???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எனக்கு ஆண்களை பிடிக்காது - சாரு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   11 , 2009  11:40:29 IST

"தமிழகத்தில் மிகவும் சர்சிக்கப்பட்ட விமர்சிக்கப்பட்ட நேசிக்கப்பட்ட எழுத்தாளர் சாருநிவேதிதா " என்ற அறிமுக உரையுடன் சாருவின் 10 புத்தகங்களை உயிர்மை பதிப்பக வெளியீட்டின் விழாவில் மனுஷ்யபுத்திரன் தொடங்கி வைத்தார்.

சாருவின் சிறுகதை தொகுப்பான " மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் " புத்தகத்தை வெளியிட்ட பத்திரிக்கையாளர் சுதேசமித்ரன் " வெளியீட்டிற்கு முன் அனுப்பப்பட்ட புத்தகம் நிர்வாணமாய் வந்திருந்தது - சாருவின் எழுத்தை போலவே " என்று கலகலப்புடன் தொடங்கினார். " சாருவின் " முள்" என்ற கதை சிறப்பான கதை . அதை அவரிடம் சொல்லும்போது அதுதான் அவர் எழுதிய முதல்கதை என்றதும் ஆச்சர்யமாக இருந்தது " என்றவர் . தன்னுடைய ஆரண்யம் இதழிற்காக சாருவை சந்தித்து கதை கேட்டபோது , எளிதில் நெருங்க முடியாத மனிதராக இருந்ததாக சொல்லிவிட்டு சாருவின் சமீபத்திய கதைகள் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் பழைய முனியாண்டியை காணவில்லை என்ற குற்றச்சாட்டுடன் முடித்துக் கொண்டார்.

"ஒரு விழாவில் நான் பேசிவிட்டு அமர்ந்ததும் இதுவரை நா.முத்துசாமியின் கதாகாலட்சேபம் கேட்டோம் என்று அடுத்து வந்த சாரு உரையை தொடங்கினார் " என்று சிரிப்புடன் கூத்துப்பட்டறை நா.முத்துசாமி குறிப்பிட்டார். ஏற்புரையில் இதற்கு பதிலளித்த சாரு தன்னுடைய எழுத்து வளமைப்பட்டதற்கு அவரின் " நீர்மை " கதையே காரணம் என்றார். உலகின் சிறந்த சிறுகதைகள் 20 ஐ தேர்ந்தெடுத்தால் " நீர்மை" கண்டிப்பாக அதில் இடம் பிடிக்கும் என்றவர் அவருடைய மகனுக்கும் தனக்குமுள்ள நெருக்கத்தை கூறிவிட்டு " நான் விழாவிற்கு அவரை அழைக்கவில்லை உங்களைத்தான் அழைத்திருக்கிறேன், புரிந்து கொள்ளுங்கள், விழாவில் பேசியதெல்லாம் அந்தந்த நேர சின்ன கோபங்கள் மனதில் வைக்க வேண்டாம் " என்று நெகிழ்ந்து நெகிழ வைத்தார்.

அந்த கால Superstar களை பற்றிய " தீராக்காதலி" புத்தகத்தை இந்திரா பார்த்தசாரதி வெளியிட்டு " தியாகராஜ பாகவதர் , எஸ்.ஜி.கிட்டப்பா , KB சுந்தரம்பாள் போன்றவர்கள் இன்றைய ஸ்டார்களை போல ஊடகங்கள் எழுப்பிய மாயை அல்ல: உண்மையான Superstar கள் என்று சவுக்கை சுழட்டியவர் "எஸ் ஜி கிட்டப்பா KBS கிடையேயான ஒருதலைக் காதல் , தியாகராஜ பாகவதரின் ஆளுமை போன்றவற்றுடன் பழைய நினைவுகளில் மூழ்கியவர் சாரு இன்னும் விரிவாகவே எழுதியிருக்கலாம் என்றார்." எந்த விஷயத்திலும் யாருடைய சார்பு நிலையையும் எடுக்காமல் பருந்து பார்வையுடன் அணுகுவது சாருவின் பலம் " என்று புகழாரத்துடன் அமர்ந்தார் இ.பா.

இயக்குனர்கள் அமீர் மற்றும் "சுப்பிரமணியபுரம் சசிக்குமார் இருவரும் தங்களுடைய பட விமர்சனம் மூலம் சாருவின் அறிமுகம் கிடைத்ததை தங்களுக்கேயுரிய ஸ்டைலில் கூறிவிட்டு புத்தகத்தை படிக்கவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொண்டு விலகினர்.

"மூடுபனிச்சாலை" என்ற கட்டுரை தொகுதியை தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டு , ' தன்னந்தனியான காட்டுப் பயணத்தின் முன்னே சாலைகள் இரண்டாக பிரிகிறது. ஒரு பாதை அதிகமானோர் பயணப்பட்ட பழக்கப்பட்ட சாலை. மற்றொன்று யாரும் பயணிக்காத புதர்களடர்ந்த ஒன்று. சாரு பயணிப்பது இரண்டாவது பாதையில் , படிப்பவர்களுக்கு அதனாலயே தனி சுகானுபவத்தை கொடுக்கிறது " என்று பாரட்டியவர் ப்யூகோ மற்றும் லக்கன் போன்ற மாமேதைகளின் வரிசையில் சாருவை பாரட்டினார்.

அரவாணிகள் பற்றிய எழுத்தில் " சிலர் பெண்களைவிட அழகாகவே இருந்தனர் " என்று குறிப்பிட்டிருக்கிறார் . ஏன் ஆண்களைவிட அழகானவர்களாக தோன்றவில்லையா ? என்ற தமிழச்சி தங்கபாண்டியனின் பெண்ணியவாத கேள்விக்கு சாருவின் பதில் " I hate men ".

சாருவின் சினிமா விமர்சனத்தில் தென்படும் பெருங்கோபத்தை குறைத்துக்கொள்ளும்படி உரிமையோடு கூறிய மதன் " சினிமா சினிமா " புத்தகத்தை வெளியிட்டார். பாலு மகேந்திராவின் ஜீலி கணபதி மற்றும் கமலஹாசன் மீதான விமர்சனங்களை குறிப்பிட்டு , அவை பொதுமைபடுத்தப்படும் போது character association ஆகிவிடும் ஆபத்தை நுட்பத்துடன் குறிப்பிட்டார்." வான்கா தன்னுடைய வாழ்நாளில் ஒரே ஒரு ஒவியத்தை மட்டுமே விற்றுள்ளார். அந்த ஒரு படமும் ஒரு வேளை ரொட்டிக்காக , ரொட்டி கடைக்காரனின் கூரை ஓட்டையை அடைப்பதற்காக விற்கப்பட்டது என்ற கேள்வி - பதில் தகவலுடன் எழுத்தாளர்களின் புத்தக விற்பனையை ஒப்பிட்டார்.

மதனின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக பிரபஞ்சன் " இது போன்ற மாற்று குரல்களும் சமூகத்தில் இருக்க வேண்டும் , சுப்ரமணிய ராஜூ என்கிற நண்பரை இது போன்ற ஒரு விமர்சனத்தினால் சந்தித்ததை நினைவு கூர்ந்தார். " காமரூப கதைகள் " என்ற சாருவின் புத்தகத்தை வெளியிட நான் பொருத்தமானவன் . எனக்கும் காமம் பிடிக்கும் . நான் வெளியே சொல்கிறேன். நீங்கள் சொல்லமாட்டீர்கள் " என்றார். கூட்டத்தினரிடம் " மிகவும் அதிகமாக விமர்சிக்கப்படும் சாரு முட்கள் பொருந்திய ரோஜாவை கையிலேந்தியிருக்கும் ஈரமான மனிதர் " என்றார்.

சாருவின் எழுத்துக்களை போலவே அவரின் ஏற்புரையும் வெளிப்படையானதாக , கூரிய கத்தியாக அங்கதத்துடன் இருந்தது. தமிழ் எழுத்தாளர்களை தமிழனக்கு தெரிவதில்லை. மலையாளத்தில் கலாகௌமுதி , மாத்யமம் போன்ற தன் கட்டுரைகளை தொடர்ச்சியாக வாசிக்கும் மலையாளிகள் தனக்கு தரும் மரியாதையை சொந்த ஊரில் தமிழன் தருவதில்லை என்று ஆதங்கப்பட்டார். சாகித்ய அகாதமி விருதுகளை நோக்கி சாட்டையை சுழற்றியவர் அதற்காக பரிசளிக்கப்படும் 10,000 ரூபாய் ஸ்டார் ஹோட்டல்களில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட காணாது என்ற கடுமையான விமர்சனத்துடன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களை பற்றியும் கொதிப்புடன் விமர்சித்தார்.

7.1.09 அன்று மாலை புக் பாயிண்டில் நடைபெற்ற இவ்விழா சிவகாமி IAS எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பல பிரபலங்களுடன் நிரம்பிவழிந்த கூட்டம் "தேநீர் " விழாவுடம் முடிந்தது.

(" தேநீர் "அடைப்புகுறிக்குள் சாரு சொன்னது புரியுதா?)


- கௌதமன்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...