???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை 0 கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி! 0 திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை 0 துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜனவரி 10ஆம் தேதி சென்னை சங்கமத்தை முதல்வ‌ர் தொட‌ங்‌கி வை‌க்‌கிறா‌ர் - கனிமொழி

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   24 , 2008  19:34:02 IST

'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி ஜனவரி 10 ஆ‌ம் தே‌தி முதல் 16ஆ‌ம் தேதி வரை நடைபெறுகிறது , சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஜனவ‌ரி 10ஆ‌ம் தே‌தி நடைபெறு‌ம் 'செ‌ன்னை ச‌ங்க‌ம‌ம்' தொடக்க விழாவை முதல்வ‌ர் கருணா‌நி‌தி தொட‌ங்‌கி வை‌க்‌கிறா‌ர் எ‌ன்று கவிஞர் கனிமொழி சென்னையில் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌‌ர்.

'சென்னை சங்கமம்' பற்றி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகையில்,'கலை, பண்பாட்டு நிகழ்வான சென்னை "சங்கமம்' தென்னிந்தியாவின் மிகப்பெரும் திருவிழாவாக வளர்ந்து வருகிறது. பொங்கல் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு சிறப்புக் கொண்டாட்டமாகவும் இது அமைகிறது.இம்முறை "சங்கமம்' நிகழ்ச்சிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் 17 இடங்களில் திறந்தவெளி அரங்குகளில் நடைபெறும்.இந்த நிகழ்ச்சியில் 1,200க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்கிறார்கள் எ‌ன்று‌ம் இதுவரை சபாக்களில் மட்டுமே பாடிவந்த கர்நாடக இசை கலைஞர்கள் அங்கிருந்து வெளியே வந்து சாதாரண மக்களுக்கு மத்தியில் பாடுவார்கள்.இ‌ந்தா‌ண்டு கல்லூரி மாணவர்களுக்காக ந‌ட‌த்‌த‌ப்படு‌ம் கவிதை போட்டிக‌ளி‌ல் தமிழகம் முழுவதிலும் உள்ள க‌‌ல்லூ‌ரி மாணவர்கள் கலந்துகொள்ளலா‌ம்.

கடந்த ஆண்டைவிட ‌இ‌ந்தா‌ண்டு பெரிய உணவு திருவிழா நடைபெறும். இதில், 15 நட்சத்திர ஓட்டல் உணவகங்கள் கல‌‌‌ந்து கொ‌ள்‌கி‌ன்றன. ந‌ட்ச‌த்‌திர ஓ‌ட்ட‌ல்க‌ளி‌ல் 400 ரூபாய்க்கு விற்கப்படும் உணவு இங்கு 70 ரூபாய்க்கு கிடைக்கும். இ‌ங்கு கைவினை கலைஞர்கள் தயாரித்த பொருட்களும் விற்பனை செய்யப்படும்.

நாட்டுப்புற கலைகளான பறையாட்டம், பாவை கூத்து, தெருக்கூத்து, சிலம்பாட்டம், வழுக்கு மரம், மல்யுத்தம் போன்றவையும் நடைபெறும்.
இந்த ஆண்டு சென்னை, ‌திரு‌ச்‌சி, த‌ஞ்சாவூ‌ர், கோவை‌யிலு‌ம் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்படும்.

டிரம்ஸ் இசை கலைஞர் சிவமணி, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

நிறைவு விழா ஜனவ‌ரி 16ஆ‌ம் தேதி செ‌ன்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெறு‌ம் 'எ‌ன்றா‌ர் கனிமொழி.

தமிழ்ச் சங்கமம் 2009 - 11 ஜனவரி முதல் 16 வரை


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...