???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காந்தி கண்ணதாசனுக்கு கருணாநிதி கண்டனம்

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   19 , 2009  16:12:43 IST

'கண்ணதாசன் நூலினை நாட்டுடைமையாக்கியது குறித்து இப்படி நீ நடந்து கொண்ட முறையைக் கண்டு சலித்துப் போய்விட்டேன்' என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து எழுதியுள்ள கடிதத்தில்,'
காந்தியின் பெயரையும் வைத்துக் கொண்டு என்னுடைய நண்பன் கண்ணதாசன் பெயரையும் வைத்துக் கொண்டு ஏடுகளில் இப்படியொரு அறிக்கை விடுவாய் என்று நான் கருதவில்லை. கண்ணதாசன் நூல்களை நாட்டுடைமையாக்குவது என்று அரசாங்கம் அறிவித்தது அந்தக் கவிஞனை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் என் நண்பன்பால் கொண்ட அன்பின் காரணமாக செய்யப்பட்டது.

நேற்று அரசு அறிக்கையிலே குறிப்பிட்டிருப்பதைப்போல அதனை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லாவிட்டால், அதனை அரசுக்குத் தெரிவிப்பதும் பலமுறை நடைபெற்ற நிகழ்ச்சிகள் தான். கண்ணதாசனை மதிக்கும் பலர் அந்த அறிவிப்புக்காக தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்தார்கள். குறிப்பாக வைரமுத்து, நிதிநிலை அறிக்கையைப் பார்த்தவுடன் கண்ணதாசன் பற்றிய அறிவிப்புக்காகவே எனது உதவியாளர் மூலம் தொலைபேசியில் நன்றி கூறினார்.

கண்ணதாசன் என்ற கவிஞனை மதிப்பதற்காக அரசின் சார்பில் செய்யப்பட்ட செயல் அது. அதற்காக இப்படியொரு அறிக்கை அந்தக் குடும்பத்தின் சார்பில் வெளிவரும் என்று எதிர்பார்க்கவில்லை. உன்னுடைய அறிக்கைக்கு முரசொலியில் சின்னக்குத்தூசி விரிவாக பதில் எழுதியுள்ளார். எழுத்தாளர்களுக்கும், பதிப்பகத்தாருக்கும் என் சொந்தப் பொறுப்பில் ஒரு கோடி ரூபாய் அளித்தபோது, அந்தச் சங்கத்திற்கு நீ தலைவராக இருக்கிறாய், அந்தச் செயல் முறையாக நடைபெறும் என்ற நம்பிக்கையின் பேரிலே தான் செய்தேன். அது முறையாக நடைபெறும் என்ற நம்பிக்கை இப்போதும் எனக்குண்டு. ஆனால் கண்ணதாசன் நூலினை நாட்டுடைமையாக்கியது குறித்து இப்படி நீ நடந்து கொண்ட முறையைக் கண்டு சலித்துப் போய்விட்டேன் ' என்று கூறியிருக்கிறார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...