???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சரோஜ்கான் - நடன ராணி! 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி 0 மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று! 0 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாப மரணம்! 0 என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம்: ஏ.ஐ.சி.டி.இ. 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது! 0 பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது! 0 அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி 0 தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு 0 தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது 0 சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நாய்கள் ஜாக்கிரதை வெற்றியாம்

Posted : புதன்கிழமை,   நவம்பர்   26 , 2014  02:18:43 IST

நான்காண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சிபிராஜ் தன் தந்தை சத்யராஜின் தயாரிப்பில் ஈடோ என்கிற நாயுடன் சேர்ந்து நடித்த நாய்கள் ஜாக்கிரதை படம் வெற்றி என்று சொல்லப்படுகிறது. கடந்த வெள்ளியன்று வெளியான அந்தப்படம் திங்களன்று மேலும் 25 திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்கிறதென்றும் சத்யம் வளாகத்தில் ஒரு சின்னதிரையரங்கில் திரையிடப்பட்டிருந்த இந்தப்படம் பெரிய அரங்கான சத்யத்தில் திரையிடப்படுகிறதென்றும் சொல்கிறார்கள். அதோடு இந்தப்படத்தை சுமார் இரண்டரை கோடி செலவில் எடுத்திருக்கிறார்கள் என்றும் அந்தப்பணத்தை இது திரையரங்கு வசூலிலேயே எடுத்துவிடுவார்கள் என்றும் சொல்கிறார்கள்.

 

அதைத்தாண்டி இந்தப்படத்தை இந்தியில் குரல்பதிவு செய்து வெளியிட பல இலட்சங்கள் கொடுத்து வாங்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள். இவை மட்டுமின்றி இந்தப்படம் வெற்றி என்று சொல்லப்படுவதால் இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை இரண்டரை கோடி கொடுத்து வாங்கிக்கொள்ள விஜய் தொலைக்காட்சி தயாராக இருக்கிறதென்றும் இன்னும் ஓரிருநாட்களில் அந்த ஒப்பந்தமும் நடந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இந்தக்கணக்குளின் படி பார்த்தால் இந்தப்படம் சுமார் மூன்று கோடி இலாபத்தில் இருக்கிறது. இது போன்ற வளரும் நடிகர்கள் நடிக்கும் படங்கள் எல்லாம் நட்டத்தையே சம்பாதித்துக்கொண்டிருக்க இந்தப்படம் பெரிய இலாபத்தை ஈட்டியிருக்கிறது. இந்தப்படத்தின் வெற்றிக்குக் காரணமே படத்தில் நடித்திருக்கும் ஈடோ என்கிற நாய்தான் என்று அந்தப்படக்குழவினரே ஒப்புக்கொள்கிறார்கள்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...