???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் 0 இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் 0 தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் 0 டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா 0 டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி! 0 தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி 0 அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு 0 சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப்! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மகாகவி பாரதியாரின் வியப்பு ! - தெற்கே உதித்த சூரியன் 9 - ராவ்

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   10 , 2007  08:42:41 IST

அப்போதெல்லாம் கும்பகோணம் காஞ்சி மடத்தின் நிர்வாகப் பீடமாக இருந்ததைப் பார்த்தோம். கலவையில் ஆசாரிய பீடம் ஏறிய நம் பரமாச்சாரியார் கும்பகோணம் நோக்கி பயணம் தொடங்கினார்.

வழியில் தன் பெற்றோர் வாழ்ந்த திண்டிவனத்தில் தங்கினார். பன்னிரண்டு வயது - பள்ளி மாணவன் சுவாமிநாதனாக அவரை அறிந்திருந்த ஊர் அது. இப்போது அவர் மடாதிபதி. பள்ளி மாணவனாக இருந்த போதே அவர் , எல்லோரையும் கவர்ந்திழுக்கும் தோற்றம் பெற்றிருந்தார்.

துறவாடையில் அவர் சூரியனாக தேஜோமயமாக காட்சி தந்தார். அவர் படித்த ஆற்காடு மிஷின் ஸ்கூலின் ஆசிரியர்கள் , பள்ளி தோழர்கள் அவரை காண ஓடி வந்தார்கள் . அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். வாழ்த்தினார்.

கும்பகோணம் மடத்தில் 9 - 5 - 1907 - ல் சுவாமிகளுக்கு முறைப்படி பட்டாபிஷேகம் நடந்தது. தஞ்சையின் கடைசி மன்னர் , அரசு பெரிய அதிகாரிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஸ்வாமிகள் ஜகத்குரு ஆனார்கள்.

1909 -ல் கும்பகோணத்தில் - மகாமகம் திருவிழா வந்தது. மகாமகத்தன்று சுவாமிகள் யானை
மீது அமர்ந்தவாறு மகாமக குளத்திற்கு ஸ்நானம் செய்ய சென்றார். தஞ்சை அரச குடும்பத்தினரும் , அரசு அதிகாரிகளும் முன் சென்றனர். அது கண் கொள்ளா காட்சியாக அமைந்தது.

அதன் பின்னர் - சுவாமிகள் 'படிக்க' ஆரம்பித்தார் . படித்தார் - படித்தார் - படித்தார் ..! வேதப்பயிற்சி சமஸ்கிருத காவ்யங்கள் இப்படி பற்பல!

தனிமையில் தொல்லைகள் ஏதுமின்றி படிக்க ஆவல் கொண்டார் சுவாமிகள் . அகண்ட காவிரியின் வடகரையில் , முசிறிக்கு மேற்கே ஐந்து மைல் தொலைவில் மகேந்திர மங்கலம் என்கிற கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டது . அந்த நாட்களில் அந்த கிராமத்திற்கு போக்குவரத்து வசதி இல்லை. காவிரியை பரிசலில் கடந்து வரவேண்டும். ஆதலால் சுவாமிகளை தரிசிக்க வருவோர் குறைந்தனர்.

சிறு குடிசை அமைக்கப்பட்டு அதில் தங்கினார்.

சுவாமிகள் எல்லா பாடங்களையும் ஆர்வமுடன் கற்றார். இந்தியா முழுவதிலிருந்தும் பல துறை மேதைகளும் பண்டிதர்களும் அங்கே சுவாமிகளுக்காக வந்தார்கள். ஆங்கிலம், பிரெஞ்சு , உருது போன்ற பல்வேறு மொழிகளையும் கற்றார். மராத்தி மொழி கற்றார். மராட்டிய மாநில அறிஞர்கள் சுவாமிகளுக்காக அந்த கிராமத்துக்கு வந்தனர்.

தமிழ் புலவர்கள் துணையுடன் தமிழ் நூல்கள் அனைத்தையும் கற்று தேர்ந்தார். பல்வேறு கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களை அழைத்து பல கலைகளில் தேர்ந்தார். இசை , சிற்பம் முதல் கல்வெட்டு ஆராய்ச்சிவரை ! மகேந்திர மங்கலம் - சுவாமிகளின் வாழ்வில் மகேந்திர ஜாலம் செய்தது .

சுவாமிகளுக்குள் இருந்த ஞான ஒளி விசுவரூபம் எடுத்தது. மகேந்திர மங்கலத்தில் இருந்து சுவாமிகள் திரும்பும் போது , ஞான சூரியனாக ஜொலித்தார். சுவாமிகளின் சிறப்பு பாரத தேசம் முழுவதும் பரவத் தொடங்கியது.

தமிழகத்தின் மகா கவி சுப்பிரமணிய பாரதியையும் கவர்ந்தார் சுவாமிகள்.

1916 ம் வருடம் கும்பகோணத்தில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழா பற்றி பாரதியார் எழுதி இருக்கிறார் :

" உலகத்தார் பராசக்தியை நல்ல மழை அருள்புரியும் சரத் காலத்தில் முதல் ஒன்பது இரவும் வணங்கி பூஜை செய்யவேண்டும் என்பது பூர்வீக ஏற்பாடு . மிகப்பயன் உடைய காரியம் .

கும்பகோணம் சங்கர மடத்தில் இந்த பூஜை மிகவும் கோலாகலமாக நடத்தப் போவதாக பத்திரிக்கையில் ஒரு செய்தி போட்டிருந்தது. தேசம் முழுவதும் இப்படி நடப்பது நல்லது. சங்கர மடத்திலும் எனக்கு ஒருவித ஆவல் உண்டானதால் தந்தியை வாசித்தேன் . அந்த தந்தியோடு பாதி சாஸ்திரம் . வர்த்தமான தந்திக்குள்ளேயே சாஸ்திரத்தை நுழைத்தது ஒரு வினோதம் . ஆனால் அதில் கண்ட சாஸ்திரம் உண்மையானதாக இருந்தது. நான் எதிர்பார்க்கவில்லை . எனவே தந்தியை படித்த போது எனக்கு மகிழ்ச்சி உண்டானது. "

பாரதி இப்படி எழுதுகிறார் ....


தெரியுமா ?

ராமபிரானும் கண்ணபிரானும் இந்தியர்களின் தெய்வீக வாழ்வில் நிரந்தரமாக இணைந்துவிட்டவர்கள் .

காந்தியடிகளுக்கு மன உறுதி அளித்ததே ராம நாமம் தான் .' ஹேராம் ' என்பது அவரது இறுதி வார்த்தை .

சீதாபிராட்டி - ஸ்ரீராமன் திருமணம் நடந்தபோது ஸ்ரீராமன் வயது என்ன ?

அப்போது அவருக்கு வயது 13 .

அவரது 29 வது வயதில் வனவாசம் . 39 வயதில் ஸ்ரீராமபட்டாபிஷேகம் . அதன்பின் 70 ஆண்டுகள் ஆண்டார். 110 வது வயதில் மறைந்தார்.


(இன்னும் வரும்)

புதன் தோறும் இரவு ராவ் அவர்களின் 'தெற்கே உதித்த சூரியன்' அந்திமழையில் வெளிவரும்....

'தெற்கே உதித்த சூரியன்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

தெற்கே உதித்த சூரியன்-1 - ராவ்
ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம் நடத்திய சுவாமிகள் -தெற்கே உதித்த சூரியன் -2 - ராவ்
மனசாட்சி விசுவரூபம் எடுத்தது - தெற்கே உதித்த சூரியன் - 3 - ராவ்
கழுத்தில் இருந்த மாலை வாடியது - தெற்கே உதித்த சூரியன் - 4 - ராவ்
இன்னொரு இரண்யன் - தெற்கே உதித்த சூரியன் - 5 - ராவ்
மூப்பனார் செய்த உதவி ! - தெற்கே உதித்த சூரியன் - 6 - ராவ்
சுதந்திர சூரியன் உதயம் ! - தெற்கே உதித்த சூரியன் - 7 - ராவ்
இறைவன் விளையாட்டு !- தெற்கே உதித்த சூரியன் - 8 - ராவ்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...