???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மகிஷாசூரியும் மாமியார் அம்மாவும் - மு.க. சிறுகதை

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   31 , 2008  12:55:40 IST

மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக வேட்பளராகப் போட்டியிடும் லதா அதியமானின் மாமியார் மற்றும் மைத்துனர்கள், திடீரென அதிமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி ஒரு சிறுகதை வெளியிட்டுள்ளார்.

அந்தச் சிறுகதை:

கேள்வி:- சில வசன வரிகளில் ஒரு சிறுகதை அமைத்துச்சொல்வீர்களா?

பதில்:- இதோ, படித்துக்கொள்ளுங்கள்.

மகிஷாசூரி:- ஏய், பையா! மாமியார் அம்மா வந்திருக்காங்களாமே, கூப்பிடு கூப்பிடு-

பையன்:- உள்ளே கூப்பிட்டேன்மா-ஆனால், அவுங்க லட்சியம் ஒரு லட்சமாம். கொடுத்தால் தான், உள்ளே வருவாங்களாம்-

(உள்ளே வந்துகொண்டே)

ஒரு பயில்வான்:- வாசலிலேயே நானே வாரி வழங்கிட்டு, அந்த கிழவியை இதே அழைச்சிட்டு வந்துட்டேனே...

மகிஷாசூரி:- சபாஷ் பாண்டியா! சந்தோஷம்-வாம்மா மாமியாரம்மா! மருமகள்கிட்ட என்ன தகராறு?

மாமியார்:- அது ரொம்ப காலத்தகராறு-அவளை மண்எண்ணையிலே குளிப்பாட்டி, "ஸ்டவ்'' பூஜை நடத்த காத்திருந்தேன். அதுக்குள்ளே என்னை விட்டு தப்பிச்சுட்டா!

மகிஷாசூரி:- பரவாயில்லை-இங்க என்கிட்ட பயமில்லாம இருக்கட்டும். இன்னும் ஒரு லட்சம் கூட கொடுக்க தயாராக இருக்கேன். இந்த மாமியார், தன்னுடைய மருமகளை பத்தி ஏதாவது இந்த மக்களுக்கிட்டே அவதூறு சொல்லட்டும், அப்பதான் நமக்கு அமோக ஆதரவு கிடைக்கும்.

காலில் விழும் தலைவர்கள்

பையன்:- அது சரிதான்மா-ஆனா, ஜனங்கள், உங்களைப் பார்த்து குடும்பத்தை கலைக்கிற பொம்பளைன்னு சொல்லுவாங்களே?

மகிஷாசூரி:- சொல்லட்டுமேடா-எத்தனையோ பேர் திட்டியிருக்காங்க-எத்தனையோ பேரு சாபமே கொடுத்திருக்காங்க-எத்தனையோ பேரு நான் ஏமாத்துக்காரின்னும்-ஏசியிருக்காங்க., அந்த வசைமாரியெல்லாம் என்மேல காய்த்தா தொங்குது-நான் என்ன தான் அந்த காலத்திலே கர்ண கடூரமான காரியங்களை செஞ்சிருந்தாலும்-நீட்டுற காசை வாங்கிட்டு காலிலே விழுற அரசியல் தலைவனுங்க இருக்கத்தானே செய்றாங்க-?

பையன்:- நம்ப ஜெயிக்கிறதுக்கு இந்த மாமியார் போதுங்களா?

மகிஷாசூரி:- போதாதுன்னு தான் ஒரு சாமியாரை தேடி அழைச்சிக்கிட்டு வரச்சொல்லியிருக்கேன்-

பையன்:- (குதித்துக்கொண்டே) அப்படின்னா-அம்மாவுக்கு ஜே ஜே!.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...