???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காங்கிரசுக்காக ஜெ. காத்திருந்தாரா - மு.க.

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   08 , 2009  09:58:04 IST

அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி வருமென்று ஜெயலலிதா நேற்று வரை எதிர்பார்த்துக் காத்திருந்தாரா? தற்போது அவர்கள் வரவில்லை என்பது உறுதியானவுடன், தான் காங்கிரசை அழைக்கவில்லை என மறுக்கிறாரா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெயலலிதா காங்கிரசுக்கு அழைப்பு விடுத்ததாக பத்திரிகைகள் எல்லாம் 20.2.2009 அன்று வெளியிட்ட செய்திக்கு 13 நாட்கள் கழித்து, காங்கிரசை அ.தி.மு.க. கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று ஜெயலலிதா மறுப்பு தெரிவித்திருக்கிறார் என்றால், தமிழ்நாட்டு மக்கள் தான் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிலே உள்ள அத்தனை பத்திரிகைகளுமா ஜெயலலிதாவின் பேச்சை தவறாக வெளியிட்டு விட்டன? தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பத்திரிகைகளும் காங்கிரசுக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்ததாக செய்தி வெளியிட்டு, அந்தச் செய்தி தவறாக இருந்தால் அந்தச் செய்திகள் வெளிவந்த மறுநாளே அல்லது அதற்கு அடுத்த நாளே ஜெயலலிதா ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை?

காங்கிரசுக்கு எதிராக அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர ஜெயலலிதாவுடன் இடதுசாரி கட்சிகள் பேசிய பின்னரும் - அந்த இடதுசாரிகளுக்கு எதிரான காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தது சரி தானா?

எதிர் அணியிலே இருப்பவர் வெற்றி பெற நான் ஆலோசனை கூறினேன் என்றால், அது தற்போது கூட்டணியிலே உள்ள நண்பர்களுக்கு துரோகம் விளைவிப்பது ஆகாதா?

தி.மு.க. அணியிலிருந்தும் வெளியே வர வேண்டும், தங்கள் அணிக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்றால், காங்கிரசின் கதி என்ன? அவர்கள் தனியாக நிற்க வேண்டுமென்பது ஜெயலலிதாவின் எண்ணமா?

ஜெயலலிதா தனது அறிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தி.மு.க. செயல்பட்ட சில நிகழ்ச்சிகளையெல்லாம் எடுத்துக் கூறி - எங்கள் அணியிலே 'சிண்டு' முடிய முயற்சி செய்திருக்கிறார். பாவம், இந்திரா காந்தி அம்மையார் கடற்கரை கூட்டத்திலே பேசும்போது, 'கருணாநிதி எங்கள் அணிக்கு எதிராக இருந்தாலும், ஆதரவாக இருந்தாலும் இரண்டு நிலையிலும் உறுதியாக இருப்பார்' என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதா தனது இரண்டாவது அறிக்கையில் 'நாட்டைச் சுரண்டி எடுப்பதில் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கிடையே ஒத்த கருத்து இருக்கிறது' என்று தி.மு.க.வையும் காங்கிரசையும் சாடியிருக்கிறார் என்றால், அந்தக் காங்கிரஸ் கட்சியின் மீது ஏன் திருமண விழாவில் திடீர் அக்கறை காட்டினார்?
காங்கிரஸ் கட்சிக்கும் ஜெயலலிதாவிற்கும் உள்ள நீண்ட கால நட்பைப் பற்றி நமக்குத் தெரியாதா?

1999ஆம் ஆண்டு நாடாளுமன்றப்பொதுத் தேர்தல் நடந்த போது அ.தி.மு.க.வும் காங்கிரசும் தோழமை கொண்டு போட்டியிட்ட போதே-விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதாவும், சோனியா காந்தியும் இணைந்து 4 மணி அளவில் பேசுவார்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அந்த 4 மணி கூட்டத்திற்கு சென்னையிலிருந்து ஜெயலலிதா மாலை 3.20 மணிக்கு கிளம்பினார். சோனியா இரண்டு மணி நேரம் மேடையிலே காத்திருந்தார். ஜெயலலிதாவிற்காக போடப்பட்டிருந்த நாற்காலியும் இரண்டு மணி நேரம் காலியாக கிடந்தது. அந்த அளவிற்கு அவமானப்படுத்தியது கூட காங்கிரஸ் கட்சியிடம் உள்ள நீண்ட கால நட்பின் அடிப்படையில்தானா என்பதை ஜெயலலிதா தான் கூற வேண்டும்.

* 'ராஜிவ்காந்தி மரணத்தால் ஏற்பட்ட அனுதாபத்தில் நாங்கள் வெற்றி பெறவில்லை, அவர் மரணமடையாதிருந்தாலும் நாங்கள் வெற்றியை பெற்றிருக்க முடியும்'

* 'சோனியாவின் உறவினர்கள் இத்தாலி நாட்டுக்காரர்கள், பேராசை பிடித்தவர்கள். சோனியா காந்தி பிரதமரின் மனைவியாக இருந்து இந்த நாட்டை வேட்டையாடியிருக்கிறார். சூறையாடியிருக்கிறார். எவ்வளவோ கொள்ளை லாபம் அடித்திருக்கிறார்'

* 'சோனியாகாந்தி என்ற அரசியல் வியாபாரியின் கைகளில் இந்தியா என்ற மாபெரும் நாடு சிக்கி விடக் கூடாது'

* 'செயல்படாத பிரதமர் நரசிம்மராவ். அவருக்கும் எனக்கு தலைமுறை இடைவெளி'

* 'ராஜீவ்காந்தி கொலையில் மூப்பனாருக்கும் பங்கு உண்டு'

* 'நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசுவது எல்லாம் முழுமையான நான் சென்ஸ்' இப்படி காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி ஜெயலலிதா சிந்திய புண்மொழிகள் தான் பொன்மொழிகளா?

ஜெயலலிதா தன் விளக்க அறிக்கையை ஒரு திருக்குறளைக் குறிப்பிட்டு முடித்திருக்கிறார். ஒருவேளை ஜெயலலிதாவிற்காக அறிக்கை எழுதியவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு, அந்தத் திருக்குறளை அதிலே இணைத்திருக்கிறார்களோ என்னவோ!

'நாடொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்'

இந்தத் திருக்குறள் 1995-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, கொடைக்கானல் 'ப்ளசண்ட் ஸ்டே' ஓட்டலுக்கு அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டதையொட்டிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் ஏப்ரல் 10ஆம் தேதியன்று வழங்கிய தீர்ப்பின் முடிவில், "சட்டத்தின் நடைமுறையிலிருந்து சட்டத்தை உடைப்பதற்கு (அ.தி.மு.க.) அரசு விதி விலக்கு அளித்துள்ளது. இது கட்டிலின் அளவுக்குத் தக்கபடி மனிதனின் உடல் அளவை வெட்டுவது போன்றதாகும். இந்த வழக்கில் வள்ளுவர் சொன்ன அறிவு செறிந்த கருத்தை அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

"நாடொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்''. இவ்வாறு அ.தி.மு.க. ஆட்சிக்காகவும், குறிப்பாக ஜெயலலிதாவுக்காகவும் உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பிலே உள்ள இந்தத் திருக்குறளை மறக்க முடியுமா? எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...