???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி 0 பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்து்றை போலீசார் சோதனை: சார் பதிவாளர்கள் கைது 0 தினகரனைத் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: ராஜேந்திர பாலாஜி 0 தமிழகத்தில் அடுத்த இருநாட்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 25 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் 0 இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா அறிவுரை! 0 இடைத்தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது! 0 அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததுள்ளது: ஸ்டாலின் 0 டெண்டர் முறைகேடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க இறுதி கெடு 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சுதந்திர சூரியன் உதயம் ! - தெற்கே உதித்த சூரியன் 7 - ராவ்

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   26 , 2007  18:51:23 IST

கும்பகோணம் அரசினர் கல்லூரியில் படித்தவர் சுப்பிரமணிய சாஸ்திரிகள்.(சுவாமிகள் தந்தையார்) . அங்குள்ள நேடிவ் ஸ்கூலில் ஆசிரியராக பணிபுரிந்தார். பிறகு அரசு கல்வி இலாகாவில் சேர்ந்து மேலதிகாரியானார் . அப்போது தென்னாற்காடு மாவட்டத்தில் பல ஊர்களில் பணிபுரிந்தார்.

மகாலட்சுமியின் தந்தையார் நாகேஸ்வர சாஸ்திரிகள் தஞ்சைப் பகுதியில் பல குடும்பங்களுக்கு ஆச்சாரியராக இருந்தவர். கணபதி சாஸ்திரிகள் வீட்டில் நடந்த ஒரு விசேஷத்திற்கு இவர் வர நேர்ந்தது.

அப்போது சுப்பிரமணியம் - மகாலட்சுமி திருமணம் நிச்சயமாயிற்று.

மகாலட்சுமிக்கு அப்போது ஏழுவயது . சுப்பிரமணியத்திற்கு 18 வயது. ஈச்சன்குடியில் திருமணம் நடந்தது.

சுப்பிரமணிய சாஸ்திரிகள் விழுப்புரத்தில் பணியாற்றிய போது அவரது இரண்டாவது புதல்வராக 1894 மே 20 ம் தேதி சுவாமிகள் பிறந்தார். அது ஞாயிற்றுக்கிழமை . அனுஷ நட்சத்திரம் . ]
( ஜயவருஷம் வைகாசி 8 ம் தேதி )

முதல் பையனுக்கு கணபதி என்று பெயர்.

நமது சுவாமிகளுக்கு சுவாமி நாதன் என்று பெயரிடப்பட்டது. குல தெய்வமான சுவாமிமலை முருகனின் திருப்பெயரையே இவருக்கு வைத்தனர்.

இளமையிலே கவர்ச்சிகரமான தோற்றம் உடையவராக திகழ்ந்தார் சுவாமிநாதன் என்கிற நம் சுவாமிகள்.

எட்டாவது வயது வரை வீட்டிலேயே கல்வி கற்று தரப்பட்டது. சங்கீதமும் கற்றுக்கொண்டார் .அழகாகப் பாடுவார் .

இவருக்கு ஞாபகசக்தி அப்போதே வியக்கத்தக்க விதத்தில் இருந்தது. ஒரு முறை செவி மடுத்தால் , உடனே மனதில் பதிந்து விடும்.

தந்தை திண்டிவனம் மாற்றல் ஆகவே ,அங்குள்ள ஆற்காடு அமெரிக்கன் மிஷன் உயர் நிலைப்பள்ளியில் இரண்டாது பாரத்தில் சேர்க்கப்பட்டார் சுவாமிகள்.

சுவாமி நாதனுக்கு என்று நண்பர் குழாம் ஏற்பட்டது . சிரிக்க சிரிக்க பேசி , எல்லாரையும் மகிழ்விக்கும் ஆற்றல் இருந்தது. பல பொருள் உள்ள வார்த்தைகளை கலந்து பேசி திகைப்பூட்டுவார். விடுகதைகள் போடுவார்.

தந்தையாருக்கு இவரது புத்திசாலித்தனத்தைக் கண்டு ஒரு புறம் வியப்பு ! தந்தையாருக்கு ' செல்லம் ' ஆகிவிட்டார் ! ஒரு கிளியின் பெயரை வைத்து செல்லமாக இவரைக்கூப்பிடுவார் தந்தை !

பள்ளிப்படிப்பில் முதல் இடம் . தேர்வுகளில் முதன்மை . வருட இறுதியில் பள்ளி விழாவில் இவரே எல்லாப்போட்டிகளிலும் முதல் பரிசு பெறுவார்! ஒருமுறை பைபிளில் தேர்ச்சி பெற்றதற்கு முதல்பரிசு சுவாமிநாதன் பெற்றார் !

அதனால் அந்த பள்ளியில் இருந்த கிறிஸ்தவ ஆசிரியர்கள் அவர் மீது மிகுந்த அன்பு காட்டி பாராட்டிவந்தார்கள்.

ஒருமுறை பள்ளிக்கூடத்துக்கு டி.ஈ.ஓ. ( மாவட்ட கல்வி அதிகாரி ) மேற்பார்வையிட வந்தார். இவர் படித்த மூன்றாவது பாரம் வகுப்புக்கு வந்த போது , பல கேள்விகளுக்கு சுவாமிநாதன் தங்கு தடையின்றி அளித்த சரியான பதில்களைக் கண்டு டி.ஈ.ஓ. திகைத்துப் போனார். தன்னுடன் சுவாமி நாதனை மேல்வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றார்.

அந்த மேல்வகுப்பில் , டி.ஈ.ஓ. கேட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் சொல்லாமல் நிற்க , சுவாமிநாதன் அதற்கெல்லாம் பதில் கூறினார்.

அந்த கல்வி அதிகாரி 'இந்த பையன் யார் ' என்று விசாரித்தார். தன் கீழ் பணிபுரியும் சுப்பிரமணிய சாஸ்திரியாரின் பையன் என்று அறிந்தார். "உங்கள் பையன் மிகப் பெரிய மேதாவியாக வரப்போகிறான் " என்று அவரிடம் பாராட்டினார் டி.ஈ.ஓ.

எதிர்காலத்தில் தன் மகன் கலெக்டர் போன்ற மிகப்பெரிய அரசு உத்தியோகத்தை வகிப்பான் என்று நினைத்தார் தந்தை ! அதை விட பெரிய உலகம் போற்றும் ஞான மேதையாக வருவார் என்று அவர் நினைக்கவில்லை .

தெரியுமா?
பிராமணர்களே ரிஷிகள் ஆனார்கள் என்பது சரி இல்லை.

கடுமையான தவம், ஆன்மீக அறிவு இவற்றால் ரிஷிகளானார்கள். பிரம்மரிஷி என்பது மிகவும் உயர்ந்த பட்டம்.

மகரிஷி வியாசர், மீனவப் பெண்மனிக்குப் பிறந்தவர். வால்மிகி ஒரு வேடர்.மகரிஷி சுதர் ருஷ்யசிருங்கர். கௌதமர், வஷிஸ்டர், அகத்தியர் பிரமணர்கள் அல்ல. விசுவாமித்திரர் பிறப்பால் சத்திரியர். தவபலத்தால் பிரம்மரிஷி ஆனார்.(இன்னும் வரும்)

புதன் தோறும் இரவு ராவ் அவர்களின் 'தெற்கே உதித்த சூரியன்' அந்திமழையில் வெளிவரும்....

'தெற்கே உதித்த சூரியன்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.


தெற்கே உதித்த சூரியன்-1 - ராவ்
ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம் நடத்திய சுவாமிகள் -தெற்கே உதித்த சூரியன் -2 - ராவ்
மனசாட்சி விசுவரூபம் எடுத்தது - தெற்கே உதித்த சூரியன் - 3 - ராவ்
கழுத்தில் இருந்த மாலை வாடியது - தெற்கே உதித்த சூரியன் - 4 - ராவ்
இன்னொரு இரண்யன் - தெற்கே உதித்த சூரியன் - 5 - ராவ்
மூப்பனார் செய்த உதவி ! - தெற்கே உதித்த சூரியன் - 6 - ராவ்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...