அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

காலச்சுவடு நிகழ்வு: தமிழ் ஊடகங்களில் முஸ்லிம் குறித்த கலந்துரையாடலில் சலசலப்பு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஏப்ரல்   20 , 2008  22:33:06 IST

காலச்சுவடு இதழ் 20 ஆண்டுகள், 100 இதழ்கள், 250 நூல்கள் ஆகியவற்றை கொண்டாடும் விதமாக ஒரு நாள் பண்பாட்டு நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தது. சென்னை பிலிம்சேம்பர் அரங்கில் ஏப்ரல் 19 ஆம் தேதி சனிக்கிழமை முழுவதும் நடந்தது.
காலச்சுவடு பதிப்பகத்தின் 250 ஆம் நூலான பாரதி கருவூலம் வெளியிடப்பட்டது. இந்து நாளிதழ் ஆசிரியர் என்.ராம் வெளியிட பா.மதிவாணன் பெற்றுக்கொண்டார்.

மாலையில் தமிழ் ஊடகங்களில் இஸ்லாம் என்ற தலைப்பில் கலந்துரையாடல் பத்திரிக்கையாளர் கிருஷ்ணானந்த் தலைமையில் நடந்தது. அதில் ஆ.இரா.வேங்கடாசலபதி, சல்மா, களந்தை பீர்முகம்மது ஆகியோர் கலந்கொண்டு பேசினர்.
தலைமையேற்றுப் பேசிய கிருஷ்ணானந்த், ''இஸ்லாமியர்களுக்கு எதிரான சித்தரிப்புகள் அவர்களுக்கு மட்டும் எதிரானவை அல்ல. இந்திய ஜனநாயகத்திற்கு எதிரான போராக நடந்துவருகின்றன" என்று கலந்துயாடலை தொடங்கிவத்தார். அதைத்தொடர்ந்து பேசிய வேங்கடாசலபதி, "பாரதியார் ஆரம்பகாலத்தில் முஸ்லீம்கள் பற்றி தவறாக எழுதிய கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்து திருத்திக்கொண்டுள்ளார்" என்ற கருத்தை சுட்டிக்காட்டினார். பிறகு "தமிழ்த்திரைப்படங்களில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகவே சித்திரிக்கப்படுகிறார்கள். குறிப்பாக விஜயகாந்த படங்களில் தொடர்ந்து முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக வந்துள்ளார்கள். லைலா, ரோஸி போன்ற கிறிஸ்துவ பெயர்கள் கிளப் டான்சர்களாக வருவார்கள். இப்படித்தான் தமிழ் சினிமா இருந்துவந்திருக்கிறது. அந்தக் காலத்தில் இந்தி சினிமா உலகில் முஸ்லீம் குடும்பங்களின் கதைகள் வந்துள்ளன" என்றார்.

சல்மா பேசும்போது "தமிழ்நாட்டில் பத்திரிக்கைகள் முஸ்லீம்களை தீவிரவாதிகளாகத்தான் சாதாரண செய்திகளில்கூட எழுதிவருகிறார்கள்" என்று குறிப்பிட்டுப் பேசினார்.

களந்தை பீர்முகம்மது பேசும்போது "பெரும்பாலான சாதிக்கலவரங்களுக்கு மாலை பத்திரிக்கைகள்தான் காரணம். ஆயிரம் அரிவாள்கள் வீசப்பட்டன என்கிற அளவிற்கு செய்திகள் உலாவரும். முஸ்லீம்களை தமிழ்ப்பத்திரிக்கைகள் தொடர்ந்து மோசமாகத்தான் எழுகின்றன. அதைப் பற்றி உரையாட ஒரு தளம்கூட இல்லை. முஸ்லீம்களும் பல அமைப்புகளாக பிரிந்துகிடக்கின்றனர். இதையெல்லாம் எதிர்த்து நின்று ஒன்றாக குரல் கொடுக்கவேண்டிய காலகட்டம் இது. இதை அவர்கள் உணரவேண்டும். இதைப்பற்றியெல்லாம் எங்கே போய் சொல்வது. முஸ்லீம் தலைவர்கள் சொல்கிற கருத்துகளை தமிழ்ப் பத்திரிக்கைகள் வெளியிடுவதில்லை" என்று விரிவாக தன் ஆதங்கத்தை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து கிருஷ்ணானந்த் பேச வந்தார். இந்திய நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு சம்பவம் பற்றி குறிப்பிட்டார். அந்த நேரத்தில் பார்வையாளர்கள் வரிசையிலிருந்து எதிர்ப்புக் குரல்கள் வரத்தொடங்கிவிட்டன. "நீங்கள் ஒரு சார்பாக பேசுகிறீர்கள். இரு தரப்பு பற்றியும் சொல்ல வேண்டும். பேலன்ஸாக கலந்துரையாடல் இல்லை" என்று முதல் வரிசையில் அமர்ந்திருந்த தாடி வைத்த பெரியவர் ஒருவர் கிருஷ்ணானந்தை பேசவிடாமல் உரக்க குரல் கொடுத்தார். தொடர்ந்து சத்தமாக எதிர்த்து குரல் கொடுத்துக்கொண்டே இருந்தார். பிறகு வேறுசிலரும் அவருக்கு ஆதரவாக பேசத் தொடங்கினர். கிருஷ்ணானந்த், நீங்கள் நினைப்பதைத்தான் நான் பேசவேண்டும் என்பது பாஸிஸம் என்றார். அவசரமாக மேடைக்கு வந்து காலச்சுவடு கண்ணன், "தமிழ் ஊடகங்களில் இஸ்லாம் பற்றி விரிவான புத்தகத்தை வெளியிட்டுள்ளோம். அதைப் படித்துப் பாருங்கள். இந்நூல் பற்றிய சிறு அறிமுகத்திற்கான உரையாடல் இது. இந்த நான்கு பேர் பேசுவது மட்டும் போதுமானதல்ல. புத்தகத்தைப் படியுங்கள்" என்று சொல்லி அமைதி காக்க கேட்டுக்கொண்டார். அமைதியாகாதவர்கள் மீண்டும் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தனர். அதனால் கலந்துரயாடலை திடீரென பாதியிலேயே முடிக்க வேண்டியிருந்தது.
இறுதியில் பேசிய சல்மா இதுபோன்ற தடைகளை எதிர்காலத்தில் தாண்டிக் காட்டுவோம் என்றார். கலந்துரையாடலை இன்னும் 5 நிமிடங்கள் நடத்தியே ஆக வேண்டும் என்றும் ஒருவர் குரல் கொடுத்தார். இருந்தாலும் விவாதம் மேலும் தீவிரமாகிவிடக்கூடாது என்பதற்காக கலந்துரையாடல் முடித்துவைக்கப்பட்டது.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...