![]() |
60,000 டூ 213 கோடி பயணம் - MAFOI கே.பாண்டியராஜன்Posted : ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 15 , 2007 01:03:53 IST
சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைபார்க்கும் நடுத்தர குடும்பத்திலிருந்து ஒருவர் என்ஜினியரிங் படிப்பிற்கு செல்வதென்பதே பெரிய விஷயம்தான். ஆனால் இங்கிருந்து புறப்பட்ட இவர் இன்று 27 நாடுகளில் கிளைபரப்பி சுமார் 38,000 இளைஞர்களை கண்டுபிடித்து தகுதியான வேலையில் அமர்த்திய MAFOI நிறுவனத்தின் நிறுவனர். இந்தியாவில் மிகப்பெரிய மனித வளமேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாகி. இவர் கே.பாண்டியராஜன்.
இவரைப் பற்றி... சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்த குடும்பம். அப்பா கருப்பசாமி இவர் பிறந்த மூன்று மாதத்திலேயே இறந்துவிட்டார். சிவகாசிக்கு அருகிலுள்ள வெளாம்பட்டு பூலாபூரணியில்தான் தொடக்ககல்வி. பிறகு சிவகாசியில் PUC. கோயம்புத்தூர் PSGல் இன்ஜினியரிங் பிறகு ஜாம் ஷெட்பூரில் MBA என்று இவரது ஆர்வத்திற்கு இந்தியாவிலுள்ள பெரிய கல்விநிறுவனங்கள் தீனிபோட்டு வந்திருக்கின்றன. ஜாம் ஷெட்பூரில் MBA முடித்தபிறகு கொல்கத்தாவில் 6 வருடம் வேலை பார்த்திருக்கிறார். XLRIல் HRD (மனிதவள மேம்பாடு) தொடங்கியதில் முதல் Batch இவருடையதுதான். 3 Yrs IDEA. இந்த ஒன்பது வருட அனுபவத்தையும், மனைவி ஹேமலதாவின் துணையும் கொண்டு அறுபதாயிரம் ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்டதுதான் MAFOI. ஒவ்வொரு வருடமும் 10 முதலீட்டாளர்கள் 5000 ரூபாய் முதலீட்டுடன் 500 முதலீட்டாளர்களை சேர்த்துள்ளார். முதலீட்டாளர்கள் பெரும்பாலும் இவரது பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள். சென்ற ஆண்டின் Turn Over 213 கோடி. * தனியாக நிறுவனம் தொடங்க உந்துசக்தி அதுவும் இந்தியாவில் பிரபலமில்லாத மனிதவள மேம்பாட்டு நிறுவனம்? சிங்கப்பூரில் பணியிலிருந்தபோது வளைகுடா நாடுகளின் எண்ணெய் கிணறுகளில் தீப்பிடித்துக்கொண்டது. இதற்காக நிபுணர்களை வெளிநாடுகளிலிருந்து கொண்டுவந்து வளைகுடாவில் வேலை செய்துவந்தார்கள். அதில் பெரும்பாலும் இந்திய நிபுணர்கள் ஆனால் ஒரு இந்திய கம்பெனிகூட இல்லை. இதில் இந்திய கம்பெனிகளின் முதலீடு 5 கோடி. மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் லாபம் மட்டும் 4 1/2 கோடி ரூபாய். இந்த ஒரு நிகழச்சிதான் ஏன் இந்தியாவில் மனித வள மேம்பாட்டு கம்பெனி துவங்கக்கூடாது என்று யோசிக்கவைத்துவிட்டது. முதலில் குறைந்த முதலீட்டில் சிறியதாக தொடங்கி அளவான வளர்ச்சியுடன் இன்று ஆலமரமாக நிற்கிறது. * அது என்ன MAFOI? என்னுடைய பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் பிரான்ஸை சேர்ந்தவர்கள். பிரென்ச்சில் MAFOI என்றால் "நான் உத்திரவாதம்" என்ற அர்த்தம் வரும். இதற்காகவே இந்த பெயர் தேர்வுசெய்யப்பட்டது. * MAFOIன் சாதனைகள்? 60,000 ரூபாய் முதலீட்டின் தொடங்கப்பட்ட MAFOIன் சாதனைகள் இன்று பட்டியலிடமுடியாத அளவிற்கு நீளமானதாக இருக்கிறது. 100 கோடி ரூபாய் லாபத்தை தாண்டிய முதல் இந்திய HRD Company. (218 கோடி ரூபாய் 2005ல்). இந்தியாவில் மூன்றே மூன்று கம்பெனிகள் தாம் 75% வளர்ச்சி விகிதத்தை 10 ஆண்டுகளுக்கு பிறகும் வைத்துள்ளது. அதில் MAFOIம் ஒன்று. * பள்ளி, கல்லூரி வாழ்க்கை நிகழ்வுகள் உந்துசக்தியாக இருந்ததா? எங்களுடையது கூட்டு குடும்பம்தான். எனக்கு எப்போதும் முன்னோடிகளாக என்னுடைய தாத்தா, பாட்டியைத் தான் சொல்வேன். Canara Bankன் Merit Scholar ஊக்கத்தொகையுடன்தான் என்னுடைய படிப்பை தொடர்ந்தேன். PSGல் என்ஞினியரிங் படிக்கும்போது நான் கல்லூரியின் யூனியன் லீடர். அப்போது நாங்கள் ஒரு ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்தோம். அந்த ஸ்டிரைக்கில் எதிர்பாராதவிதமாக பள்ளி குழந்தை ஒன்று அடிபட்டுவிட்டது. ஸ்டிரைக்கின் போது நிலைமை எதுவுமே கட்டுக்குள் இல்லை. அப்போதுதான் முதன்முதலாக கும்பலின் மனோபாவம், மனித மனம் ஒரு கூட்டத்தில் எப்படி திசைமாறுகிறது என்பதை உன்னிப்பாக உணர துவங்கினேன். முதலிலேயே சொன்னது போல தாத்தா வழிகாட்டியாக இருந்தார். அவர் ஒரு சிறிய தீப்பெட்டி தொழிற்சாலை வைத்திருந்தார். நிர்வாகத்தன்மை திறன் போன்றவற்றில் என்றுமே அவர் எனக்கு முன்னோடி. அதுவுமில்லாமல் என்னுடைய மனைவி ஆடிட்டர் ஹேமலதாவின் உறுதுணை நிர்வாகத்தில் பெரும் உதவியாக இருந்தது. * ஊழியர்களிடையான உறவு? நல்ல ஊழியருக்கான தகுதிகள்? எங்களுடைய நிறுவனத்தை பொறுத்தவரை முதலாளி தொழிலாளி என்ற பேதமே கிடையாது. 15 சதவீத லாபத்தை ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த 15% 5விதமான அளவுகோளின்படி கணக்கிடப்பட்டு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இது எல்லாமே Onlineல் வைத்துள்ளோம். Transparency எங்களுடைய வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம். நிறுவனத்தில் வேலைபார்க்கும் யார் வேண்டுமானாலும் onlineல் அவர்களுடைய பங்களிப்பினை சரிபார்த்துக் கொள்ளலாம். சந்திப்பு: கவுதம் , வேலன் & சிவா
|
|