???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்கக் கூடாது: பிரதமர் மோடி 0 அதிமுகவில் ஒருவருக்கு கூட திமுகவை விமர்சிக்க தகுதியில்லை: ஸ்டாலின் 0 ஆதாரம் இல்லாமல் 'கட்டப்பஞ்சாயத்து' குற்றச்சாட்டை வைக்கலாமா? தமிழிசைக்கு திருமா கேள்வி 0 ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாராயணசாமி 0 இரட்டை இலை வழக்கு: தேர்தல் ஆணையத்தில் விசாரணை 0 அமைச்சர் ஜெயக்குமார் மீது மதுசூதனன் திடீர் பாய்ச்சல்! 0 பேரறிவாளனுக்கு நீண்டகால பரோல் வழங்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை 0 ஜனநாயகத்துக்கு எதிராக பாஜக செயல்படுகிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு! 0 ஜி.எஸ்.டி வரி விதிப்பு: பொது விவாதத்துக்கு சீமான் அழைப்பு 0 நாகை தீயணைப்பு நிலையம் இடிந்து விழுந்து விபத்து 0 மேற்கு வங்கம் : திருநங்கை நீதிபதியாக நியமனம்! 0 மெர்சலை வெற்றி படமாக்கியதற்கு விஜய் நன்றி! 0 பேரறிவாளன் பரோல்: அற்புதம்மாள் முதல்வருக்கு மீண்டும் கடிதம் 0 சில நாட்களில் மற்றுமொரு அதிசயம் நடக்கும்: கருணாநிதியின் மருத்துவர் 0 தற்போதைய சூழலில் பராசக்தி படம் வந்தால் எப்படி இருக்கும்? ட்விட்டரில் ப.சி. கேள்வி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'சினிமாவுக்கு எதிரான பூச்சாண்டி' - சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   20 , 2005  14:32:17 IST

கலைகளுக்கு வாழ்க்கையில் இடம் இல்லை. அது மனிதர்களைக் கெடுத்து விடுகிறது என்ற கிரேக்க ஞானி பிளாட்டோ கருதினார். தன்னுடைய இலட்சிய குடியரசில் கவிஞர்கள், கலைஞர்களுக்கு இடம் கொடுக்க மறுத்துவிட்டார். ஆனால் அவர் மாணவரும், அலெக்சாண்டரின் குருவுமான அரிஸ்டாட்டில் கலைஞர்கள் நாட்டின் பொக்கிஷம் என்றார்.கலைகள் நாட்டின் ஒழுக்கத்தைச் சீரழித்துவிடுகிறது என்று எல்லா நாட்டிலும் ஒழுக்கவாதிகள் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.வாழ்க்கையில் இருந்து கலையைப் பிரிக்க முடியாது. யார் எந்தத் தொழில் புரிந்தாலும் கலைகளே அவனை மனிதனாக வைத்திருக்கிறது என்பது அவர்களின் அபிப்பிராயம்.

தேவபாஷை என்று சொல்லப்படும் சமஸ்கிருதத்தில் தான் காமசூத்திரம் எழுதப்பட்டு உள்ளது.தமிழ் மறையான திருக்குறளில் காமத்துப்பால் உள்ளது. கலை என்பது கலவியுடன் மட்டுந்தான் சம்பந்தம் கொண்டதா? என்ற கேள்விக்கு அது கலவியில் சென்று முடிகிறது என்றுதான் பதில் வருகிறது.கலவி பாவமல்ல. எந்ததொரு மதமும் கதை பாவமென்று சொல்லவில்லை. ஆனால் அடிக்கடி அதன் மீது அவதூறுகள் செய்யப்படுகின்றன.

சமூகத்தின் நல்வாழ்க்கை, ஒழுக்க நெறிகள் மீது சம்பந்தப்பட்டு உள்ளது என்றும் அதைக் காப்பது தன்னுடைய கடமை என்றும் சிலர் கற்பித்துக் கொண்டு வருகிறார்கள். அதற்கு அவர்கள் முதலில் குரல் எழுப்புவது கலைகளுக்கு எதிரானதுதான்.

மனிதன் மிருகமல்ல. வேலை செய்வதற்கு என்றே படைக்கப்பட்டவனுமில்லை. ஒரு வழி, ஒரு பாதை என்பது மனித சரித்திரத்தில் என்றுமே இல்லை.ஒன்றுதான் வழி என்றால் அப்படி இல்லை என்று இன்னொரு மனிதன் எதிர்த்து வந்து இருக்கிறான். அதற்காக உயிர் கொடுக்கக்கூட தயங்கியது இல்லை.அதுதான் மனித சரித்திரம். மனித சரித்திரத்தில் இருந்து, மனிதர்கள் அப்படியொன்றும் அதிகமாக பாடம் கற்றுக் கொண்டுவிடவில்லை என்பது சரித்திரத்தின் முக்கியப் பகுதியாக இருந்து வருகிறது.

நல்ல இலக்கியம், இசை, நடனம், நாட்டியம், ஓவியம்,சிற்பம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நீண்ட நெடுங்காலமாக மனிதன் ஆண்டு அனுபவித்து வருவதின் தொடர்ச்சிதான் வாழ்க்கை. மூதாதையர்கள் விட்டுச் சென்று இருப்பது தமிழர்களுக்கு சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம். அதெல்லாம் படித்தால் சோறு போடுமா என்றால் சோறே வாழ்க்கை அல்ல.

மனிதன் தின்று கழியும் மிருகமல்ல.

கலைகள் அற்ற வாழ்க்கை என்பது மனிதனுக்குச் சாத்தியமே இல்லை. ஏனெனில் மனிதன் அடிப்படையில் ஒரு கலைஞன். அவன் உள்மனது கலைகளின் இருப்பிடமாக இருக்கிறது. ஒரு பொறிபட்டதும் அது திடீரென்று பற்றிக் கொண்டு விடுகிறது. ஆளுக்கு ஆள் அது வித்தியாசப்படலாம்.பல்கலைக் கழக வளாகத்தில் இருந்து, கல்லூரிகளில் கலைகளை விரட்டியடித்துவிடுவேன் என்று தடியைத் தூக்கிக் கொண்டு மாணவர்கள் மீது அக்கறை கொண்ட ஆட்கள் தங்களையே பிரகடனப்படுத்திக் கொண்டு சில ஆசாமிகள் புறப்பட்டு இருக்கிறார்கள்.

சினிமா என்றால் கோமாளிகள் கூட்டம் இல்லை.நமக்குத் தெரிந்த சினிமா இந்திய அளவில் சத்யஜித்ரே சினிமா, ஷியாம் பெனகல் சினிமா, ரிஷிகேஷ் முகர்ஜி சினிமா, காஸாவள்ளி சினிமா, மகேந்திரன் சினிமா, பாலு மகேந்திரன் சினிமா.பழைய சினிமா என்றால் எல்லீஸ் ஆர். டங்கன், சகுந்தலை, மீரா, மந்திரிகுமாரி, எஸ்.எஸ்.வாசன், ஔவையார், மெய்யப்பன், அந்த நாள் எத்தனையோ கலைஞன்கள் சினிமாவை ஜொலிக்க வைத்து இருக்கிறார்கள். சினிமா அறிவியல் கண்டுபிடிப்பு. கலையை மக்கள் முன்னே கொண்டு செல்வது. அதில் கசடு இருக்கும். அழுக்கு சேர்ந்து கொள்ளும். ஆனால் அது நீக்கக் கூடியது. போகக் கூடியது. அதற்காக சினிமா மீது யுத்தம் தொடுக்கக் கூடாது.

கலைஞர்கள் மீது மறைமுகமாக மாசை ஏற்றக் கூடாது.படிப்பு, வருங்கால வாழ்க்கை- என்று முகமூடி போட்டுக்கொண்டு யாரையும் பயமுறுத்தக் கூடாது. அதுவும் கலைஞர்களைச் சொல்லி.பாவம் கலைஞர்கள். என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே ஜீவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதுதான் அவர்கள் இயல்பு.அவர்கள் பிறர் வாழ்க்கையை சந்தோஷமாக்குவதற்காகவே வாழ்கிறவர்கள்.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article I, Article II,Article III


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...