???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கண்ணதாசன் மற்றும் சுந்தரராமசாமியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படுமா?

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   18 , 2009  23:12:19 IST

கண்ணதாசன் மற்றும் சுந்தரராமசாமியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படுமா?

தமிழக சட்டப்பேரவையில் செவ்வாயன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், தமிழறிஞர்கள் 28 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அந்த 28 பேரில் கவிஞர் கண்ணதாசன் மற்றும் சுந்தரராமசாமியின் பெயரும் இடம்பெற்றிருந்தது.கண்ணதாசன் மற்றும் சுந்தரராமசாமியின் நூல்களை நாட்டுடைமையாக்கியதற்கு கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன், சுந்தர ராமசாமியின் மகன் கண்ணன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காலச்சுவடு பதிப்பக பதிப்பாளரும் சுந்தர ராமசாமியின் மகனுமான கண்ணன் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், 'எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாக தமிழக அரசு ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை‌யி‌ல் அறிவித்துள்ளது. சுந்தர ராமசாமியின் படைப்புகளின் காப்புரிமையை அரசு பெறுவது பற்றி அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெறாமல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அனுமதி பெறாமல் அரசு அறிவிப்பது சட்ட விரோதமானது. சுந்தர ராமசாமியின் படைப்பு வெளியிடும் உரிமை தற்போது காலச்சுவடு பதிப்பகத்திற்கு மட்டுமே உள்ளது.

சட்டவிரோதமான அரசு அறிவிப்பின் அடிப்படையில் அவர் படைப்புகள் வெளியிட்டு காப்புரிமை சட்டத்தை மீற வேண்டாமென தமிழ் பதிப்பாளர்களை காலச்சுவடு பதிப்பகம் கேட்டுக்கொள்கிறது.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழுக்கு பங்களித்து வந்த சுந்தர ராமசாமியை எந்த கட்டத்திலும் அங்கீகரிக்காத தமிழக அரசு இப்போது அவர் மறைந்து மூன்று ஆண்டுகளிலேயே அவசரமாக நாட்டுடைமையாக்க அனுமதி பெறாமல் அறிவித்திருப்பது அரசின் உள்நோக்கம் பற்றிய சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது.

காலச்சுவடு இதழுக்கு நூலகத்தில் தடை விதித்திருக்கும் தமிழக அரசு சுந்தர ராமசாமியின் காப்புரிமையை அபகரித்து காலச்சுவடு பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நோக்கத்துடனேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு,' தமிழறிஞர்களின் வாரிசுதாரர்கள் விரும்பினால் மட்டுமே, அவர்கள் எழுதிய நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்' என்ற விளக்கத்தை அளித்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...