???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகதமி விருது

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   23 , 2008  19:47:36 IST

தமிழின் முன்னணி எழுத்தாளரான மேலாண்மை பொன்னுசாமிக்கு இந்த வருடத்திற்கான சாகித்ய அகதமி விருது வழங்கப்பட்டுள்ளது. மேலாண்மை பொன்னுசாமியின் ' மின்சார பூவே' என்ற சிறுகதை தொகுப்பிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகதமியின் இந்த ஆண்டு விருதைப் பெற்றுள்ள மேலாண்மை பொன்னுசாமி, எழுதி, வெளியாகியுள்ள மொத்த புத்தகங்கள் 36. ஆனால், இவர் நான்காம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் தமிழ்நாடு சிமெண்ட் ஆலைக்கு அருகில் உள்ள மேலாண்மறை நாடுதான் பொன்னுசாமியின் சொந்த ஊர். ஊரின் பெயரால் அடைமொழியிட்டுத்தான் இவர் அழைக்கப்படுகிறார்.

இவர் எழுதிய முதல் சிறுகதை பரிசு, 1972 நவம்பரில் செம்மலர் இதழில் வெளியானது. மார்க்சிஸ்ட் கட்சியின்மீது ஈடுபாடு கொண்ட இவர், இடதுசாரி இலக்கிய இதழ்களான செம்மலர், சிகரம், விழிப்பு ஆகியவற்றில் ஆரம்பத்தில் எழுதினார். முதலில் இடதுசாரி இதழ்களில் மட்டுமே எழுதிவந்தவர், வணிக இதழ்களிலும் எழுதத் தொடங்கினார்.

தினமணி கதிர், குங்குமம், கல்கி, ஆனந்தவிகடன், வாசுகி, இந்தியா டுடே, சண்டே இன்டியன் ஆகிய இதழ்களில் இவரின் படைப்புகள் வெளியாகியுள்ளன.

இவரின் படைப்புகளில் 23 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், 6 குறுநாவல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பு ஆகியன அடங்கும்.

விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி பகுதிகளில் கரிசல் வட்டார மக்களின் கிராமத்து வாழ்க்கைதான் இவரின் படைப்புக்களன்.

சாகித்ய அகதமியின் பரிசைப் பெற்றுள்ள இவரின் மின்சாரப் பூ சிறுகதைத் தொகுப்பு, 2004ல் வெளியானது. சென்னை வானதி பதிப்பகம் வெளியிட்ட இந்தத் தொகுப்பில் 10 கதைகள் இடம்பெற்றுள்ளன.

59 வயதாகும் மேலாண்மை பொன்னுசாமிக்கு, மனைவி, மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் இவர், தன் சொந்த ஊரில் வசித்துவருகிறார்.

விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை, பெங்களூரில் உள்ள சாகித்ய அகதமி அதிகாரிகள் இன்று மாலை 4.30மணிக்கு இவரிடம் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது இருந்து இரவுவரை பொன்னுசாமிக்கு தொலைபேசியில் வாழ்த்துக்கள் வந்தவண்ணம் இருந்தன. அவற்றுக்கு நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவிப்பதற்குள் அவர் திக்குமுக்காடிப் போனார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...