???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இதுதான் என் வாழ்க்கை… என் முகம்: பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி ஸ்ருதி ஹாசன்

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   28 , 2020  21:23:21 IST


Andhimazhai Image

நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசனை, சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பலரும் தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளனர். இதனால் மன வருத்தமடைந்த அவர், அனைத்து கேலிக்கும் கிண்டல்களுக்கும் தக்க பதிலடியைக் கொடுக்கும் வகையில் உருக்கமான போஸ்ட் ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.பல நேரங்களில் ஸ்ருதி ஹாசன் செய்து கொண்ட உதடு மற்றும் மூக்குப் பகுதிகளுக்கான பிளாஸ்டிக் சர்ஜரியை வைத்து அவரை ஆன்லைனில் பலர் கிண்டல் செய்து வந்துள்ளனர். அதற்கு ரிப்ளை கொடுக்கும் வகையில் தனது இரண்டு புகைப்படங்களை கொலாஜ் செய்து வெளியிட்டுள்ளார் ஸ்ருதி.அந்த போட்டோக்களுடன் அவர், “நான் மற்றவர்களின் பேச்சுகளைக் கேட்டு வாழ்பவள் அல்ல. தொடர்ந்து என்னைச் சிலர், ‘பருமனாகிவிட்டாய்' ‘இளைத்துவிட்டாய்' என்று கமென்ட் அடிப்பதைத் தவிர்க்கலாம். தற்போது நான் எடுத்துள்ள இரண்டு படங்களும் 3 நாள் இடைவெளியில் எடுக்கப்பட்டவை. நான் சொல்ல வருவதைப் பல பெண்களால் உணர்ந்து கொள்ள முடியும்.எனது ஹார்மோன்களின் கருணையில்தான் எனது மனதையும் உடலையும் சரிவர வைத்திருக்கிறேன். எனது வலியும் உடல் மாற்றமும் சுலபமல்ல. ஆனால், நான் வந்த பயணத்தை என்னால் பகிர்ந்து கொள்ள முடியும். எந்த ஒரு நபரும் இன்னொரு நபர் பற்றி ஒரு முன்முடிவுக்கு வரக்கூடாது. ஆமாம், நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன். அதைச் சொல்வதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. இதுதான் என் முகம். இதுவே என் வாழ்க்கை. பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி நான் விளம்பரம் செய்கிறேனா? இல்லை. அதை எதிர்க்கிறேனா? இல்லை. இது நான் எடுத்த முடிவு.நமக்கும் மற்றவர்களுக்கும் நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய உதவி, நம் உடல் அளவிலும் மனதளவிலும் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதுதான். அன்பைப் பரப்புங்கள். என்னை ஒவ்வொரு நாளும் நானே அதிகம் நேசிக்கக் கற்றுக் கொள்கிறேன். ஏனென்றால், என் வாழ்க்கையின் மிகப் பெரிய காதல் கதை, என்னுடன் நானே கொண்டுள்ளதுதான். உங்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நினைக்கிறேன்,” என்று உருகி உருகி எழுதியுள்ளார்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...