???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரத யாத்திரைக்கு எதிர்ப்பு: 3,314 பேர் கைது 0 பெண்கள் பர்தா அணிவது கட்டாயமல்ல: சவுதி இளவரசர் 0 இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கினார் குடியரசு தலைவர்! 0 என் பின்னால் பாஜக இல்லை: ரஜினி 0 ஆ.ராசா, கனிமொழி விடுதலையை எதிர்த்து சி.பி.ஐ மேல்முறையீடு! 0 12-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்! 0 நெல்லை தாய், சிறுவன் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு! 0 சேலம் காஞ்சி சங்கரமடத்தின் மீது தாக்குதல்! 0 போலி மருத்துவர்களை தடுக்க சட்டமசோதா: பேரவையில் தாக்கல் 0 மக்களை பிளவுபடுத்தவே ரத யாத்திரைக்கு அனுமதி: கமல்! 0 கணவர் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலாவுக்கு 15 நாள் பரோல்! 0 புலன் மயக்கம் - 78 - ஒவ்வொன்றும் வெவ்வேறு - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 ரத யாத்திரைக்கு எதிராக சாலை மறியல்: ஸ்டாலின் கைது! 0 ரத யாத்திரை தொடர்பாக அமளி: சட்டசபையிலிருந்து திமுகவினர் வெளியெற்றம்! 0 பாஜகவின் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குகை மா.புகழேந்தி - கவிதைத் திருவிழா 51

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   01 , 2007  20:38:57 IST

மாற்றியெழுத விரும்புகிறேன்

நான் எல்லாவற்றயும்
மாற்றியெழுத விரும்புகிறேன்

மனிதனின் மூளை
கடவுளைத் தாண்டி
யோசிக்கத் தொடங்கிவிட்டது

போர்க்களத்தின் வெறி
ஒவ்வொரு மனதிலும் மிச்சமிருக்கிறது
துப்பாக்கி ரவைகளின்
வேகத்தீற்கீடாய்
பிணங்கள் சரிகின்றன

குண்டுவெடிப்பில் தூக்கம் கலைந்து
பயந்து கதறும் குழந்தையின்
அலறல் அடங்குவதற்குள்
அடுத்த குண்டும் வெடித்துவிட்டது

யாதொன்றும் நிகழாததைப்போல
பிணங்களின் மத்தியில்
உறங்குபவர்கள் பெருகிவிட்டார்கள்
அவர்களின் கனவுகளிலிருந்து
கசிகிற ரத்தம்
படுக்கைய நனைத்துப் பரவுகிறது

அடையாளம் தெரியாமல்
எதிர் நிற்கும் கண்ணாடி பிம்பத்துக்குள்
தமக்குத்தமாமே கத்தியை செருகுபவர்கள்
காத்திருப்படகி அறியாமல்
பூமியிலிருந்து பூமிக்காக
புறப்படுகிறார்கள்
அகதிகளாய்

எவனோ
எல்லாவற்றையும்
தவறாக எழுதிக்கொண்டிருக்கிறான்.

***** ***** *****

வெளியிலிருந்து ஒரு காட்சி

அவன்
தானியங்களை இறைக்கிறான்
அவ்விடத்தில்
வாழ்க்கை
புறாக்களை இறைக்கிறது
அவனைப் போலவே .

***** ***** *****

நிழல் பறவை

காகங்களைப் பார்க்கும்போதெல்லாம்
ஓர் அழகிய பறவையின்
நிழலே தெரிகிறது

ஒவ்வொரு காகத்தின் மேலும்
ஓர் அழகிய பறவை
பறந்துகொண்டிருக்கிறது.

***** ***** *****

காலம் மாறும் நொடி

நமது ஒவ்வொரு அசைவையும்
கவனித்துக் கொண்டிருக்கும்
இன்றைய குழந்தைகள்
பின்னாளில் சொல்லவிருக்கும்
நாளைய கதைகளின்
முன்னொரு காலத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
அக்கதைகளை கேட்கின்ற அவசரத்தில்
திரும்பிப்பார்க்காமல்
நிகழ்வுகளைத்தாண்டி நடந்துகொண்டிருக்கிறது
காலம் மாறும் நொடி.

***** ***** *****

புறம்பானவன்

உள்ளே இருக்கிறேனா
வெளியே இருக்கிறேனா
என்றொரு கேள்வி வந்தபோது
நான் நடுவில் நின்றிருந்தேன்

உள் என்பது
எனக்கு உள்ளே இருந்தது
வெளி என்பது எனக்கு வெளியே இருந்தது

என்னில்
நடுவில் நிற்கும் நான்
எங்கிருக்கிறேன்
என்றொரு குழப்பம் வந்தபோது
தோற்றத்தில்
உள்ளின் வெளியேயும்

வெளியின் உள்ளேயும்
நானிருந்தேன்.

***** ***** *****

விடுதலை

பற்றியெரிகிற காடு
எல்லா பறவைகளும் தப்பித்துக் கொண்டன
மரங்களை விட்டுவிட்டு.

- குகை மா.புகழேந்தி

குகை மா.புகழேந்தி. சேலம் குகை பகுதியில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு 'காற்றுக்குப் பதிலாய்' இரண்டாவது தொகுப்பு வானம் என் அலமாரி. இதுவரையில் ஆறு கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. தன் கவிதை நூல்களுக்காக கவிதை உறவு விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது ஆகிய பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். "சிறுவயதிலிருந்தே திரைப்படப் பாடல்களைக் கேட்டுவளர்ந்திருக்கிறேன். அந்தச் சூழலே கவிதைமீதான அபரிமிதமான ஆர்வத்தை உருவாக்கிவிட்டது. அதனால் முதலில் கவிதைகள்தான் எழுதத் தொடங்கினேன்" என்கிறார் கவிஞர் புகழேந்தி.

தொடர்ந்து பல கவிஞர்களின் கவிதைகள் வலம் வர இருக்கின்றன.

கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.


பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க...

விஸ்வநாதன் கணேசன்
செந்தமிழ்
கிருஷாங்கினி
இந்திரன்
வஸந்த் செந்தில்
ஆசு
பூங்காற்று தனசேகர்
கதிர்பாரதி
தமிழச்சி
ராணிதிலக்
வே.ராமசாமி
கலாப்ரியா
லீனா மணிமேகலை
அ.வெண்ணிலா
யாழினி முனிசாமி
வைத்தீஸ்வரன்
பழநிபாரதி
தி. பரமேஸ்வரி
தேவேந்திர பூபதி
கோசின்ரா
தென்றல்
ஜானகிராமன்
இன்பா சுப்ரமணியன்
அண்ணா கண்ணன்
க.அம்சப்ரியா
உதயசங்கர்
கடற்கரய்
ஹரன்பிரசன்னா
சாரோன் செந்தில்குமார்
இரா.தமிழரசி
நல்லான் இராமசாமி
யவனிகா ஸ்ரீராம்
அரங்கமல்லிகா
ராஜா சந்திரசேகர்
சேவியர்
பாரதிகிருஷ்ணன்
சுகுமாரன்
கீதாஞ்சலி பிரியதர்ஷனி
தேன்மொழி.எஸ்
தேவதேவன்
ம.திலகபாமா
கோ.வசந்தகுமாரன்
மதியழகன் சுப்பையா
முத்துமகரந்தன்
ரவிசுப்ரமணியன்
அழகுநிலா
அரிக்கண்ணன்
அய்யப்ப மாதவன்
அன்பாதவன்
ஜே.கே.73


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...