அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்’ பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு! 0 உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் கொரோனா மூன்றாவது அலை வரும்: நீதிமன்றம் கருத்து 0 சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி 0 திமுக அடக்கமுடியாத யானை - முதல்வர் ஸ்டாலின் 0 எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்! 0 உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து! 0 தி பேமிலி மேன் 2 தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் 0 யூடியூப் பார்த்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கொள்ளை: போலீஸ் விசாரணையில் தகவல் 0 காவலர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! 0 போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு; சப்-இன்ஸ்பெக்டர் கைது 0 தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு 0 காவலர் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 சோதனை சாவடியில் போலீஸ் தாக்கி வியாபாரி பலி! 0 ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 தமிழக எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் ரூ. 48 லட்சம் கொள்ளை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஐஐடி மாணவி தற்கொலை: இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   14 , 2019  15:29:18 IST

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஐஐடி வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

போராட்டத்திற்கு தலைமை தாங்கிய இந்திய மாணவர் சங்க, மாநில செயலாளர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 

”மத்தியில் ஆளக்கூடிய பாசிச பாஜக அரசாங்கம் கல்வி நிலையங்களை சிதைப்பதற்காகவே தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தி ஒரு பக்கம் சிதைத்துக்கொண்டிருக்கிறது. இனி ஒரு பக்கம் மத்திய பல்கலைக்கழகங்களில்  தலித் மற்றும் இஸ்லாமிய மாணவர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து ஆர்எஸ்எஸ் சிந்தனை உள்ள ஆசிரியர்கள் நிகழ்த்தி வருகின்றனர். கல்வி நிலையங்களில் தொடர்ந்து தற்கொலை நிகழ்வதும், அதற்கான உரிய விசாரணை நடத்தப்படாமல் வழக்கை முடித்து வைப்பதும் தொடர்கதை ஆகிவிட்டது.

 

ஆகவே தமிழக அரசாங்கம் மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் கொலைக்கூடாரங்களாக மாறுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர் மீது காவல்துறையினர் சட்டபிரிவு 306-யின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஐஐடி நிர்வாகம் சுதர்ஷன் பத்மநாபன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...