???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வாவ்.. வால்மார்ட்! போன்பேவில் கொட்டிய கோடிகள்!

Posted : புதன்கிழமை,   ஜுலை   10 , 2019  04:59:24 IST


Andhimazhai Image

இது வால்மார்ட் நிறுவனத்துக்கு ஆச்சரியம்தான்.  16 பில்லியன் டாலர்களை கொடுத்து இந்தியாவின் நம்பர் 1  ஷாப்பிங் இணையதளமான ஃபிளிப்கார்ட்டை அது கடந்த ஆண்டு வாங்கியது. அத்துடன் அதற்கு பிளிப்கார்ட்டின் துணை நிறுவனமான போன்பேவும் கிடைத்திருந்தது.  போன்பே ஒரு டிஜிட்டல் பணபரிவர்த்தனை செயலி. இதுதான் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது.

 

ஃபிளிப்கார்ட் இணையதளம் மூலம் பெரும் லாபம் கிடைக்கும் என்று நினைத்த வால்மார்ட்டுக்கு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அவ்வளவாக எதிர்பார்க்காத போன் பே செயலி மூலம் மட்டுமே 15 பில்லியன்  வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்கப்படுகிறது.  இதனால் வால்மார்ட் போன் பே செயலியின் லாபத்தை மேலும் ஈட்ட தனி முயற்சிகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

போன் பே செயலி உருவான கதை

 

2015ம் ஆண்டு ஃபிளிப்கார்ட்டில்  இருந்து வெளியேறிய மூன்று நண்பர்கள் போன்பே செயலியை உருவாக்கினர்.  செயலி உருவாக்கப்பட்ட சில நாட்களிலே ஃபிளிப்கார்ட் நிறுவனம் அவர்களிடமிருந்து போன் பே செயலியை வாங்கிவிட்டது.

 

இந்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன் பே செயலியின் பயன்பாட்டை மேலும் மக்களிடத்தில் அதிகப்படுத்தியது. சென்ற ஆண்டு மட்டும் போன் பே செயலி மூலம் 290  மில்லியன் முறை பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இந்த பரிவர்த்தனைகள் மூலம் 85 பில்லியன் தொகை பரிமாற்றப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் 150 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் மற்றும் 5 மில்லியன் வியாபாரிகள் போன் பே செயலியை பயன்படுத்துகிறார்கள். பிற செயலிகளை இது பின்னுக்குத் தள்ளிவிட்டதாக சொல்கிறார்கள்.

 

எதிர்காலத்தில் இந்தியாவில்  டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேலும் அதிகரிக்கும் என்பதால் போன் பே செயலியின் லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

 

இதனால் போன்பே செயலியை தனி நிறுவனமாக்க ப்ளிப்கார்ட் முடிவு செய்துள்ளது. பத்து பில்லியன் டாலர்கள் என்று போன்பேவின் மதிப்பு முடிவு செய்யப்பட்டு, அதற்கு தனியார் முதலீடு ஒரு பில்லியன் டாலர்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...