???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'காங்.,திமுகவுக்கு தேர்தலில் பாதிப்பு'

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   07 , 2009  10:45:24 IST

நாடாளுமன்றத் தேர்தல்வரையில் இலங்கைப் பிரச்னை இப்படியே நீடிக்குமானால், காங்கிரசுக்கு தேர்தலில் பெரும் பாதிப்பு இருக்கும் என சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள மக்கள் ஆய்வகத்தின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

காங்கிரசுக்கு 39 விழுக்காடு பாதிப்பும் மத்திய அரசில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் 24.5 விழுக்காடு பாதிப்பும் ஆளும் கட்சிக்கு 21 விழுக்காடு பாதிப்பும் இருக்கும் என ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

அட்சியைத் தக்கவைத்துக்கொள்ள காங்கிரசைப் பகைத்துக்கொள்ளாமல் திமுக அனுசரித்துப் போவதாக 70.5 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். மாநில அரசால் என்ன முடியுமோ அந்த அளவுக்கு செயல்படுவதாக 22 விழுக்காட்டினர் கருத்து கூறியுள்ளனர்.

இலங்கை பிரச்னையில் தமிழக கட்சிகளுக்கு உண்மையான அக்கறை இல்லை என்று 52 விழுக்காட்டினர் கருத்துக் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு கட்சியும் இதில் தனித்துச் செயல்படமல் முதலமைச்சர் தலைமையில் தனித்துச் செயல்படவேண்டும் என்று 86 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதே சமயம், மூத்த தலைவர் என்ற முறையில் திமுக தலைவர் கருணாநிதி, ஆட்சி பயத்தை விட்டுவிட்டு துணிச்சலாக செயல்படவேண்டும் என்று 71 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

ஒருவேளை, தமிழர் பிரச்னையை முன்னிட்டு, திமுக ஆட்சியை இழக்க நேரிட்டால், அடுத்துவரும் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வரும் என 58.5 விழுக்கடு அளவினர் கூறியுள்ளனர்.

முதலில் தினந்தந்தி, 3வது தினகரன்!

இலங்கைப் பிரச்னையில் உண்மையான கள நிலவரத்தைக் கூறும் செய்தித்தாளாக, தினத்தந்தி முதலிடம்(23) பிடித்துள்ளது. இரண்டவது இடத்தில் தமிழோசை நாளேடு(21), மூன்றாவது இடத்தில் தினகரன்(20.5) ஆகியன வந்துள்ளன.

மத்திய அரசு மீது கடும் அதிருப்தி

இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக மக்கள் ஆய்வகக் கள ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு முடிவின்படி, இலங்கை அரசு தொடுத்துள்ள போரை மத்திய அரசு ஆதரிக்கிறது என 86 விழுக்காட்டினர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு போர்த் தளவாடங்கள், பயிற்சி வழங்குவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என 49 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். இந்திராவைக் கொன்ற சீக்கியரை மன்னித்துவிடுவது போல, விடுதலைப்புலிகளை சோனியா குடும்பத்தினர் மன்னித்துவிடவேண்டும் என்று 66 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...