அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஷாஜகான் திரைப்படத்தின் இயக்குநர் மாரடைப்பால் காலமானார்!

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   28 , 2021  14:43:17 IST

இயக்குநர் ஆச்சார்யா ரவி மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரவி, விக்னேஷ் நடிப்பில் வெளியான 'ஆச்சார்யா' படத்தை இயக்கியதன் மூலம் ஆச்சார்யா ரவி என்று அழைக்கப்பட்டார். இவர் 'டம்மி பட்டாசு', 'அனைத்துக்கும் ஆசைப்படு' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அதேபோல், 2001ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் திரைப்படத்தையும் இயக்கினார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆச்சார்யா ரவி உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் இயக்குநர் ஆச்சார்யா ரவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஆச்சார்யா ரவியின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...