???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 0 அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை 0 ராதாரவிக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்! 0 நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம் 0 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி 0 சிவகங்கையில் மநிம வேட்பாளர் கவிஞர் சினேகன்! 0 மக்களே தலைவர்; நான் என்றும் தொண்டன்: எடப்பாடி பழனிசாமி 0 நான் பிராமணர்;சவுகிதார் ஆக முடியாது: சுப்பிரமணியன் சாமி 0 சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி! 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஏழு கூட்டல் ஒண்ணு: எட்டு எட்டாய் சீட்டுகளை எடுத்துக்கோ!

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   19 , 2019  00:28:23 IST


Andhimazhai Image

 

 

திமுகவா அதிமுகவா என்று அலைபாய்வதாகச் சொல்லிக்கொண்டிருந்த பாமக இன்று (19-09-2019) அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்துகொண்டுள்ளது. இதன்மூலம் பாஜக- அதிமுக கூட்டணியில் பாமக கைகோர்த்துவிட்டது. இன்னும் பாஜக அதிமுக கூட்டணியில் இணைவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அதற்கான பேச்சுவார்த்தைகளை வெளிப்படையாகவே நடக்கின்றன. இந்த கூட்டணியில் தேமுதிகவும் இணைய இருக்கிறது என்பதும் வெளிப்படையாகத் தெரிந்ததே.

 

ஏழு இடங்களும் ஒரு மாநிலங்களவை இடமும் என்பது பாமகவைப் பொறுத்தவரை நல்ல எண்ணிக்கையே. வடமாவட்டங்களில் 5.5% வாக்குகளைக் வைத்திருக்கும் பாமகவுடனான கூட்டணி தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று அதிமுக நம்பியிருக்கிறது. அதனால்தான் பாமக இழுத்த இழுப்புக்கு அதிமுக ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன் 21 இடங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும்போது அந்த இடங்களில் பாமக ஆதரிக்கும் என்பதையும் ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளது அதிமுகதரப்பு.

 

இது மக்கள் நலக்கூட்டணி, மெகா கூட்டணி வெற்றிக்கூட்டணி என்று மருத்துவர் ராமதாஸ் சொல்லியிருக்கிறார். இதற்காக பத்துக் கோரிக்கைகளை அதிமுகவிடம் வைத்திருப்பதாக அவர் கூறினார். அவை:

  1. காவிரிப் பாசன பகுதிகளை பாதுகாக்கபட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்கவேண்டும்
  2. கோதாவரி- காவேரி நதிகள் இணைப்பு
  3. தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கீடு
  4. ஏழு தமிழர் விடுதலை
  5. படிப்படியாக மதுவிலக்கு
  6. படிப்படியாக மணல்குவாரிகளை மூடுதல்
  7. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல்
  8. மேகதாது அணைத்திட்டத்தை எதிர்த்தல்
  9. விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி
  10. நீட்தேர்வு எதிர்ப்பு

 

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, இவ்வளவு நாள் அதிமுக அரசு ஊழல் அரசு, பாஜக எதிர்ப்பு, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்த நிலைப்பாட்டில் இப்படி செய்திருக்கும் மாறுபாட்டை  பாமக எப்படி விளக்கும் என்பது கேள்விக்குறி.

அதுவும் அந்த கார் உள்ள அளவும், கடல் உள்ள அளவும், பார் உள்ள அளவும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற கருத்தை மாற்றிக்கொண்டதை எப்படி நியாயப்படுத்தமுடியும்? திமுக உடன் சேர்ந்தாலும் கூட இந்த கேள்வியே எழுந்திருக்கும்.

இதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள் என்பதில் இருக்கிறது இக்கூட்டணியின் வெற்றி.

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...