அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் 0 டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு; பிரபல தாதா உள்பட 4 பேர் உயிரிழப்பு! 0 கண்ணகி- முருகேசன் வழக்கு: பெண்ணின் அண்ணணுக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள்! 0 நன்றி தலைவா!- அமெரிக்க பங்கு சந்தையில் ரஜினி ரசிகர்! 0 அரசை தேடி மக்கள் வந்த காலம் போய் தற்போது மக்களை தேடி அரசு வருகிறது: மு.க.ஸ்டாலின் 0 கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: 13 பேர் குற்றவாளிகள்! 0 தமிழகம் முழுவதும் 450 ரவுடிகள் கைது! 0 ஆணைப்புளி பெருக்க மரம் குறித்த கல்வெட்டு திறப்பு! 0 ஜிஎஸ்டி கூட்டத்தில் பி.டிஆர் பங்கேற்றிருக்க வேண்டும்: திமுக எம்.பி. கருத்து 0 நடிகர் அஜித்தின் வலிமை பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 0 பெகாசஸ் உளவு விவகாரம்: விசாரணைக் குழுவை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் 0 அடுத்தடுத்த ஆள்மாறாட்ட புகார்; மோசடிகளின் கூடாரமான நீட்: ராமதாஸ் 0 சசிகலாவின் நிலத்தை கையகப்படுத்தும் உத்தரவு ரத்து! 0 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இப்போதைக்கு பள்ளி திறப்பு இல்லை: அன்பில் மகேஷ் பொய்யாமொழி 0 சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: லாலு பிரசாத் யாதவ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

முதுபெரும் எழுத்தாளர் லா.ச.ரா. மறைந்தார்

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   31 , 2007  02:24:17 IST

தமிழின் சிறுகதை, நாவல் இலக்கிய வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர் சப்தரிஷி ராமாமிர்தம் எனப்படுகிற லா.ச.ரா. இன்று காலை (30.10.07) மறைந்தார். திருச்சிக்கு அருகே லால்குடியில் 30.10.1916 ஆம் ஆண்டு பிறந்த இவர் எழுதிய முதல் சிறுகதை மஞ்சரி ஈஸ்வரன் நடத்திய 'சிறுகதை' என்ற பத்திரிக்கையில் வெளியானது. தனது 18 வயதில் முதல் கதையை எழுதினார். லா.ச.ரா. சொற்களை அதற்குரிய பொருளோடு பயன்படுத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். அதுபற்றி எழுதும்போது நெருப்பு என்றால் வாய் வேக வேண்டும் என்று குறிப்பிடுகிறார். தனது 91 ஆவது வயதில் மறைந்துவிட்ட லா.ச.ரா வுக்கு 4 மகன்கள் 1 பெண். அவருக்கு சிறுவயதுமுதலே சங்கீதத்தில் ஈடுபாடு உண்டு. குடும்பம், அது சார்ந்த உறவுகள், உணர்வுகள், பெண்களின் மகத்துவம் என அந்த உலகின் உன்னதங்களை எழுத்தில் கவிதையாக வடித்தெடுத்த அவர் தன்னை சௌந்தர்ய உபாசகன் என்று சொல்லிக்கொண்டார். உணர்ச்சி, கொந்தளிப்பு, சலனம் ஆகியவை அவரது எழுத்தில் காணக்கிடைப்பவை.1989 ஆம் ஆண்டு தன்னுடைய 'சிந்தாநதி' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார்.அஞ்சலி, ஜனனி, அபிதா ஆகிய படைப்புகள் தமிழ் இலக்கிய உலகில் போற்றப்பட்டவை.இவருடைய எழுத்துக்கள் ஆங்கிலம் மட்டுமில்லாது பிரெஞ்சு மற்றும் செக் போன்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அவரை கவர்ந்த எழுத்தாளராக ஹெர்மன் ஹெஸ்ஸே இருந்தார். அவரது அபிதா என்ற நாவல் Lolita என்ற நாவலோடு இணைத்துப் பேசப்பட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...