???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழக கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: விஜயகாந்த்

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   05 , 2009  09:48:24 IST

'ஒன்றரை கோடி சிங்களர்களுக்கு தனி நாடு உள்ளது என்ற காரணத்தால் உலக நாடுகளிடமிருந்து ஆயுத உதவியை எளிதில் பெற முடிகிறது. ஆனால் ஆறரை கோடி தமிழர்களைக் கொண்ட தமிழகம், இந்திய அரசைத்தான் நம்பவேண்டியுள்ளது.இலங்கையில் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்தாத மத்திய அரசைக் கண்டித்து, தமிழக அரசியல் கட்சிகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

புதன்கிழமை விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'இலங்கையில் சிங்கள அரசின் முப்படைகளும் தமிழர் பகுதிகளைத் தாக்கியதால், முல்லைத் தீவின் ஒரு சிறிய பகுதியில் சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் சிக்கியுள்ளனர்.

பாதுகாப்பு மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியிலும் ராணுவம் குண்டுமழை பொழிந்து வருவதால் உயிர் சேதங்களும், உடைமை அழிவுகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.

மேலும் பாதுகாப்பு மண்டலத்துக்குள் செல்லும் தமிழ் இளைஞர்களை ராணுவத்தினர் கொன்று விடுகின்றனர். பெண்களை மானபங்கப்படுத்தி அழித்துவிடுகின்றனர். சிங்கள அரசின் பாதுகாப்பு மண்டலங்கள் தமிழர்களின் மரணப் படுகுழிகள் என்பதை அறிந்த மக்கள், விடுதலைப் புலிகளின் பகுதிகளில் இருந்து வெளியேறத் தயாராக இல்லை.

ஒன்றரை கோடி சிங்களர்களுக்கு தனி நாடு உள்ளது என்ற காரணத்தால் உலக நாடுகளிடமிருந்து ஆயுத உதவியை எளிதில் பெற முடிகிறது. ஆனால் ஆறரை கோடி தமிழர்களைக் கொண்ட தமிழகம், இந்திய அரசைத்தான் நம்பவேண்டியுள்ளது. எனவே இந்திய அரசு, ஐ.நா. மூலமோ, நேரடியாக தலையிட்டோ இனப் படுகொலையை தடுக்க வேண்டும்.

முதல்வர் கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்னையில் உருப்படியான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.

இலங்கைப் பிரச்னை பற்றி தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்ட குரலைத்தான் எழுப்பி வருகின்றனர். அப்படியிருக்க இலங்கைத் தமிழர் பிரச்னையை விளக்கிக் கூட்டங்கள் நடத்த வேண்டும், மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று திமுக அறிவித்துள்ளது மக்களை திசைதிருப்பும் வேலை. எத்தனைக் காலம்தான் தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றப்போகிறார்?

இந்திய அரசு தமிழினப் படுகொலையைத் தடுக்கத் தவறுமானால், தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசில் பங்குபெறுவதில் அர்த்தமில்லை. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் போட்டியிடப்போவதில்லை என்று முடிவு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...