???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழர்களைவிட போர்வெறியர்கள் முக்கியமா?பிரதமருக்கு ராமதாசு கடிதம்

Posted : சனிக்கிழமை,   ஜனவரி   03 , 2009  23:45:22 IST

தில்லியில் உள்ள திட்டம் தீட்டிச் செயல்படும் அதிகாரிகளுக்கும் அக்கறையற்ற
கொள்கை வகுப்பாளர்களுக்கும், சட்டத்துக்குக் கட்டுப்பட்ட கோடிக்கணக்கான தமிழ் மக்களைவிடவும்,கொழும்பில் உள்ள போர் வெறியர்களும் இனப்படுகொலை வெறியர்களும்தான் மிகவும் முக்கியமானவர்களா? என்பதை பிரதமர் மன்மோகன் தெரிவிக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் தலைவர் ராமதாசு கேட்டுள்ளார்.

பிரதமர் மன்மோகனுக்கு அவர் இன்று அனுப்பியுள்ள மூன்று பக்கக் கடிதத்திலேயே இவ்வாறு கேட்டுள்ளார்.

மத்திய கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள பாமகவின் தலைவர் இப்படியான கருத்துக்களை வெளியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கு ராமதாசு எழுதியுள்ள கடிதத்தின் முழு விவரம்:

மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு,
தமிழ்நாட்டின் வாழ்த்துகள்.
இந்த மடல், இலங்கையில் இன மோதல் இதுவரை கண்டிராத அளவுக்குத் தீவிரமடைந்திருப்பது பற்றியதும்,தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள், 2008 டிசம்பர்
4ஆம் தேதி தில்லியில் உங்களைச் சந்தித்துப் பேசியது தொடர்பானதும் ஆகும்.

ஒரு மாதம் கடந்துவிட்டது.இந்திய அரசு நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு எதிராக
இலங்கையின் ஆயுதப் படைகள் நடத்திவரும் கொடுமைகளையும், அதன் விளைவாக தமிழக முதல்வர் வேதனையுடன் சுட்டிக் காட்டியுள்ளபடி "ஒவ்வொரு நொடியும் ஒரு தமிழன் உயிர் இழப்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது".
தமிழகச் சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கையில் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த 15 இலட்சம் மக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இடர் நீக்க உதவிப்
பொருள்களை வழங்கும் பன்னாட்டு நன்கொடையாளர்களின் கருணையை நம்பித் தான் வாழ்கிறார்கள் என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் முயற்சிகளுக்கு இலங்கை அரசு
வெளிப்படையாகவே தடைகள் ஏற்படுத்தி வருகிறது. 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பும், வாழ்க்கை உறுதியும் தேடி தங்கள் தாயகத்தை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் 1
இலட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். மணிக்கு மணி நிலைமை மோசமடைந்து வருகிறது.

மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி வருவதாக இலங்கைக்கு எதிராகத் தொடர்ந்து குற்றம் சாற்றப்பட்டு வருகிறது. அகதிகளுக்கான ஐ.நா. ஆணையரகத்தின் ஆதரவில், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி
பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட பன்னாட்டு வல்லுநர் குழு இலங்கையில் தொடர்ந்து செயல்பட
மறுத்துவிட்டது. மனித உரிமை நிலைமையை மேம்படுத்த தெரிவிக்கப்பட்ட எந்தக் கருத்துரையையும் இலங்கை அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை என்பதெ அதற்குக் காரணம். தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நிகழும் மோசமான பகுதிகளில் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள இலங்கையில் மனித உரிமை
நிலவரம் மோசமடைந்து வருவது குறித்து ஏறக்குறைய அனைத்துப் பன்னாட்டு மனித உரிமைக் குழுக்களுமே
உலக அளவில் எச்சரிக்கைக் குரல் எழுப்பி வருகின்றன.

இனப்படுகொலையும் மக்களுக்கு எதிரான பிற கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கிற அல்லது அத்தகைய ஆபத்து ஏற்படக்கூடிய "உடனடி ஆபத்து' நிலையில் உள்ள 8 நாடுகளில் ஒன்றாக இலங்கையை, நியூயார்க்கில் இருந்து செயல்படும் இனப் படுகொலைத் தடுப்புத் திட்ட அமைப்பின் அறிக்கையில் சேர்த்திருப்பது, இலங்கைக்கு
எதிராக அண்மையில் வெளியாகியிருக்கும் கடும் கண்டனமாகும். "உடனடி ஆபத்து' நாடுகளின் பட்டியலில்,இப்@பாது இனப்படுகொலை மோதலை அனுபவித்துக் கொண்டிருக்கும் சூடானின் தார்பூர் பகுதி, காங்கோ
ஆகியவையும், ஆப்கானிஸ்தான், ஈராக், மியான்மார், பாகிஸ்தான், சோமாலியா, இலங்கை ஆகியவையும் உள்ளிட்ட 8 நாடுகள், பகுதிகள் உள்ளன. உடனடி ஆபத்துக்குரிய நாடுகளுக்கான அளவுகோல்கள் என
வல்லுநர்கள் தெரிவித்துள்ள 5 அளவுகோல்கள் ஒவ்வொன்றும் இந்த நாடுகளுக்குப் பொருந்துகின்றன.
இவற்றுள் இலங்கையைத் தவிர மற்ற நாடுகளும், பகுதிகளும் பல்வேறு வகையில் ஐ.நா.வின் கண்டனங்களுக்கும், தடைகளுக்கும் உள்ளாகி இருக்கின்றன. நிலைமை மோசமாக இருந்தபோதிலும்,
இலங்கை அரசு கவலைப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு செயல்படாமல் இருப்பதே இதற்குக்
காரணம்.

கடலுக்கு அப்பால், தங்கள் சகோதரர்களும், சகோதரிகளும் வேட்டையாடப்படுவதை, ஏதும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருக்க @வண்டிய நிலையில் உள்ள 6 கோகாடிக்கும் மேற்பட்ட இந்தியத் தமிழர்களின்
கௌரவத்தையும் சுய மரியாதையையும், கொழும்பில் உள்ள அடக்குமுறை அரசின் முகவர்களுடன் கூட்டாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தில்லியில் உள்ள தப்பெண்ணம் படைத்த சில அதிகாரிகள் இனியும் காலில் போட்டு நசுக்க முடியாது.
தில்லியிடம் "சலுகைகளுக்காக' எப்போதும் கெஞ்சிப் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நிலைக்கு அவர்களைக் குறுக்கிவிட முடியாது.
இரண்டு நிகழ்வுகள் தெளிவாகத் தெரிகின்றன. டிசம்பர் 4ஆம் தேதி பிரதமரைத் தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசிய 2,3 நாட்களுக்குள், இலங்கையின்
போர்ப்படைத் தளபதி சரத் பொன்சேகா திமிர்த்தனமாகப் பேசினார்: "போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை
ஒரு போதும் இந்திய அரசு வலியுறுத்தாது. தமிழ்நாட்டின் அரசியல் "கோமாளிகள்' கூறுவதையும் அது
செவிமடுக்காது'' என்றார். முன்னதாக, நடுவண் அரசு செயல்பட வலியுறுத்தி கடந்த அக்டோபரில் தமிழகச்
சட்டப் பேரவை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய உடனே, முன்னாள் தூதர்கள் என்.என்.ஜா,
கே.பி.எஸ்.மேனன், அனைத்திந்தியக் காங்கிரசின் வெளியுறவுப் பிரிவு இணைச் செயலர் இராவ்னி தாக்கூர்
ஆகியோர் அடங்கிய உயர் நிலைக் குழு ஒன்று தில்லியில் இருந்து கொழும்புக்குச் சென்றது. இந்தியாவின்
நடுவண் அரசு, தமிழக அரசியல்வாதிகள் கூறுவதை செவிமடுக்காது என்றும், போர்ப்படை நடவடிக்கைகளை
நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தாது என்றும் பொருள்படும் வகையில் அந்தக் குழு அங்கு
வெளிப்படையாக அறிக்கைகள் வெளியிட்டது. தில்லிக்கும் கொழும்புக்கும் இடையே கமுக்க உடன்பாடு இல்லை என்றால் இவை நடந்திருக்காது.

இலங்கை தொடர்பாக இந்தியாவின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடு என்பது நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. பிரதமரான நீங்களே கூறியிருக்கிறீர்கள்: "ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள், அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில்,
அமைதிவழியில் பேச்சி நடத்தி அரசியல் தீர்வு காண்பதில்தான் முன்னேற்றத்துக்கான வழி அடங்கியிருக்கிறது''
என்று. நாடாளுமன்றத்துக்கு அளித்த ஆண்டு அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சகம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: "போர்ப்படைத் தீர்வு இல்லை என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அனைத்து
சமூகத்தினரின் நலன்களையும், குறிப்பாகச் சிறுபான்மை இனத்தவரின் நலன்களை, கருத்தில் எடுத்துக் கொள்ளும் வகையில், ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள், அரசியல் சிக்கல், அரசியல் சட்டச் சிக்கல்
மற்றும் பிற சிக்கல்களுக்குத் தீர்வு காண வேவண்டியதுதான் இப்போது தேவை'' என்று.

எனினும், இலங்கை அரசு வெறித்தனமாகப் பின்பற்றி வரும் "போர்ப்படைத் தீர்வு'க்கு முடிவு கட்டுவதற்கும்,
அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உங்களிடம் அளித்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளபடி, நேரடியாக இல்லை என்றாலும்,
மறைமுகமாக ஐ.நா. பாதுகாப்பு மன்றம் மூலமாக செய்திருக்கலாம். இனப்படுகொலையும் மக்களுக்கு எதிரான பிற கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கிற அல்லது அத்தகைய ஆபத்து ஏற்படக்கூடிய "உடனடி ஆபத்து' நிலையில் 8 நாடுகளில் ஒன்றாக இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது என்ற உண்மைக்குப் பிறகும், இதற்கான முயற்சிகூட செய்யப்படவில்லை. தில்லியின் அக்கறையற்ற , உணர்ச்சியற்ற அணுகுமுறையையே இது
காட்டுகிறது.
ஏனெனில், 'இனப் படுகொலை வெறியாட்டத்தால்' பாதிக்கப்படுவோர், உதவிக்கும் குரல் கொடுப்பதற்கும் வழியற்ற தமிழர்கள் என்பதுதான் இதற்குக் காரணம்.
குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், பொதுவாக இந்தியாவில் உள்ள தமிழர்களும் ஒன்றைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். தில்லியில் உள்ள திட்டம் தீட்டிச் செயல்படும் அதிகாரிகளுக்கும் அக்கறையற்ற
கொள்கை வகுப்பாளர்களுக்கும், சட்டத்துக்குக் கட்டுப்பட்ட கோடிக்கணக்கான தமிழ் மக்களைவிடவும்,கொழும்பில் உள்ள போர் வெறியர்களும் இனப்படுகொலை வெறியர்களும்தான் மிகவும் முக்கியமானவர்களா?
இந்த கோடிக்கணக்கான தமிழ் மக்களின் கௌரவம், சுயமரியாதை குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லையா? இதை இறுதி பதிலாக எடுத்துக் கொள்ளலாமா?

காலம் கடப்பதற்கு முன்பு எங்களுக்கு விடை தேவை.
நீங்கள் அவசர உணர்வுடன் செயல்படுவீர்கள் என்று நான் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.

மருத்துவர் ச.இராமதாசு


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...