???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் நோட்டீஸ்! 0 கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் 0 ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 147 பேர் ராஜினாமா அறிவிப்பு! 0 நடிகர் தனுஷை சொந்தம் கொண்டாடிய மதுரை தம்பதி: வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் 0 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லாது: டெல்லி உயர்நீதிமன்றம் 0 உலகின் அதிவேக ஏவுகணை: பிரமோஸ் சோதனை வெற்றி! 0 மாநிலங்களவை தேர்தல்: பாஜகவிற்கு வாக்களித்த பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ-க்கள்! 0 உள்ளாட்சித் தேர்தல் தாமதத்திற்கு திமுக காரணம் என்பது வடிகட்டிய பொய்: ஸ்டாலின் 0 திசை மாறிப்போன குழந்தைகள் மீண்டும் தாய் கட்சிக்கு திரும்புவார்கள்: முதல்வர் நம்பிக்கை 0 பேஸ்புக் தகவல் திருட்டு: விஷயம் இதோடு முடிந்துபோய் விடவில்லை! 0 காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடுகிறது: கமல் குற்றச்சாட்டு! 0 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தொடங்கியது! 0 தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா - சென்னையில் இன்று நடக்கிறது! 0 இன்று பகத்சிங்கின் 87வது நினைவு தினம்! 0 குரங்கணி காட்டுத்தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சினிமா சென்ஸார் - சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   அக்டோபர்   02 , 2005  18:49:09 IST

சினிமாவிற்கு சென்ஸார் உண்டு. ஆபாசம், வன்முறை, இதர நாடுகள் மீது துவேஷம், இன துவேஷம், மத துவேஷம் ஆகியவை மீது சென்ஸார் பாய்கிறது. அது கருத்துச் சுதந்திரம், படைப்புச் சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்று படைப்பாளிகள், சினிமாக்காரார்கள் அடிக்கடி குரல் எழுப்புகிறார்கள்.

சினிமா என்பது பொழுது போக்கிற்காக, பணம் பார்க்கும் சாதனமாக இருப்பதால் அதனைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று அரசாங்கம் நினைக்கிறது. சென்ஸாரை எதிர்க்கும் ஆள், சில நாடுகளில் சினிமாவிற்கு சென்ஸார் கிடையாது என்பதை எடுத்துக்காட்டுகிறார்கள்.எல்லா நாடும் ஒன்றில்லை. சென்ஸார் என்பது ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது. நமது நாட்டில் அரசாங்கத்தின் ஒரு துறையாக சென்ஸார் இருக்கிறது.எனவே அரசாங்கத்தின் விருப்பம், ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் சென்ஸார் போர்டு அதிகாரிகள், உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் கலை, இலக்கியம், சினிமா ஆள்கள் இல்லை. அரசியல் கட்சிக்காரர்கள். அரசாங்கம் தன் கட்சி ஆள்களுக்கு ஒரு கெளரவம் கொடுக்க சென்ஸார் போர்டில் ஆள்களைப் போடுகிறது.அவர்கள் சினிமாவிற்கு கலைக்கு- பொழுதுபோக்கு சாதனத்திற்கு உதவி செய்கிறவர்களாக இல்லாமல் கட்சிக்கு விசுவாசிகளாக இருக்கிறார்கள்.இவர்களால் சினிமாவிற்கு பெரிய அளவில் இலாபம். அதிலும் சிலர் பொது மனிதர்களாக இருக்கிறார்கள்.அவர்களே சென்ஸார் போர்டை பொதுத்தன்மை உள்ளதாக்கி அரசு-மக்கள் இருவருக்கும் இடையேயான தூரத்தைக் குறைக்கிறார்கள்.சென்சார் அவர்களாலேயே உயிர்துடிப்புடன் உள்ளது எனலாம்.

சினிமா என்பது பெரிய பொழுது போக்கு சாதனமாக இருகிறது. பிரபல்யமாக ஆக அது துணை செய்கிறது.அனைத்துத் தரப்பு மக்களையும் சென்று அடையும் சாதனமாக இருக்கிறது.அது விஞ்ஞானம், தொழில் நுட்பம், கதை, நடிப்பு, மொழி, இசை, நடனம், ஆடை, அலங்காரம் இன்னும் எத்தனையோ அம்சங்களையும் உட்கொண்டு இருப்பது.அதன் காரணமாக கவர்ச்சியாக-உல்லாசமாக இருக்கிறது.எனவே சினிமா, மக்களை வசீகரிக்கிறது. தொலைக்காட்சி வந்த பின்னர் வீடுகள் சினிமா கொட்டகைகள் மாதிரி ஆகிவிட்டன.

சினிமா பார்க்க என்று பிரத்தியோகமான முயற்சி ஏதும் எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. எனவே, சினிமாவை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டுமென சமூகத்தில் அக்கறை கொண்டவர்கள் குரல் கொடுக்கிறார்கள்.
ஆனால் அது மக்கள் முன் எடுபடாது. ஆபாசம், வன்முறை சமூகத்தின் சொத்து. அதுவே சமூகத்திற்கு பிடித்தமானது.

அதை முழுமையாக நுகரவே ஒவ்வொரு தலைமுறையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.அதில் வெற்றி என்பது ஆபாசம், வன்முறையின் பக்கந்தான். சென்ஸார் போர்டு ஆபாசம், வன்முறையை அதிகமாகக் கண்டு கொள்ளாது.ஏனெனில் சமூக மாறுதல்கள் மொழி, உடை, மாறி இருப்பது அதை நியாயப்படுத்திவிடும்.

தமிழ்ச் சினிமாவை தொடர்ந்து பார்த்து வரும்போது அதன் வளர்ச்சி தொழில்நுட்பம் மட்டுமின்றி ஆபாசம் வன்முறையிலும் அது அடைந்து இருக்கும் முன்னேற்றம் கவனிக்க வேண்டும்.

சினிமாவிற்கான சென்ஸார் என்பது மரத்தின் கிளைகள் சிலவற்றை வெட்டுவதுதான். சில நேரங்களில் தேவையான கிளைகள் வெட்டப்படும். பல நேரங்களில் தேவையில்லாத கிளைகள் வெட்டி எறியப்படுவது உண்டு.
சென்ஸார் மீது பெரிய குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் வருவதில்லை.

ஏனெனில் அது சமூகத்தில் இருந்தே வரும் ஆண்கள் மூலமாகவே பார்க்கப்படுகிறது. தற்போது சினிமா ஆண்களே சென்ஸார் போர்டில் அதிகமாக இடம்பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.எனவே அவர்கள் தங்கள் தொழில் சார்ந்து- அதன் போக்குச் சார்ந்துதான் இருப்பார்கள். மேலும் அது தொழில். தொழிலுக்கு விரோதமாக யாரும் படம் எடுப்பதில்லை.சென்ஸார்க்கு வந்து படம் மாட்டிக் கொள்ளும் விதமாக யாரும் படம் எடுப்பதில்லை. ஆனால் சென்ஸாரில் படத்தை மாட்டிவிட ஆள்கள் எப்போதும் இருப்பார்கள்.

பாரதிராஜாவின் வேதம் புதிது- என்ற படம் சென்ஸார்க்கு வந்த போது- நான் சென்ஸாரில் இருந்தேன். படம் பார்க்கும் குழுவிலும் இருந்தேன்.
படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் சென்ஸார் அதிகாரி, வேதம் புதிது-படத்திற்கு சென்ஸார் சான்றிதழ் கொடுக்கக் கூடாது என்று இந்திய ஜனாதிபதி, பிரதம மந்திரி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி, சென்ஸார் போர்டுக்கு எல்லாம் கடிதம் வந்து உள்ளது. நான் படிக்கிறேன் என்றார்.

"சென்ஸார் போர்டுக்கும், சினிமா படத்திற்கும்தான் சம்பந்தம்.
படம் சென்ஸார் சான்றிதழ் பெற தகுதி வாய்ந்ததா என்பதை படத்தை வைத்துக் கொண்டுதான் நாம் பார்க்கப் போகிறோம். பிறர் கடிதங்கள் நமக்குத் தேவை இல்லை. அதாவது அவற்றைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்றேன்.வேதம் புதிது சென்ஸாருக்காகக் காட்டப்பட்டது. சான்றிதழ் பெற்றது.

1983ஆம் ஆண்டிலிருந்து பத்தாண்டுகள் சென்ஸார் போர்டில் இருந்தேன்.
நிறைய சினிமா பார்த்தேன். பெரும்பாலும் சிக்கல் ஏற்பட்டது இல்லை.
ஒரே ஒரு கிராமத்தில்தான் பிரச்சனைகள் நீதிமன்றம் சென்றது. முதலமைச்சர் பார்த்தாரா என்று கேள்வி. படத்தில் சென்ஸார் வெட்ட சொன்ன காட்சி இல்லாமல்தான் திரைக்கு வந்தது.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article I, Article II,Article III,Article IV ,Article V


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...