???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நல்ல சினிமாவும் மக்கள் ரசனையும் - பாலுமேகந்திரா

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   29 , 2005  14:42:30 IST

நல்ல சினிமா...நல்ல சினிமா...என்று பேசியும் எழுதியும் வருகிறோம். இந்த நல்ல சினிமா,என்றால் என்ன?
இதைக் கொஞ்சம் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
முதலில் இதற்கான கதை அல்லது கருப்பொருள்.
எடுக்கப்படும் கதை, மனித மேம்பாட்டையும், மானுட நேயத்தையும்
வலியுறுத்துவதாய் அமைதல் வேண்டும்...நேரடியாக இல்லையெனினும்,
மறைமுகமாகவேணும் சமூக யதார்த்தங்களைப் பிரதிபலிப்பதாய் அமைதல்
வேண்டும்.இவற்றை அடிநாதமாகக் கொண்ட எல்லாக் கதைகளையும்
சினிமாவாக்கிவிட முடியும் என்றும் கருதுவதற்கில்லை.
எழுத்து என்பது ஒரு முழுமையான மீடியம். சினிமா என்பது முற்றிலும் மாறுபட்ட மற்றுமொரு முழுமையான மீடியம். குறிப்பிட்ட மீடியத்தில்
முழுமைபெற்ற ஒரு படைப்பை, வேறொரு மீடியத்திற்கு, அந்தப்
படைப்பின் முழுத்தன்மை கெட்டு விடாமல் மாற்றுவதென்பது சற்று
சிரமமான காரியம். சில படைப்புகளே இந்த மீடிய மாற்றத்திற்கு இணைந்து
கொடுக்கின்றன. உதாரணமாக, கட்டிடக் கலையின் அதியற்புதப்
படைப்புகளில் ஒன்று எனக் கருதப்படும் நமது தாஜ்மஹாலை, ஓவியம் என்ற
மீடியத்திற்கு வெகு இலகுவாக மாற்றிவிடலாம். எழுத்து என்ற
மீடியத்திலும் ஓரளவு சிறப்பாக மாற்றியமைக்கலாம். ஆனால்,
இதே தாஜ்மஹாலை அதன் சகல சிறப்புகளுடன், இசை
என்ற மீடியம் மூலமாகவோ அல்லது நாட்டியம் என்ற
மீடியம் மூலமாகவோ எடுத்துச் சொல்வதென்பது இயலாத
காரியம்.ஆக, மனித மேம்பாட்டையும், மானுட நேயத்தையும்
அடிநாதமாகக் கொண்டு, சமூக எதார்த்தங்கள் நிறைந்த சில
கதைகளைத்தான், அவற்றின் முழுத்தன்மை கெடாது சினிமா
என்ற விஷீவல் மீடியத்திற்கு மாற்றியமைக்கலாம். எல்லாக்
கதைகளையுமே சினிமாவாக எடுத்து விடலாம் என
நினப்பது தவறு. இலக்கியச் சிறப்பு வாய்ந்தவை என்று
அங்கீகாரம் பெற்ற சில கதைகள் சினிமாவாக மாற்றம்
செய்யப்படும்பொழுது, தம் சிறப்புகள் அனைத்தையுமே
இழந்து போவதற்கு இந்த மீடிய மாற்ற இணங்காமை
தான் காரணம். அநேகமாக நனவோடை உத்தியில்
(Stream of Consciousness)எழுதப்பட்ட எந்தக்
கதையையும் சினிமாவாக மாற்றுவதென்பது சற்றுச்
சிரமமான காரியம்.அடுத்து, சினிமாவை ஆக்கும்
படைப்பாளி....சினிமா என்ற மீடியத்தின் மீது
அவனுக்கிருக்கும் ஆளுமை (His Command on the Medium)
சமூகப் பிரக்ஞையுள்ள ஒரு கதை, கைதேர்ந்த ஒரு
படைப்பாளியால், எவ்வித சமரசங்களுமின்றி
சினிமாவாக்கப்படும்பொழுது,அந்த சினிமாவில் கணிசமான
அளவு தொழில் நுட்பச் சிறப்பும், மற்றும்
கலாநேர்த்தியும் கைகூடி வரும்பட்சத்தில், அப்படிப்பட்ட
ஒரு சினிமாவை `நல்ல சினிமா, என்று சொல்லலாம்.
எல்லா சினிமாக்காரர்களும் `மக்கள்ரசனை, என்ற
வார்த்தையை அடிக்கடி உபயோகித்து வருகிறார்கள்.
`மக்கள் ரசனை, என்பது, மக்கள் பிறக்கும்போது
அவர்கள் கொண்டு வந்த ஒரு விஷயமல்ல. மாறாக, நம்மால்
அவர்கள் மீது வலுக்கட்டாயமாகத்
திணிக்கப்பட்ட ஒரு விஷயம்.
நமது சுயநல நோக்கங்கள் கருதி, பிடிவாதமாக,
பிரக்ஞைபூர்வமாக ஒரு மட்டமான ரசனையை
அவர்கள் மத்தியில் (நமது மட்டமான படைப்புகளால்)
நாம் உருவாக்கி விட்டு,அவர்கள் இதைத்தான்
விரும்புகிறார்கள் என்று அவர்கள் மீது பழியைச்
சுமத்துவது வடிகட்டின அடாவடித்தனம்...சுத்த ஹம்பக்.
போதை வஸ்துகளுக்கு அடிமையாக்குவதைப் போல,
மக்களை நமது மட்டமான படங்களுக்கு அடிமைகளாக்கி
வைத்திருக்கிறோம். அது எங்களுக்கு லாபகரமாக
உள்ளது. சினிமா மட்டுமல்ல.மக்களைச் சென்றடையும்
நாடகம், பத்திரிகை, அரசியல் ஆகிய எல்லாவற்றையும் நாம்
காயடித்து வைத்திருக்கிறோம்.எல்லோரும்தான்
குற்றவாளிகள்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...