவ்வொரு கிரகங்களுக்கும் பொருந்தும். சூரியனை சனி சுற்றி முடிக்க முப்பது வருடங்கள் ஆகும் என்பதே ஒவ்வொரு சனி பெயர்ச்சியும் இரண்டரை ஆண்டு காலமாக உள்ளது. உதாரணமாக ஒருவா; மிதுன ராசியில் பிறந்தார் என்றால், என்று சனி கோட்சாரப்படி மகரத்தில் சந்திக்கிறதோ அன்று அஷ்டம சனி காலம் இரண்டரை வருடங்களுக்கு. இந்த காலம் ஒரு மனிதனை எவ்வாறு புரட்டிப்போடும் என்பது எல்லோரும் அறிந்ததே. 

 

     சித்தர்கள் மருத்துவத்தில் நோயறிய ஜோதிடத்தையும் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பது பலரும் அறிந்திருக்காத செய்தி. புலிப்பாணி சித்தரின்  ‘புலிப்பாணி வைத்திய காவியம் ” என்றும் நூலில் 

 

 

     பாரப்பா இன்னுமொரு விவரங்கேளு  

     பகர்தனுங் குருசனியும் வாத நாடி

     சீரப்பா துர்க்கிரகம் சூரிசேயும் 

     சிறப்பான பாம்புகளும் பித்த நாடி

     நேரப்பா பால்மதியும் சுங்கன்தானும் 

     நேர்மையுள்ள சிலேட்டுமத்தின் கிரகமென்று 

     வீரப்பா போகருட கடாட்சத்தாலே 

     விவரமெலாம் புலிப்பாணி விளம்பக்கேளு 

-     புலிப்பாணி 

ஒருவருடைய ஜாகத்தை ஆராயும் போதே ஜாதகனுக்கு இருக்கும் நோயை தெளிவாக அறியமுடியும் என்கிறார் புலிப்பாணிச் சித்தர். புதன், குரு, மற்றும் சனி, 6ம் வீட்டு அதிபதி ஆனால் வாதநோய் பீடிக்கும் என்றும், சூரியன் செவ்வாய் 6ம் வீட்டு அதிபதி ஆனால் பித்தநோய் பீடிக்கும் என்றும், 6ம் வீட்டில் ராகு கேது நின்றாலும் பித்தநோயும் சந்திரன் சுக்கிரன் 6ம் வீட்டு அதிபதியானால் சிலேத்தும நோய் உண்டாகும் என்கிறார். 

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...