???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஈழமே தீர்வு - தமிழகத்தில் 68%பேர் கருத்து

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   07 , 2009  10:46:19 IST

சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள மக்கள் ஆய்வகம் அமைப்பின் கள ஆய்வு முடிவுகள் வெள்ளியன்று வெளியிடப்பட்டன. லயோலா சார்ந்த சென்னை மறைப்பணியின் இயக்குநர் விக்டர் வெளியிட, மானுடவியல் ஆய்வாளர் ஜோ. அருண் பெற்றுக்கொண்டார். அய்வை மேற்கொண்ட பேராசிரியர் ராஜநயகம் முடிவிகள் பற்றி செய்தியாளர்களிடம் விளக்கினார். ஆய்வு முடிவு விவரம்:

இலங்கையில் உடனடித் தீர்வாக, உடனடியாகப் போர்நிறுத்தம் செய்யவேண்டுமென 90 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். தமிழீழமே நிரந்தரத் தீர்வு என 68 விழுக்காட்டினரும் ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர் பகுதிக்கு சுயாட்சி என 21 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர்.

இலங்கை செய்திகளைக் காணும்போது, மத்திய, மாநில அரசுகளின் மீது கோபம் வருவதாக 44.5 விழுக்காட்டினரும் ரஜபக்ச மீது கோபம் என 25.5 விழுக்காட்டினரும் பன்னட்டுச் சமூகத்தின் மீது கோபம் என 12 விழுக்காட்டினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அமைதிப்பேச்சு நடத்தினால், விடுதலைப்புலிகள் உட்பட அனைத்து அமைப்புகளுடனும் பேச்சு நடத்தவேண்டுமென பாதிக்கும் மேற்பட்டவர்கள் கூறியுள்ளனர். விடுதலைப்புலிகளுடன் மட்டும்தான் என 27 விழுக்கட்டினரும் அவர்களைத் தவிர்த்த மற்ற அமைப்புகளுடன் பேச்சு நடத்தலாம் என 12 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...