???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்! 0 கரூரில் கமல்ஹாசனை நோக்கி செருப்பு, முட்டை வீச்சு! 0 கோவில் கல்வெட்டில் தேனி எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்! 0 கமல் முன்ஜாமின் கோரிய மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு! 0 மருத்துவ படிப்படிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 26ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு! 0 இந்தியாவில் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

செந்தமிழன் - குறும்பட இயக்குநர் 11

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   05 , 2007  06:55:26 IST

பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றிக்கொண்டிருந்த செந்தமிழன் இப்போது குறும்படம் மற்றும் ஆவணப் படங்களை இயக்குவதில் கவனம் செலுத்திவருகிறார். இவர் இயக்கிய ஆவணப் படங்களில் குறிப்பிடத்தகுந்த படம், 'பேசாமொழி'.

'பேசாமொழி':

மௌனப் படம் பற்றிய ஆவணப் படம் இது. 'இது இருளில் மூழ்கடிக்கப்பட்ட சூரியக் குடும்பத்தின் கதை. தென்னிந்தியா முழுமைக்கும் தமிழ்த்திரைப்படத்தைக் கற்றுக்கொடுத்த மௌனத் திரைப்படக் கலை வாழ்ந்த கதை எனும் வர்ணனைக் குரலுடன் தொடங்குகிறது இந்த ஆவணப் படம்.

1895 ஆம் ஆண்டு பாரிஸில் லூமியர் சகோதரர்கள் தயாரித்த உலகின் முதல் திரைப்படமான 'Arrival of the train', 1896 இல் மும்பையிலும், 1897 இல் சென்னையில் விக்டோரியா ஹாலிலும் திரையிடப்பட்டது. தென் இந்தியாவின் முதல் திரையரங்கமான எலெக்ட்ரிக் தியேட்டரை 1900த்தில் வால்விக் மேஜர் என்ற ஆங்கிலேயர் கட்டியுள்ளார். இதுபோன்ற பல அரிய தகவல்களை இந்த ஆவணப் படம் நமக்குச் சொல்கிறது. வருணனைக் குரலும் திரைப்பட ஆய்வாளர்களின் நேர்காணல்களும் மாறிமாறி இத்தகவல்களைத் தருகின்றன. அதற்கேற்ப காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக்காலத் திரையரங்குகளும் விளம்பர உத்திகளும் ஒரு யூகமாக வடிவமைக்கப்பட்டுக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தியோடர் பாஸ்கரன், பாவேந்தன் ஆகியோரது நேர்காணல்கள் பல செய்திகளை பார்வையாளர்களுக்கு அளிப்பதுடன் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

தமிழ்நாட்டின் முதல் தரையரங்கான எலக்ட்ரிக் தியேட்டர் அஞ்சலகமாக (அண்ணா சாலை) மாறியிருப்பது, தென்னிந்தியாவின் முதல் கதாநாயகன் வின்சென்ட் சாமிக்கண்ணு இருட்டடிப்பு செய்யப்பட்டது போன்ற அரிய தகவல்கள் படத்தின் வாயிலாக கிடைக்கிறது.

சாதி, மதம், வர்க்கம் கடந்து அனைத்து மக்களும் ஒன்றுகூடும் இடமாக அந்தக்கால திரையரங்குகள் இருந்துள்ளன. துண்டுப் படங்களுக்கிடையே நடனம், குத்துச்சண்டை போன்றவை நடத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சி தான் இன்றைய தமிழ் சினிமாவில் பாட்டும் சண்டைக் காட்சியும் நகைச்சுவைக் காட்சியும் படத்திற்குத் தேவையில்லை என்றாலும் அவை சேர்க்கப்படுகின்றன என்கிறார் தியோடர் பாஸ்கரன்.

1931இல் பேசும் படம் வரும் வரைக்குமான பேசாப்படத்தின் வரலாற்றை இந்த ஆவணப் படம் பேசுகிறது.

செந்தமிழன் பற்றி....

விவசாயமும் பொதுவுடைமைச் சிந்தனையும் கொண்ட குடும்ப பின்னணியை உடைய செந்தமிழன், தஞ்சாவுரைச் சேர்ந்தவர். மக்கள் தொலைக்காட்சிக்காக 'தும்மல்', 'பச்சோந்தி' ஆகிய குறும்படங்களை இயக்கியுள்ளார். 'ஆடோடிகள்' எனும் ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இனி அவருடன்.....

கே : பத்திரிகையாளராக இருந்த நீங்கள் ஆவணப் படத்துறைக்கு வந்த பின்னணி குறித்து.

பத்திரிகையாளரின் காட்சி மொழி நீட்சி தான் இந்த ஆவணப்பட முயற்சி. நம்முடைய கருத்தியலை சுவராஸ்யமாக சொல்ல காட்சிமொழி சிறந்தது என்ற எண்ணம் ஏற்பட்டதால் இந்த ஆவணப்படத்துறைக்கு வந்தேன்.

காட்சி மொழி - பொழுதுபோக்குக்கானது, அச்சு மொழி அறிவு சம்மந்தப்பட்டது, என்கிற கருத்துண்டு. தொலைக்காட்சி நிகழ்சிகள் தான் இந்த கருத்துக்குக் காரணமாகும். காட்சி மொழியில் அச்சு மொழியின் பாதிப்பைக் கொடுக்க இந்த ஆவணஃகுறும்படம் நல்ல ஆதாரங்கள், என்று நான் நம்புகிறேன்.

கே : தமிழ் ஊமைப்பட வரலாற்றை ஆவணப்படமாக்கும் எண்ணம் எப்போது ஏற்பட்டது?

"முதலில் ஒரு 'டாக்குமெண்ட்' எடுக்கு வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இரண்டு ஆண்டுகள் சோதனைக்குப் பிறகு பணம் சேர்த்துவைத்தேன். அப்போது எதேச்சையாக 'தமிழ் சினிமாவின் முகங்கள்' எனும் தியோடர் பாஸ்கரன் புத்தகம் படித்தேன். சென்னையில் விக்டோரியா பப்ளிக்ஹால் பற்றி எழுதியிருந்தார். 1897இல் தென்னிந்தியாவில் முதல் திரையிடல் பற்றியும் அந்நூலில் எழுதியிருந்தார்.

கடந்த அறுபது ஆண்டுகளாக தமிழ்ச் சமுகத்தை ஆதிக்கம் செலுத்தி வருகிறது, தமிழ்சினிமா. சினிமாவின் தோற்றம், குறித்த பதிவுஃவரலாறு இல்லையே என்கிற ஆதங்கம் எனக்கு இருந்தது. கூடவே யாரும் செய்யாததைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் என்னிடம் அப்போது இருந்தது. அதனால் தான் இந்த ஆவணப்படத்தை ஆர்வத்துடன் செய்தேன். சாமிகண்ணு பற்றி கூடுதலாகச் சேர்த்துள்ளேன். முழுமையாகச் செய்ய வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தேன்".

கே : விஷூவல் கம்யூனிகேசன் மாணவர்கள் இன்றைய நிறைய குறும்படங்களை எடுக்கிறார்கள். இது ஆரொக்கியமான போக்கா?

"விஷூவல் கம்யுனிகேஷன் மாணவர்கள் அனுபவமின்றிப் படமெடுக்கிறார்கள். 1980 - 2000 வரை கவிதை எழுதம் மனப்போக்கு பரவலாக இருந்தது. அந்தப் போக்கு இன்று குறும்படத் துறையில் நிலவுகிறது. அடையாளம் தேடும் வேட்கை எல்லோருக்கும் இருக்கு. இன்றைக்கு விஸ்காம் மாணவர்களிடம் கவிதை எழுதி அடையாளம் தேடும் முயற்சியில்லை. அதற்குப் பதிலாக குறும்படம் எடுக்கிறார்கள். எதையும் அங்கீகாரத்திற்காகச் செய்வதை விட நேசத்தின் அடிப்படையில் செய்ய வேண்டும். எல்லோரும் கவிதை எழுதியதால் மண்ணின் இயைபுக்கு ஏற்ற கவிதை படைப்பது மாறி மேற்கத்திய இறக்குமதி ஆகிவிட்டது. கல்லூரிகளுக்கு வெளியில் ஆவணப்படத்துறை ஒரு இயக்கமாக மாறும் சூழல் இருக்கு. இலக்கியவாதி குழுக்கள் போல் இங்கும் உருவாக வேண்டும்".

கே : இன்றைய ஆவணப்படங்கள் குறித்து?

"நியூஸ் ரீல் தன்மையில் ஆவணப்படங்கள் இருக்கக் கூடாது. சம்பவ நிகழ்சிகளை ஆவணப்படமாக எடுக்கும் போது காட்சிப் படுத்துவதில் கவனம் தேவை. 'என்று தணியும்' ஆவணப்படத்தில் பூனை கண்ணை மூடும் ஒரு காட்சி வரும். அதற்கு நிறைய கைதட்டல். ஒரு இயக்குநரின் பங்கு என்பது இங்குதான் செயல்படுகிறது. சொர்ணவேலின் ' waves form the deep 'ல் அழகாகக் காட்சி படுத்தியிருப்பார். ஒரு சம்பவத்தை படைப்பாகச் செய்யும் முயற்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு இந்த படம். ரவிசுப்ரமணியத்தின் ஷஅரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்  ஆவணப் படத்தில் கடற்கரையில் அரங்கநாதன் அமர்ந்திருப்பார். அருகில் ஒரு காகம் இருக்கும். இறந்த நம் முன்னோர்கள் காகமாகி விடுவர் என்பது ஐதீகம். காகம் ஆனவரும் காகம் ஆகப் போகிறவரும் ஒரே காட்சியில் வருவதாக நான் உணர்ந்தேன்".

கே : பேசா மொழி அனுபவம் குறித்து கொஞ்சம் சொல்லுங்கள்?

தியோடர் பாஸ்கரன், பாவேந்தன் ஆகிய இருவருக்கும் நான் நிறைய கடமைப்பட்டுள்ளேன். இருவரும் பெரிய உதவி செய்தார்கள். பேரா. மு.ராமசாமி இதில் நடித்தவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியளித்தார். னுழஉரஅநவெ ளநவ போட்டு பல காட்சிகள் எடுத்துள்ளோம், எல்லாம் நாங்களே செய்தோம்".

கே : அதற்கான வரவேற்பு எப்படி இருந்தது?

"சிறுபத்திரிகைகள் எழுதும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் பெரும் பத்திரிகைகள் தான் எழுதின. சுஜாதா, பாமரன் ஆகியோர் குமுதம், விகடன், குங்குமம் பத்திரிகையில் எழுதினார்கள். டாக்குமெண்ட் பார்வையாளர்களிடம் சென்று சேர்ந்தது. பெரிய மனக்குறையெல்லாம் ஒன்றும் கிடையாது. ஷதும்மல்  பார்த்துவிட்டு தியோடர் குறிப்பிட்டிருந்தார். காலச்சுவடு நேர்காணலில் முக்கியமான ஆவணப்பட இயக்குநர்களில் தியோடர் பாஸ்கரன் என் பெயரும் சொல்லி இருப்பது மகிழ்ச்சியான செய்தி".

கே : உங்களைக் கவர்ந்த குறும்பட ஃ ஆவணப்பட இயக்குநர்கள்?

"சொர்ணவேல், ரவிசுப்ரமணியன், காஞ்சனா, சீனிவாசன், அம்சன் குமார், தினகரன் ஜெய்".

கே : தமிழ்க்குறும்பட, ஆவணப்பட சூழல் குறித்து?

"புத்தகம் போடுவது அறிவு சார்ந்ததும் அடையாளம் சார்ந்ததும் ஆகும். ஆனால் புத்தகம் போட்டு வாழ்க்கையை நடத்த முடியாது. னுழஉரஅநவெ வைத்து நல்ல வாழ்க்கை நடத்த முடியும். சில பன்னாட்டு நிறுவனங்களிடம் பணம் வாங்கி நல்ல வாழ்க்கை நடத்த முடியும். பொருளாதார படையெடுப்பு நடத்துவதற்கு முன்னால் நம் பண்பாட்டை நம் மக்களை ஆய்வு செய்வதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் டாக்குமெண்ட் எடுக்க நிறைய பணம் தருகின்றன.

' ஜான்பெர்கின்ஸ் ' எழுதிய ஒரு பொருளாதார அடியாரின் ஒப்புதல் வாக்குமூலம் நூலில் தென் அமெரிக்க நாடுகளில் பழங்குடியினர் மற்றும் இனக்குழுக்கள் மக்களைப் புரிந்து கொண்டு அம்மக்கள் ஒடுக்கப்பட்டதை குறிப்பிட்டுள்ளார். அதுபோல இந்த மக்களின் பழக்கவழக்கங்களை னுழஉரஅநவெ செய்து வெளிநாடுகளுக்கு அனுப்புவது என்பது உளவுவேலை செய்வதற்கு ஒப்பாகும். பல்வேறு இனக்குழவை அழிக்கிறவன் எதற்குத் தமிழ்நாட்டு மலைவாழ் மக்களைப் பற்றி ஆவணப்படம் எடுக்க வேண்டும்? பன்னாட்டு நிதியுடன் ஆவணப்படம் எடுப்பவர்கள் இதை உணர்ந்திருக்கிறார்களா என்று தெரியாது. ஆனால் ஏகாதிபத்தியத்திற்கு துணை போகும் வேலையை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இனவரைவியல் படமெடுப்பவர்கள் அவர்கள் பார்வையிலிருந்து ஒரு சமுகத்தின் பழக்க வழக்கங்களை மதிப்பிடுகிறார்கள் இது தவறான அணுகுமுறை. துப்ருமண உறவு முறை, ஆண் பெண் உறவுமுறை குடும்ப கட்டமைப்பு எல்லாமே சமுகப் பொருளாதாரத்தின் அடிப்படையில் அமைவது.

வெறுமனே ' ஷாக் வேல்யூ ' ஏற்படுத்த டாக்குமெண்ட் எடுக்கக்கூடாது. ' ஷாக் வேல்யூ ' க்காக படம் எடுப்பதென்றால் வேறு விசயங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை எடுத்துவிட்டு போகலாமே? இன வரவியல் பற்றி எடுக்கும் போது கவனமாக செயல்பட வேண்டும் என்பது தான் நம் விருப்பம்".

- யாழினி முனுசாமி

வெள்ளிக்கிழமைதோறும் ஒரு குறும்பட இயக்குனரை சந்திக்கலாம்.

தினகரன் ஜெய் - குறும்பட இயக்குநர் - 1
வ.கௌதமன் - குறும்பட இயக்குநர் - 2
முருக சிவகுமார் - குறும்பட இயக்குநர் - 3
அருண்மொழி - குறும்பட இயக்குநர் - 4
ஆர்.ரவிக்குமார் - குறும்பட இயக்குநர் - 5
மணிமேகலை நாகலிங்கம் - குறும்பட இயக்குநர் - 6
டி.அருள் எழிலன் - குறும்பட இயக்குநர் - 7
இரா.பாலாஜி - குறும்பட இயக்குநர் - 8
தாண்டவக்கோன் - குறும்பட இயக்குநர் - 9
ரவிசுப்பிரமணியன் - குறும்பட இயக்குநர் - 10


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...