???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரைக்கம்பத்தில் தொப்புள்கொடி - புத்தக வாசனை

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   16 , 2009  23:58:48 IST

ரத்தம் கசியும் அட்டையைத் தாங்கி வந்திருக்கிறது அறிவுமதியின் 'தை' பக்கத்துக்கு பக்கம் கண்ணீர் + குருதி நிரப்பி எழுதப்பட்ட கவிதைகள் மனதை என்னமோ செய்கிறது.

இந்த நூலுக்கு மதிப்புரை எழுதுவதை விட சில கவிதை வரிகளை இங்கே தருவது சரியாக இருக்குமென்று நினைக்கிறேன்.


***** ***** *****

பல்வேறு அடுக்குநிலைகளில் நின்று இயங்கிக்
கொண்டிருந்தாலும் ...
தொப்புள்கொடி வலி வாங்கி
ஒரே தளத்தில் ஒருசேர நின்று
அழ...
அனைவரும் ஒன்றிணைந்திருப்பது
நெகிழ்வூட்டுகிறது.
நம்பிக்கையும்தான் .


- அறிவுமதி

***** ***** *****

கனிமொழி

அங்கு ஓர் இனம் மெல்ல அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது .ஆனால் அதனை மறந்து அதனைத் தாண்டி ஏதேதோ தேடல்களில் நம்மைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். நம்முடையை சகோதர்களும் , சகோதரிகளும் அங்கு வாழும் வகையற்று அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்தப் பிள்ளைகளுக்கு எதிர்காலம் என்ன என்பதே தெரியாத நிலை உருவாகிவிட்டது. இந்தப் படுகொலைகளை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் . தயவு செய்து வீறு கொண்டு எழுங்கள். நம்முடைய சகோதர , சகோதரிகளுக்காக , தொப்புள்கொடி உறவுகளுக்காக குரல் கொடுங்கள்.

***** ***** *****

இன்னுயிரும் வழங்கிடுவோம் - கலைஞர்

இலங்கைப் போரிலே செத்து மடியும் தமிழரெல்லாம்
இந்தியா கை கொடுக்கும் என்று நம்பித்தான்
இமை மூடுகின்றார்

உதவிக்கு நமை நாடுகின்ற அவர் தன் இல்லங்களில்
உதிர்ந்து விட்ட இலைகளுக்குப் பின் இருக்கின்ற அரும்புகளைக்
கருகாமல் காய்ந்திடாமல் காத்து வளர்த்து காலத்
தருவாய் இருந்த தமிழினமே தரை மட்டமானது எனும்
வரலாறுக்கு இங்குள்ள தமிழர் வழித்தோன்றல்களாகி விடாமல்;
வளர்பிறைகள் தேய்பிறைகளாகி நிரந்த அமாவாசை
நிலைத்துவிடாமல் இடர் களைந்து

இன்றே இலங்கைத்தமிழர்தம் உயிர் காத்து
இனம் காத்தோம் எனும் பெருமூச்செறிந்திட
வெந்தணலில் கிடக்கின்ற ஈழத் தமிழருக்கு
இதயத்தை தந்திடுவோம் - தேவையெனில்
இன்னுயிரையும் வழங்கிடுவோம் !


***** ***** *****

'யாதும் ஊரே
யாவரும் கேளிர்' என்பது
எங்களைப் பொறுத்தவரை
உண்மையாகிவிட்டது
ஏனென்றால்
எங்களுக்கென்று
ஊரே இல்லை

- அப்துல் ரகுமான்

***** ***** *****

கண்களில்
எறும்புகள் மொய்த்தாலும்
கனவுகள்
செத்துப்போகாது

- கபிலன்

***** ***** *****

புதைந்து கிடக்கும் கோடானுகோடி
எலும்புக் கூடுகள் மீது
அமைதியாக
உறங்கி எழும்
நாம் யார்

- அழகுநிலா

***** ***** *****

5 வயதிருக்கும் அக்குழந்தைக்கு
என் கனவில் எப்போதும் அழுதபடி
யாசித்து நிற்கிறது என் வாசலில்
கையளவு உணவு வேண்டி
ஒரு மிடறு நீர் வேண்டி
உள்ளாடையோடு நிற்கும் அதன்
மாற்றுடை வேண்டி
முந்தையநாள் தன்னோடிருந்த
தன் தாயை வேண்டி
தான் அணைத்துக் கொண்டு உறங்கிய
அப் பொம்மையை வேண்டி
அவ்வீதியின் எல்லா வீடுகளிலும்
யாசித்து நிற்கிறாள்
அந்தச் சிறுமி

- இன்பா சுப்ரமணியன்

***** ***** *****

அனுராதபுரத்துக்கும் அப்பால்
பொன்னலருவாவைத் தலைநகராக்கித்
தென்னிலமெங்கும் தன்னிலமாக்கித்
தமிழால் தரணியாண்ட
சோழனும் நானே

எட்டுக்கோடியினத்தை
ஒற்றைக்கோடியினம்
கொன்று குவிக்கையில்
குரல் இழந்தவனும் நானே
தேசத்தின் எல்லைக்குள்
பாசத்தின் துடிப்புகளைப்
பதுக்கித் திரிபவனும் நானே


- மகுடேசுவரன்

***** ***** *****

தமிழீழ மண்ணில்
சுதந்திரமாய்
சுற்றித் திரிந்த காகிதத்தில்
கலைந்து போகாமல்
ஒளிர்ந்த வரிகள்

நீங்கள்
எம் மரணத்தை
ஒரு பெட்டியில்
அடைக்கப் பார்க்கிறீர்கள்
மீறிப் பிதுங்கி
சிரிக்கிறது உயிர்

- ராஜா சந்திரசேகர்

***** ***** *****

சடலமாவதற்கு முன்
சப்பிக்குடித்த பால்
சிசுவின் அதரங்களில்
அதுவும் உலரவில்லை

- 'அக்னி' தே.வால்ட்டர்

***** ***** *****

அவர்களே கொன்ற புத்தனை
புதைப்பதற்காகவோ கேட்கிறார்கள்
எங்கள் ஈழத்தை

- வீரத்திருமகன்

***** ***** *****

விடியற்காலைகள் விடிகின்றன
உங்களிடத்தில் பனித்துளியுடன்
எங்களிடத்தில் கண்ணீர்த் துளியுடனும்

- ஆ.முத்துராமலிங்கம்

***** ***** *****

- புத்தகத்தின் கடைசி பக்கத்திலிருக்கும் வரிகள் இதோ

மாவோ

நிலத்தை இழ
போராளிகளைப் பாதுகாத்துக் கொள்
நிலத்தை மீண்டும் மீட்டுக்
கொள்ளலாம்
நிலத்திற்காகப் போராளிகளை
இழந்தால்
இரண்டையும் நீ
இழந்து விடுவாய்


புத்தகத்தை வாங்குவதற்கு கீழ்கண்ட முகவரியை அணுகவும்.

அரைக்கம்பத்தில் தொப்புள் கொடி / தொகுப்பாசிரியர் / அறிவுமதி /முதல் ஈடு / தை 2009 . வெளியீடு / சாரல் , 189 .அபிபுல்லா சாலை , தியாகராயர் நகர் , சென்னை 600017.

விலை - ரூ.160


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...