???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி 0 பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்து்றை போலீசார் சோதனை: சார் பதிவாளர்கள் கைது 0 தினகரனைத் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: ராஜேந்திர பாலாஜி 0 தமிழகத்தில் அடுத்த இருநாட்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 25 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் 0 இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா அறிவுரை! 0 இடைத்தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது! 0 அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததுள்ளது: ஸ்டாலின் 0 டெண்டர் முறைகேடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க இறுதி கெடு 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கழுத்தில் இருந்த மாலை வாடியது - தெற்கே உதித்த சூரியன் 4 - ராவ்

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   05 , 2007  17:08:36 IST

இறைவன் கருணையால் தோன்றிய ரிஷிகள் , வேதங்களைக் காத்தார்கள் . பின்னர் வந்த ஞானவான்கள் இந்து மதத்தின் தத்துவங்களை - கோட்பாடுகளை வகுத்தார்கள்.

ரிஷிகள் விஞ்ஞானிகளாக திகழ்ந்தார்கள். இறைவன் சிருஷ்டியை பகுத்தறிந்து வேத உண்மைகளை கண்டறிந்தார்கள் . வாழ வழி வகுத்தார்கள்.

இந்து மதத்தின் படி - மனிதன் தர்மத்துக்குக் கட்டுப்பட்டவன். தர்மம் தான் நமது மதத்தின் கண் எனலாம். அதற்குத்தான் அழிவு என்பதே கிடையாது.

இந்து மதத்துக்கு மேன்மேலும் செழிப்பூட்டியவர்கள் ஸ்ரீ ஆதிசங்கரர் , ஸ்ரீ ராமானுஜர் , ஸ்ரீ மத்வர்.

இந்த மூன்று மகான்களும் தோன்றிய காலத்தில் இந்து மதம் புதிய சித்தாந்தங்களால்
சோதனைக்கு ஆளாகியது.

புதிய மதங்களின் பலமான தாக்குதலால் நிலைகுலைந்து போயிருந்தது. இம்மகான்கள் மூவரும் , இந்து மதத்தின் உயர்ந்த நோக்கங்களை தத்துவங்களை மீண்டும் நிலை நாட்டி - பாரதத்தின் ஆன்மீகப் பெருமையை உலகில் நிலை நிறுத்திக் காட்டினார்கள்.

இந்து மதத்தில் இந்த காலகட்டத்தில் பெரும் சடங்குகள் தலை தூக்கி , பலி இடுவதே முக்கியமாயிற்று . இதற்கு அரசர்கள் ஆதரவு! சாமானிய பொதுமக்களோ இவைகளை பின்பற்ற முடியாத குழப்பத்தில். புத்தமதம் எழுச்சி பெற்றது. கபாலிகம் உட்பட 64 வித சமயப் பிரிவுகள் கிளம்பி மக்கள் திகைத்தனர்.

ஆதிசங்கரர் இந்த குழப்பங்களை நீக்கி , நாடெங்கும் பயணித்து , இந்து மதம் மீண்டும் செழிக்கச் செய்தார் - மீமாம்ச கொள்கைகளை முறியடித்து , அத்வைதக் கருத்தைப் பரப்பி ஷண்மதஸ்தாபனம் செய்தார்.

வேதம் வேதம் சார்ந்த பல நூல்களுக்கு உரை எழுதி , பக்தியும் ஞானமும் பரப்பி தெய்வீக மனிதராக பாரதத் திரு நாட்டில் உலாவந்தார் சங்கரர். இந்து மதம் மீண்டும் உயிர் பெற்றது. அசைக்க முடியாத சக்தி ஆக மாறிவிட்டது.

ஆதி சங்கரர் நிறுவிய மடங்களில் ஒன்று தான் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்.

ஒரு காலத்தில் காஞ்சி மாநகரம் கல்வி நிலையங்களின் தாயகமாக இருந்தது. ஆன்மீக தத்துவங்களை பரப்பிய பல்கலைக்கழகங்கள் நிலவிய அருள் மண் . பல்லவர் கால முற்பகுதியிலேயே கி.பி. 3 - 4 நூற்றாண்டுகளிலேயே உலக அறிஞர்கள் காஞ்சியில் இருந்த பல்கலைக்கழகமான கடிகாவில் கல்வி கற்றதாக செப்பேடுகள் கூறும்.

திருநாவுக்கரசர் , கல்வியிற் கரையில்லா காஞ்சி மாநகர் என்று பாடுகிறார் . நாலந்தா பல்கலைக் கழகத்துக்கே வழிகாட்டியாக இருந்திருக்கிறது.

காஞ்சிக்கு மேலும் பெருமை சேர்த்தது - ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகளின் திருமரபாகும்.

வழிவழி வந்த சங்கராச்சாரியார் சுவாமிகள் நடமாடும் தெய்வங்களாக இருந்தார்கள். எளிமையே அவர்களது ஆபரணாம் . கருணையே அவர்கள் நமக்கு அளித்த பிரசாதம்.

' நகரேஷுகாஞ்சி ' என்று நகரங்களில் காஞ்சி மாநகரமே சிறந்தது என்று ஒரு காலத்தில் போற்றப்பட்டது. அது போல இந்து தர்மம் காப்பதற்கு நிறுவிய மடங்களில் காஞ்சி காம கோடி பீடமே சிறந்து விளங்கியது.

இந்து மதத்தை அழியாது நிலை நிறுத்திட உழைத்த ஆதி சங்கரருக்குப் பிறகு , காஞ்சி காமகோடி பீடத்தின் இரண்டவது ஆச்சாரியராக இருந்தவர் ஸ்ரீ சுரேச்வரர் .

இவர் யார் என்ற சரித்திரம் வியப்பூட்டும் .

ஆதி சங்கரரோடு சவால்விட்டு வாதாடியவர் . மண்டன மிச்ரர் என்று ஆரம்பத்தில் இவர் பெயர். நர்மதை ஆற்றங்கரையில் ' மாகிஷ்மதி ' என்கிற சிற்றூரில் வாழ்ந்தவர். ' சரஸவாணி ' என்பது இவர் துணைவியாரின் பெயர் .சரசுவதி தேவியாரின் அம்சமான இவர் சிறந்த பெண்மணியாக
திகழ்ந்தார்.

மண்டன மிச்ரர் , கர்ம மார்க்கத்தில் பெரும் பற்று கொண்டவராக இருந்தார்.

சங்கரர் ஞான மார்க்கத்தினர். சங்கரர் இவருடன் வாதம் தொடங்கிய போது நடுவர் சரஸவாணி ! இரண்டு மலர் மாலைகளைக் கொண்டுவந்து , இருவர் கழுத்திலும் அணியச்செய்தார் சரஸவாணி . யார் கழுத்தில் உள்ள மாலை வாடுகிறதோ அவர் தோற்றவர். தோற்றவர் வென்றவரின் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்பது முடிவு.

இரு பெரும் அறிஞர்களும் பல நாட்கள் வாதிட்டனர். இதற்கு முடிவே வராதோ என்று மலைக்கும் அளவுக்கு விவாதம் நீடித்தது. மண்டன மிச்ரர் கழுத்தில் இருந்த மாலையே வாடியது.

தன் தோல்வியை ஏற்று துறவறம் பூண்டார் மண்டன மிச்ரர். சங்கராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று , ஸ்ரீசுரேச்வரர் என்னும் பெயர் பெற்றார். ஆதிசங்கரருடனேயே இருந்தார். காஞ்சியில் தங்கினார் ஸ்ரீசுரேச்வரர்.

இவரே காஞ்சி பீடத்தின் இரண்டாவது பீடாதிபதி.

காஞ்சிபுரத்தில் கச்சபேச்வரர் கோவிலுக்கருகில் மண்டன மிச்ரர் அக்ரகாரம் அமைக்கப்பட்டது.!

அடுத்து காஞ்சி பீடாதிபதியாக பதவியேற்றவர் ஸ்ரீசர்வக்ஞாத்மேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

அறிவுச்சுடராக விளங்கிய இப்பெரும் ஞானி , ஏழு வயதிலேயே சங்கரருடன் வாதிட்டவர்.

தாமிரவருணி நதிக்கரையில் வேத மேதைகள் சங்கரருடன் வாதிட்டனர். அவர்களில் இந்த ஏழு வயது மேதையும் ஒருவர். மூன்று நாட்கள் வாதிட்டு நான்காம் நாள் சங்கரரிடம் சரணடைந்து துறவறம் பூண்டார். ஆதிசங்கரரின் பேரன்புக்கு உரியவராக இருந்தார்.

ஸ்ரீசுரேச்வரரிடம் அவரது பாதுகாப்பில் ஏழு வயது ஞானியை ஒப்படைத்தார் சங்கரர்.

காஞ்சி காமகோடி பீடாதிபதியாக ஸ்ரீசுரேச்வரர் 70 ஆண்டு காலம் இருந்தார். அதன்பிறகு ஸ்ரீசர்வக்ஞாத்மேந்திர சுவாமிகள் 42 ஆண்டுகாலம் அருள்புரிந்தார்.

இப்படி வழிவழியாக ஞான தபோதனர்களால் மேன்மேலும் பாரததேசமெங்கும் ஒளி வீசத்தொடங்கியது காஞ்சி காமகோடி மடம்.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மகாஞானிகள் இம்மடத்தை அலங்கரித்தார்கள். அவர்கள் பாரத தேசத்தில் தலையெடுத்த இந்து தர்மத்துக்கு மாறான மதங்களை தலைதூக்கவிடாமல் முற்றுப்புள்ளி வைத்தனர். எந்த விதத்தில் என்றால் -

தங்கள் கருத்துக்களை இடைவிடாது பரப்பிய அகிம்சை முறையால் மட்டுமே! அரசர்களும் தனவந்தர்களும் ஓடோடிவந்து இந்த தவயோகிகள் முன் மண்டியிட்டு ஆதரவு தந்தனர்.

ஸ்ரீக்ருபாசங்கரேந்திர சுவாமிகள் காஞ்சி மாமடத்தின் ஒன்பதாவது பீடாதிபதி . ஆதிசங்கரர் ஆறு சமயங்களை நிறுவினார். ஆனால் ,அடுத்த ஒரு நூறு ஆண்டில் பிற சமயங்கள் மறுபடியும் செல்வாக்கு பெறத்தொடங்கின.

பாரத தேசத்தில் கபாலிகம் காளாமுகம் முதலிய சமயங்கள் மறுபடியும் பெற்ற செல்வாக்கையும் , தாந்தரிக வழிபாட்டு முறைகளையும் வளராமல் தடுக்க இவர் வைதீக வழிபாட்டு சிறப்புகளை பரப்பினார். ஆதிசங்கரருடன் ஒப்பிடும் அளவுக்கு இவர் பணிபுரிந்து , இந்து மதத்தின் அடித்தளத்தை பலப்படுத்தினார் .

இவரே காஞ்சி , காசி , திருவொற்றியூர் , திருவேற்காடு முதலான இடங்களில் யந்திர பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்த ஞானி விந்திய மலைப்பகுதியில் சித்தி அடைந்தார்.

(இன்னும் வரும்)

புதன் தோறும் இரவு ராவ் அவர்களின் 'தெற்கே உதித்த சூரியன்' அந்திமழையில் வெளிவரும்....

'தெற்கே உதித்த சூரியன்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.


தெற்கே உதித்த சூரியன்-1 - ராவ்
ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம் நடத்திய சுவாமிகள் -தெற்கே உதித்த சூரியன் -2 - ராவ்
மனசாட்சி விசுவரூபம் எடுத்தது - தெற்கே உதித்த சூரியன் - 3 - ராவ்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...