???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழ்ச் சங்கமத்தில் கவிதை பாடலாம் வாருங்கள்

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   27 , 2008  14:45:24 IST

கவிஞர் கனிமொழி , எம்.பி., அவர்களது முன்முயற்சியால் சென்னை சங்கமம் நிகழ்ச்சி மாநகர மக்களுக்கு இழந்த சொர்க்கத்தை , பால்ய காலத்தை , நமது கிராமத்து வாழ்வை , மரபார்ந்த உணவுப் பழக்கத்தை மீட்டெடுக்கும் விதமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் கலைவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை சங்கமத்தின் ஒரு பெருமைமிகு அங்கமாய் விளங்கிடும் தமிழ்ச் சங்கமத்தில் தமிழில் பல்வேறு படைப்பிலக்கியப் போக்குகளை பிரதிநிதித்துவப்பட்டுத்தும் கருத்தரங்கம் , தங்களது வாழ்க்கையை மாற்றிய நூல்களைப் பற்றி தமிழின் முக்கிய ஆளுமைகள் பங்கேற்கும் உரையரங்கம் , வரலாற்றைப் படைக்கும் நாயகர்கள் இன்றையச் சூழலில் எவ்வாறு மறக்கடிக்கப்பட்டார்கள் அல்லது வளரும் தலைமுறை மறந்து போனது எவ்விதம் என்பதைப் பதிவு செய்யும் விதமாக "மறக்கப்பட்ட நாயகர்கள்" என்ற தலைப்பில் சிந்தனையரங்கமும் இடம்பெறுகின்றன.

21 ஆம் நூற்றாண்டு தமிழ்க் கவிஞர்களின் பார்வைகளை, பதிவுகளை ஆவணப்படுத்தும் கவிதைச் சங்கமம் நிகழ்வை நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களை நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைத்து நவீன மற்றும் மரபு கவிதா நிகழ்வை கவிஞர் கலாப்ரியா தலைமையில் , கவிஞர்கள் எஸ்.வைத்தீஸ்வரன் , விக்ரமாதித்யன் முன்னிலையில் , கவிஞர் கனிமொழி தொடங்கிவைக்க கவிதைக்குற்றாலம் நம்மிடையே பொங்கிப் பெருக இருக்கின்றது.

தமிழ்ச் சங்கமம் 2007 இல் கவிஞர் ஞானக்கூத்தன் தலைமையில் நடைபெற்ற கவிதா நிகழ்வில் வாசிக்கப்பெற்ற கவிதைகளும் , தமிழ்ச் சங்கமம் 2008 இல் கவிஞர் கலாப்ரியா தலைமையில் கவிதைச் சங்கமத்தில் பதிவு செய்யப்பட்ட கவிதைகளும் தொகுக்கப்பெற்று நூறு பூக்கள் மலரட்டும் என்ற நூலாக இந்த ஆண்டு வெளியிடப்பட உள்ளது.

நமது தமிழ்ப் பெருங்கவிஞர்கள் வளர்த்தெடுக்க மானுடம் போற்றி மாணவ , மாணவியர் ஆர்வத்தோடு கவிதைப் படைத்திட , புதிய கவிஞர்களைப் படித்திட , இளங்கவிஞர்களைக் கண்டெடுத்து ஊக்கப்படுத்தும் நிகழ்வாக தமிழ்ச் சங்கமத்தில் 16.1.2009 வெள்ளி அன்று கவிதை பாடலாம் வாருங்கள் என்ற அனைத்துக் கல்லூரி , பல்கலைக் கழக மாணவ மாணவியருக்கான கவிதைப் போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கு கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் தலைமையில் , பேராசிரியர் வீ.அரசு , பேராசிரியர் கவிஞர் பாரதி புத்திரன் நடுவர்களாக இருந்து தேர்வு செய்யும் கவிஞர்கள் தமிழ்ச் சங்கம அரங்கில் தங்களது கவிதைகளை வாசிக்க முதல் பரிசு ரூ.25,000/- , இரண்டாம் பரிசு ரூ.15,000 /- , மூன்றால் பரிசு ரூ.10,000/- , மேலும் பத்து கவிஞர்களுக்கு ரூ.1000/- வீதம் சிறப்பு பரிசுகளும் வழங்கப்படவிருப்பது 2009 ஆம் ஆண்டு சென்னை சங்கமத்தின் சிறப்பு நிகழ்வாகும்.

சென்னை சங்கமம் 2009 நமது நினைவுகளைத் தாலாட்டும் குடும்பக் கலைவிழாவெனக் கொண்டாடுவோம் .வாரீர் என்று தமிழ்ச் சங்கமத்தின் அமைப்பாளர் கவிஞர் இளையபாரதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்பு முகவரி

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
31.பொன்னி , குமாரசாமி ராஜா சாலை
ராஜா அண்ணாமலை புரம்
சென்னை - 600028
தொலைபேசி எண் - 044 - 24937471 , 9840444841 ,98422 -36935

தமிழ்ச் சங்கமம் 2009 - 11 ஜனவரி முதல் 16 வரை


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...