???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜெயலலிதா வீழ்ச்சியை தடுத்த ஆர்.வி

Posted : புதன்கிழமை,   ஜனவரி   28 , 2009  16:08:26 IST

ஆர்.வி - தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களில் நீண்ட ஆயுளுடன் (98 வயது) வாழ்ந்தவர் மட்டுமல்ல,தமிழக அரசியல் தலைவர்கள் யாரை காட்டிலும் மிக உயர்ந்த பொறுப்புகளை வகித்த பெருமை பெற்றவர்.
தமிழ் நாட்டை தொழில் வளத்தை நோக்கி திசை திருப்பிய மாமனிதர் அவர்.அவரது உடல் தமிழ் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு தமிழ் மக்களால் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

1957 ல் காமராஜ் அமைச்சரவை அமைத்த போது இடதுசாரி கம்யூனிஸ்ட் தலைவரான பி.ராமமூர்த்தி "உங்கள் அமைச்சரவையில் ஒரு தொழிலாளர் அமைச்சரை நியமியுங்கள்,அவர் தொழில் அமைச்சராகவும் இருக்கட்டும்,ஒரு தொழிலாளர் தலைவரை இந்த பதவிக்கு தேர்ந்தெடுங்கள்,உங்கள் கட்சியிலேயே ஆர்.வி இருக்கிறார்,என்று காமரஜரிடம் கோரினார்,காமராஜர் அதை ஏற்றார்.

தொழிற்சங்கவாதியாக உலகளவில் தொழிளாலர் பிரச்சனை அறிந்தவராக,சிம்சன் தொழிற்சங்க தலைவராக இருந்த ஆர்.வி,அப்போது எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்,அந்த பதவியை விட்டுவிட்டு காமராஜ் அழைப்பை ஏற்று தொழில் அமைச்சர் ஆனார்.

காமராஜ் எண்ணங்களை செயல்படுத்தியவர் இவர்.இன்று தமிழகத்துக்கு மின்சாரம் வழங்கும் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைவதற்கு முழு காரணகர்த்தா இவரே.

அப்போதெல்லாம் கோட்டை அறையில் இவரது மேசையில் நெய்வேலி நிலக்கரி துண்டு"டேபிள் வெயிட்டாக"வைக்க பட்டிருக்கும்.டெல்லியுடன் போராடி நெய்வேலி லிக்னேட் கார்பரேஷன் வரவழைத்தார்.ஆவடி பீரங்கி தொழிற்சாலை,பி.எச்.ஈ.எல் போன்ற பல தொழிற்சாலைகள் வர இவரே காரணம்.

அதோடு தமிழ் நாட்டு முதலாளிகளை புதிய தொழில்கள் தொடங்கவும்,எதிர்காலத்தை மனதில் வைத்து தொழில்களை விரிவு படுத்தவும்,கட்டாயபடுத்தினார்,சில முதலாளிகளை டெல்லிக்கு இழுத்து சென்று புது தொழில்களுக்கான லைசன்ஸை பெற்று தந்தார்,
1967 ல் தி.மு.க ஏற்பட்டு,பல மாதங்களுக்கு ஆர்.வி யும் காமராஜரும் அடிக்கல் நாட்டிய பல தொழிற்சாலைகளுக்கு திறப்பு விழாக்கள் நடந்தன!அந்த விழாவுக்கு எல்லாம் ஆர்.வி கட்டாயம் இருக்க வேண்டும் என்று அண்ணா உத்தரவிட்டார்,அப்போது மேல்சபையில் எதிர் கட்சி தலைவராக இருந்தவர் ஆர்.வி.

ஒரு திறப்பு விழாவில் தொழில் அமைச்சர் நெடுஞ்செழியனும்,ஆர்.வி.யும் கலந்து கொண்டனர்,பிரபல முதலாளிகள் கூட்டம் அது. நெடுஞ்செழியன் பேசிய தமிழும் அவரது மானரிசமும் கண்டு முதலாளிகள் குபீர் என்று சிரித்தனர்,ஆர்.வி.எழுந்து "தமிழில் இது அவரது பாணி . உற்று கவனியுங்கள், நல்ல கருத்துக்களும்,உங்களுக்கு பயன் தரும் ஆலோசனைகளும் உள்ளன" என்றார்!

காமராஜ் அகில இந்திய கட்சியின் தலைவராக சோவியத் நாட்டுக்கு சுற்றுபயணம் சென்ற போது இவரும் கூட சென்றார்,சோஷலிச நாடுகளில் மக்கள் தலைவர் என்று இவர் எழுதிய கட்டுரை அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

காமராஜ் மறைவுக்கு பிறகு இந்தி ஆதரவாளர் ஆனார்.

என்ன காரணத்தினாலோ இவருக்கும் கலைஞருக்கும் ஒத்துபோனதில்லை,தமிழக காங்ரஸ் தலைவர் மூப்பனாருடனும் இவருக்கு கருத்து வேறுபாடு இருந்தது .இவர் எம்.ஜி ஆரை ஆதரித்தார்,எம்.ஜி ஆருக்கும் இந்திராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது அதை மாற்றி மீண்டும் உறவு ஏற்பட வைத்தார்.இவர் ராஜ்ய சபை தலைவராக(துணை ஜனாதிபதியாக)இருந்த போது எம்.ஜி ஆர் மீது அதிருப்தி அடைந்த ஜெயலலிதா எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்,அவரது ராஜினாமாவை ஏற்காது,அந்த கடிதத்தை எம்.ஜி ஆருக்கு திருப்பி அனுப்பினார் ஆர்.வி.

அதேபோல ராமச்சந்திரா மெடிக்கல் வளாகத் திறப்பு விழாவுக்கு முன்பு "ஜெ"யை கட்சியிலிருந்து விலக்க எம்.ஜி.ஆர். முனைப்புடன் இருந்ததாக கூறுவது உண்டு,ஜனாதிபதி ஆர்.வி.தலைமையில் அந்த விழா.'விழா சமயத்தில் எதற்கு ஒரு பிரச்சனை என்று ஆர்.வி.தடுத்ததாக கூறுவது உண்டு,எம்.ஜி.ஆர். மறைவு உடனே நிகழ்ந்து விட்டதால் 'ஜெ'வீழ்ச்சி தடுக்கபட்டது என்பார்கள்.

பட்டுகோட்டையில் பிறந்து டெல்லி செங்கோட்டையை ஆண்ட தமிழனை போற்றுவோம்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...