???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அசோக்குமார் தற்கொலை : டிவிட்டரில் விஜய் ஆண்டனிக்கு காட்டமாக பதில் சொன்ன கரு.பழனியப்பன்! 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிகாரி நியமனம்! 0 வேலூர் அருகே நான்கு பள்ளி மாணவிகள் தற்கொலை! 0 பாஜக ஆட்சியில் தொழிலதிபர்கள்தான் முன்னேற முடியும்: ராகுல் காந்தி தாக்கு 0 ஹாங்காங் பாட்மிண்டன் : அரை இறுதியில் பி.வி. சிந்து 0 பத்மாவதி படத்தை திரையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்து தருவோம்: மம்தா பானர்ஜி 0 ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபரானார் எம்மர்சன் நாங்காக்வா! 0 தமிழில் படித்தோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை : அரசாணையை பின்பற்ற நீதிமன்றம் உத்தரவு! 0 முதலமைச்சர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாரா : செந்தில் பாலாஜி சவால்! 0 திருப்பதியில் காதலரை கரம் பிடித்தார் நமிதா! 0 அஜித்-சிவா கூட்டணியில் ‘விசுவாசம்’! 0 தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்த பாஜக எம்பிக்கு பிரகாஷ்ராஜ் நோட்டீஸ்! 0 தீபாவை அதிர வைத்த தேர்தல் ஆணையம்! 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திருநாவுக்கரசர் 0 முதல்வர் மற்றும் துணை முதல்வர் கூட்டறிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இரா.பாலாஜி - குறும்பட இயக்குநர் 8

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   02 , 2007  11:22:24 IST

இரா.பாலாஜி குறும்படத் துறையில் ஆர்வம் கொண்ட இவர், கவிதை, ஓவியம் போன்ற நுண்கலைகளிலும் இயங்கி வருகிறார்.

'தோழர் அம்பேத்கர்'  எனும் ஆவணப்படத்தையும், செய்யாறு அருகில் 'தொழுப்பேடு' கிராமத்தில் ஆதிக்க சாதியினரின் தாக்குதலுக்கு அஞ்சி 140 தலித் குடும்பங்கள் பூர்விகமான இடத்தைக் காலி செய்து விட்டு புலம்பெயர்ந்து ஏரிப் பகுதியில் குடியேறிய நிகழ்வை வைத்து 'தொழுப்பேடு'  எனும் ஆவணப் படத்தையும், அமெரிக்காவும் பிரிட்டனும் அத்து மீறி நடத்திய ஈராக் யுத்தத்தைப் பற்றி 'கழுகுகள்'  எனும் ஆவணப்படத்தையும் நண்பர்களுடன் இணைந்து இயக்கி இருக்கிறார்.

'தோழர் அம்பேத்கர்'  ஆவணப் படத்தில் அம்பேத்கரின் போராட்டங்களையும் தலித் மக்களின் அவல நிலையையும் காட்சி படுத்தியுள்ளார். தலித் மக்களின் விடுதலைக்கான தீர்வையும் முன்வைத்துள்ளார். 'கழுகுகள் ' எனும் ஆவணப் படத்தில் ஈராக் யுத்தத்தை மட்டும் மையப்படுத்தாமல் இதுவரையான அமெரிக்காவின், பல்வேறு நாடுகள் மீதான தாக்குதல்களையும் காட்சிப் படுத்தியுள்ளார். யுத்தத்தின் அழிவைப் பேசும்படமாக இது உள்ளது. இந்த ஆவணப்படத்தில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான இரா.ஜவகரின் விரிவான நேர்காணல் இடம்பெற்றுள்ளது. 'தொழுப்பேடு'  ஆவணப்படத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நேர்காணல்களும் தொல்.திருமாவளவனின் நேர்காணலும் இடம்பெற்றுள்ளன. மூன்று ஆவணப் படங்களும் சமூக அரசியல் படங்களாக இருப்பது பாராட்டிற்குரியது என்றாலும், தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தப்படாமை குறையாக உள்ளது.

இனி, இரா.பாலாஜியுடனான நேர்காணல்.....

"என்னைப் பற்றிப் பேசுவதை விட மாற்று ஊடகங்களைப் பற்றிப் பேசுதல் அல்லது விவாதித்தல் இன்றைய தேவை எனக் கருதுகிறேன்."

* "சரி. ஊடகங்கள் மற்றும் மாற்று ஊடகங்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன? தணிக்கை முறை சரியானதா?"

"ஊடகங்கள் என்றாலே தணிக்கை அல்லது விதிமுறை என்று பொருள் கொள்ளலாம். எந்தவொரு ஊடகங்களானாலும் நம்முடைய சுயசிந்தனை அடிப்படையில் செய்திகளை அணுகவிடாமல், ஒரு குறிப்பிட்ட பார்வையிலேயே எல்லாவற்றையும் பார்க்கச் செய்து அதனடிப்படையில் கருத்துகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாகத் திரைப்படத் துறையிலும் கருத்துச் சுதந்திரத்திற்கான தடைகள் நுட்பமான மட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. சமூக உரிமைகளைக் காப்பாற்றுவது என்ற அடிப்படையில் தோன்றிய தணிக்கை முறை இன்று 'சமூக நலன்'  என்ற பெயரில் சமூகத்தின் ஆரோக்கியமான சிந்தனைக்கான உரிமைகளைத் தடுத்து ஒடுக்கவும் தணிக்கை பயன்படுத்தப் படுகிறது. 'காற்றுக்கென்ன வேலி ' திரைப்படத்திற்கு தணிக்கையின் கிடுக்குப் பிடியைப் பார்த்திருக்கிறோம்.

ஆழமான அரசியல் கருத்துக்களைக் கூறும் படங்கள் ஒரேயடியாகத் தடைகளுக்கு உள்ளாக்கப்படும், மேம்போக்கான அரசியல் விமர்சனப் படங்கள் 'அவார்டு'  கூட வாங்கும். அரசியல் கருத்துக்களைத் தடுக்கும் அளவிற்கு செக்ஸ், வன்முறை முதலியவற்றை நமது தணிக்கைக் குழு தடுப்பதில்லை. ஏனெனில் அதிகாரம் செலுத்துவதற்கு அல்லது நீடிப்பதற்கு முதல் தேவை விமர்சனங்களை வரவிடாமல் தடுப்பது, வந்தால் வளரவிடாமல் ஒழிப்பது. இந்தக் கருத்தின் அடிப்படையில் தான் கருத்துச் சுதந்திரத்திற்கெதிரான தடைகள் தொடங்குகின்றன. பிறகு சமூக ஒழுக்கத்தின் பெயரால் அவற்றிற்கு நியாயங்கள் கற்பிக்கப்படுகின்றன.

மாற்று ஊடகங்களைப் பற்றிச் சொல்வதென்றால், இந்திய விடுதலைக்கு முன்னர் வளர்க்கப்பட்ட சுதந்திர இந்தியாவைப் பற்றிய ஒளிமயமான கனவுகள், தங்கள் கண்முன்னாலேயே கரைந்து போனதைக் காணநேர்ந்த தலைமுறையினரின் விமர்சனங்களை, இந்தியாவின் தற்கால அவலங்கள் மிக உயர்ந்த தரத்திலான அரசியலுடனும், அழகியலுடனும் திரைவடிவமாக்கினர்.

1953இல் பிமல்ராய் ஷதேபிகா ஜமீன்  (இரண்டு ஏக்கர் நிலம்), 1955இல் சத்யஜித்ரே 'பதேர் பாஞ்சாலி' (ஒரு சாலையின் பாடல்) தொடங்கி கேமராவை தோள்களில் சுமந்து கொண்டு குக்கிராமங்களை எல்லாம் படம் பிடித்தனர். மேட்டுக்குடி வாழ்க்கை முறையை விட்டு குடியானவர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்தனர். சரித்திர சிதிலங்களுக்குள் நுழைந்தனர். நாடகத் தன்மையற்று ஜோடனைகள் இல்லை. அபரிமிதமான ஒப்பனைகளும் இல்லை. போலித் தனமான பாடல்களும் இல்லை. அதோடு சாதாரண மக்களின் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு திரைப்படங்களின் மூலமாக வெளிப்படுத்த அவர்கள் எடுத்துக் கொண்ட கவனம் 'நியூ இந்தியன் சினிமா ' என்ற அளவில் பரிணாமம் பெற்றது (1960 முதல் 1980 வரை).

சத்யஜித்ரே முதல் அருண்மொழி வரை மண்ணையும் இயற்கையுடன் இணைந்த மக்கள் வாழ்க்கையையும் சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களையும் கேமராவின் மூலமாக ஆராய்ந்தது என்றே சொல்லலாம். இதன் தொடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் மாற்று ஊடகத்தைப் பார்க்க வேண்டும்."

* "நியூ இந்தியன் சினிமாவை மாற்று ஊடகம் என்கிறீர்களா?"

"நியூ இந்தியன் சினிமா காலம் வேறு, இன்று நாம் வாழும் காலம் வேறு". அக்காலத்தில் இருந்த சினிமா நோக்கு, வடிவம் ஆகியவை அப்போதைய சூழ்நிலையில் சரியானது. முற்போக்கானது. இன்றுள்ள சூழ்நிலை அதுவல்ல. ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்துதலை ஏற்றுக்கொள்வதற்கு இராணுவமற்ற முறையில் சாதிக்க ஊடகங்களைக் கையாளத் தொடங்கியுள்ளன.

வல்லரசுகளின் உற்பத்திப் பொருட்களுக்கு மூன்றாம் உலக நாடுகளில் மிகப்பெரிய சந்தை உள்ளதைப் போல அவர்களின் பண்பாட்டு வடிவங்களும் சந்தையாக்கப்படுகின்றன. பெருமளவு லாபம் சம்பாதிப்பதற்கு தங்கள் பண்பாட்டை இங்கு விற்பனை செய்கிறார்கள். அதே வேளையில் பணிந்து போகும் மனப்பான்மையை உருவாக்குவதற்கும் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நிலவுடைமை - ஏகாதிபத்தியத்தைத் தோற்கடிக்கவும் அவர்களிடமிருந்து மக்களின் சொத்துக்களை, உற்பத்திச் சாதனங்களை மீட்டெடுக்க புதிய ஜனநாயக அரசியலைப் போல நம் பண்பாட்டு இலக்கியமும் மாற்றுப் பாதையைக் காட்ட வேண்டிய அவசியம் உள்ளது. இதுவே இன்றைய கால கட்டத்தில் மிகச் சரியானது, முற்போக்கானது.

* "விவரணப் படங்களுக்கு அழகியல் தேவையில்லை என்றொரு கருத்து உண்டு. அது பற்றி உங்கள் கருத்து என்ன?"

"மாற்று ஊடகங்கள் என்பது அழகியல் வடிவமாக மட்டுமே பார்ப்பது அல்ல. கலை அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கையாளப் படவேண்டிய அவசியமில்லை. அதைப்பற்றி வருத்தப்படவோ வெட்கப்படவோ ஒன்றுமில்லை. படைப்புகள் நம் மக்களைச் சென்றடையவில்லை என்றால் மட்டுமே வருத்தப்படலாம். ஏனெனில், மாற்று ஊடகங்கள் என்பது எதிரியின் குரல்வளையை குறிவைத்து வீசப்படும் வாள் போன்றது."

* "அப்படியெனில், படைப்புத்தரம், அழகியல், நேர்த்தி என்பதெல்லாம் தேவையில்லை என்கிறீர்களா?"

"உண்மையில் படைப்புத்தரம், அழகியல், கலை நேர்த்தி என்று எதுவுமே இல்லை. உதாரணமாக ஹாலிவுட் படங்கள். உலக வர்த்தக நிறுவனத்தைத் தோற்றுவித்த பிறகு, மேல்நிலை வல்லரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் உலகமய ஆக்கிரமிப்புக்குத் தடையேதுமில்லாமல் போயிற்று. இடம், பொருள், காலம் அறிந்து தனது மூலதனம் தொழில் நுட்பம், அரசியல் மேலாண்மை மூலம் சர்வதேச சந்தையைக் குறிவைத்துக் கடந்த பத்தாண்டுகளில் ஹாலிவுட் உலகச் சந்தையைத் தன் காலடியில் கொண்டு வந்திருக்கிறது என்றால் அது படைப்புத் தரத்தினால் மட்டுமல்ல, மூலதன - அரசியல் ஆக்கிரமிப்பினால் மட்டுமே என்பதுதான் உண்மை."

* "தமிழ்க் குறும்படச் சூழல் குறித்து?"

நம்மில் சிலர் சினிமாவின் நீட்சியாக மாற்று ஊடகத்தைப் பார்க்கின்றனர். அதை சினிமாவிற்கான தகுதியாக, அடித்தளமாகப் பார்க்கின்றனர். 1896லிருந்து இந்திய மண்ணில் வேர்கொண்டு வேகமாக வளரத் தொடங்கிய நமது சினிமா அதன் பெரும் பகுதி வெறும் கனவுத் தொழிற்சாலையாக இயங்கி வந்ததைப்போல பெரும்பாலான குறும்படங்கள் காணக்கிடைக்கின்றன. இடதுசாரி சிந்தனையைத் தாங்கிப் பிடிக்கும் முற்போக்கு எழுத்தாளர்களும் இயக்குனர்களும்கூட இதற்கு விதிவிலக்கல்ல என்பது வருத்தத்திற்குரியது.

- யாழினி முனுசாமி

வெள்ளிக்கிழமைதோறும் ஒரு குறும்பட இயக்குனரை சந்திக்கலாம்.

தினகரன் ஜெய் - குறும்பட இயக்குநர் - 1
வ.கௌதமன் - குறும்பட இயக்குநர் - 2
முருக சிவகுமார் - குறும்பட இயக்குநர் - 3
அருண்மொழி - குறும்பட இயக்குநர் - 4
ஆர்.ரவிக்குமார் - குறும்பட இயக்குநர் - 5
மணிமேகலை நாகலிங்கம் - குறும்பட இயக்குநர் - 6
டி.அருள் எழிலன் - குறும்பட இயக்குநர் - 7


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...