???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி 0 பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்து்றை போலீசார் சோதனை: சார் பதிவாளர்கள் கைது 0 தினகரனைத் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: ராஜேந்திர பாலாஜி 0 தமிழகத்தில் அடுத்த இருநாட்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 25 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் 0 இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா அறிவுரை! 0 இடைத்தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது! 0 அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததுள்ளது: ஸ்டாலின் 0 டெண்டர் முறைகேடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க இறுதி கெடு 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இன்னொரு இரண்யன் - தெற்கே உதித்த சூரியன் 5 - ராவ்

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   12 , 2007  16:10:43 IST

காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக இருந்த ஸ்ரீகௌட சதாசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாழ்க்கை வித்தியாசமானது.

காஷ்மீரத்தில் அமைச்சராக இருந்த தேவ மிச்ரன் என்பவரின் மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே அத்வைத நெறியில் இவருக்கு பற்று மிகுந்து இருந்தது. இவருடைய தந்தை திடீரென்று ஜைன மதத்தை தழுவினார்.

தன் மகனை மாற்ற இவர் கடுமையான முறைகளை கையாண்டார். பிரகலாதனை அவன் தந்தை இரண்யன் படுத்தியது போல!

தந்தையின் முயற்சிகள் பலிக்கவில்லை . கடைசியில் தன் மகனை சிந்து நதியில் தூக்கி வீசினார்.

நதி நீரில் தடுமாறிப் போராடிக் கொண்டிருந்தவரை பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் மீட்டார். வளர்த்தார். அந்தப் பகுதியில் யாத்திரை மேற்கொண்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியாரிடம்
சிறுவனை ஒப்படைத்தார். பாலகுரு சதாசிவேந்திரர் ஆனார்.

தன் 17 வது வயதில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஆனார். காஷ்மீர நாட்டு மக்கள் அன்புடன் அளித்த தங்கப்பல்லக்கில் நாடு முழுவதும் பயணம் செய்தார். பாலிக , பௌத்த மதத்தை வளராமல் தடுத்தார் இவர்.

இப்படி வாழையடி வாழையாக மாபெரும் ஞானிகள் காஞ்சி மடத்தின் தலைமை பீடத்தை அலங்கரித்தனர். மக்கள் மட்டுமின்றி மன்னர்களும் அவர்களுக்குத் தலைவணங்கி , அவர்கள் இட்ட கட்டளைகளை நிறைவேற்றினர். இந்து மதம் தழைத்தது.

எல்லா ஞானிகளின் வரலாற்றை அறிவது என்பதும் எழுதுவது என்பதும் சாதாரணமானதல்ல. சிலரைப் பற்றி மட்டுமே இங்கே பார்ப்போம் .

இவர்களில் ஸ்ரீபகவன் நாமபோதேந்திரர் என்றும் ஸ்ரீபோதேந்திரர் என்றும் போற்றப்பட்ட மாபெரும் தவயோகியை அறிவது அவசியம்.

ராமபிரானின் நாமத்தை பக்தியுடன் சொல்வதினாலேயே மாபெரும் நன்மைகளைப் பெறலாம் என்பதை எடுத்துரைத்தார் இவர்.

இவரது நாம சித்தாந்த நெறியால் அக்காலத்தில் இருந்த பெரிய ஞானிகள் பலர் இவரிடம் பக்தி கொண்டனர்.

போதேந்திரரின் , நாம சித்தாந்தம் தமிழகத்தில் பஜனை சம்பிரதாயம் தோன்ற காரணமாயிற்று.

திருவிடைமருதூர் அடுத்து உள்ள கோவிந்தபுரத்தில் ஒரு பௌர்ணமியில் அவர் சித்தி
அடைந்தார்.

இவரது சமாதி உள்ள அதிஷ்டானத்தில் இன்றும் நள்ளிரவு அமைதியில் இனிய ஒலியாக ராமநாமம் ஒலிக்கும் அற்புதம் நிகழ்வதாக சொல்லப்படுகிறது.

நமது பரமாச்சாரியார் அவர்கள் தனது இளமைக் காலத்தில் கோவிந்தபுரத்துக்கு அடிக்கடி சென்று தவம் புரிவது வழக்கம்.

இவருக்குப் பின்னர் வந்த சுவாமிகள் காலத்தில் ஸ்ரீமடம் கும்பகோணத்துக்கு இடம்பெயர்ந்தது. அதனால் நமது பரமாச்சாரியார் வரையில் ' கும்பகோணம் சுவாமிகள்' என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.

காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான கட்டடங்கள் இந்தியா முழுவதும் உண்டு. கும்பகோணம் உட்பட . சங்கராச்சாரியார் எங்கே முகாமிடுகிறாரோ அந்த ஊருக்கு பெரும் புகழ் கிட்டும் . . கும்பகோணத்தில் சங்கராச்சாரியார் மரபினர் 150 ஆண்டுகள் இருந்தனர். அதற்குத் தனிப்பெருமை ஏற்பட்டது.

கும்பகோணத்துக்கு ஸ்ரீமடம் இடம் மாறியதற்குக் காரணம் வலுவான ' இந்து அரசு ' இல்லாத சூழ்நிலை என்கிறது சரித்திரம் .


உண்மையில் , இருபதாம் நூற்றாண்டு ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட சரித்திரத்தில் மாபெரும் பொற்காலம்.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதியாக நமது ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1907 முதல் அருள் புரிந்தார்.

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1954 முதல் -

விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1983 முதல்

அருட்கோலம் பூண்டு பரமாச்சாரியாருடன் இந்து மதத்துக்கு பெருமை சேர்த்தனர்.


தெரியுமா ?

60 விநாடிகள் - ஒரு நாழிகை
2 நாழிகை - ஒரு முகூர்த்தம்
6 நாழிகைகள் - 1 யாமம்
4 யாமங்கள் - ஒரு பகல்
4 யாமங்கள் - ஒரு இரவு
15 நாட்கள் - ஒரு பட்சம்

* சந்திரன் தேயும் 15 நாட்கள் - கிருஷ்ணபட்சம்
* சந்திரன் வளர்பிறை - சுக்லபட்சம்
* பித்ருக்களுக்கு கிருஷ்ணபட்சத்து 15 நாட்கள் ஒரு பகல்
* சுக்லபட்சத்து 15 நாட்கள் ஒரு இரவு
* நமது ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாள்
* அமாவாசை பித்ருக்களுக்கு இரவு முடிந்து பகல் ஆரம்பிப்பதால் நீர்க்கடன் தர்ப்பணம் செய்கிறோம்.
(இன்னும் வரும்)

புதன் தோறும் இரவு ராவ் அவர்களின் 'தெற்கே உதித்த சூரியன்' அந்திமழையில் வெளிவரும்....

'தெற்கே உதித்த சூரியன்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.


தெற்கே உதித்த சூரியன்-1 - ராவ்
ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம் நடத்திய சுவாமிகள் -தெற்கே உதித்த சூரியன் -2 - ராவ்
மனசாட்சி விசுவரூபம் எடுத்தது - தெற்கே உதித்த சூரியன் - 3 - ராவ்
கழுத்தில் இருந்த மாலை வாடியது - தெற்கே உதித்த சூரியன் - 4 - ராவ்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...