???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி 0 கல்லைக் கட்டிக்கொண்டு எடப்பாடி கிணற்றில் இறங்கியுள்ளார்: டிடிவி தினகரன் 0 காலியானதாக அறிவிக்கப்பட்டது ஒசூர் தொகுதி 0 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றி தமிழக அரசு உத்தரவு 0 விஜயகாந்த்தின் உடல்நலம் விசாரித்தார் பியூஷ் கோயல் 0 உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை! 0 அதிமுக கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு 0 அதிமுக-வுடன் பணத்திற்காகவே பாமக கூட்டணி:மு.க.ஸ்டாலின் 0 பாஜக தலைவர் அமித் ஷா வருகை திடீர் ரத்து! 0 செயல்பாட்டாளர் முகிலன் மாயம்: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு 0 திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை 0 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை 0 ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராவதில் மீண்டும் விலக்கு கேட்டார் ஓ.பி.எஸ்.! 0 அமித்ஷா இன்று சென்னை வருகை! 0 பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மீட்கத் தீவிரமாக முயல்கிறோம்: தொலைத்தொடர்பு அமைச்சகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தேவேந்திர பூபதி - கவிதைத்திருவிழா 32

Posted : புதன்கிழமை,   ஜனவரி   03 , 2007  22:15:25 IST

இடம் மாறும் பறவைகள்

பறவைகள் இடம் மாறிப் பிழைப்பது போல
நான் ஒரு ஊழியனாகவும்
எனது சிறிய குடும்பத்தின் கூடு ஒன்றை
தோளில் தாங்கியவனாகவும் இருக்கிறேன்
என் அதிகாரத்தின் கடைசிக் கண்ணியில்
எனது சிறிய குழந்தையின் நடைக் காட்சிகள்
இரக்கமற்ற தொலைக்காட்சி அலைவரிசை போல
மாறிக் கொண்டிருப்பது ஒரு அறியப்பட முடியாத சோகம்
அவனறிந்த வெளி, பள்ளிகள்
சில நண்பர்கள், வாகன ஓட்டிகள்
என் அலுவலகம், பிறகு என் இலக்கியத் தோழர்கள்
கூடவே தோட்டத்து அணில்களோடு
அவனது பரிச்சியத்தை
வேரோடு அகற்றி நான் இடம் மாற்றும்போது
அவனது கனவுகளில்
உறைந்திருக்கும் ஓவியம் எவ்வாறு
வண்ணமழிந்து கசியும் என்பதுதான் திடுக்கிடலாய் இருக்கிறது
அவன் யாவற்றின் பெயர்களையும்
சலசலத்தபடி உதிர்த்துக் கொண்டே இருக்கிறான்
மிக இயல்பாக எனது வீட்டின் சாமான்கள்
அவனது உடையாத விளையாட்டுப் பொருட்களுடன்
மூட்டை கட்டப்படுகின்றன.
பற்றற்றவள் போல் என் மனைவி அதில் ஈடுபடுகிறாள்
ஒரு குழந்தை அவள் கைகளுக்குள் வினோதமாய் ஒடுங்குகிறது.

***** ***** ***** *****

இப்போதெல்லாம்
காதலை ஒழித்து கட்டுவது பற்றி
ஆலோசிக்கிறேன் இடையில்
தாமரையைப் புனைப்பெயராகக் கொண்ட
ஒருத்தி குறுக்கிடுகிறாள்
ஆண்களைக் காதலிப்பது மகா பாவம்
என அவள் ஒரு முறை சொல்லக் கேட்டிருக்கிறேன்
அவள் தன் கணவனை விட்டு காதலுடன்
ஓடிப்போன சமயம்
எனக்கது ஒரு தகவலாகவும் சற்றே இரக்கமாகவும் இருந்தது
என் அலுவலகக் கோப்புகளில் தொடர்ந்து
விரல்கள் நோகும் வரை கையெழுத்திட்டுக் கொண்டே இருக்கிறேன்
தாமரை ஆரம்பத்தில் என்னைத்தான்
காதலித்தாள் எனச் சொல்வது இப்போதைக்குப் பொருத்தமானது
அவமானங்களின் நிழல்வெளியில்
எத்தனை காலம் மறைந்தழிந்தாளோ
எந்த பரிதாபத்தின் விழுப் பல் பட்டதோ
இடையில் அவள் இறந்தும் போய்விட்டாள்
தாமரை என்பது ஒரு பெண்ணின் புனைப்பெயர்
காதலுக்குரியது என்று
நான் வைத்திருந்த புனைவு ஒன்று அவளுடனேயே
இறந்து விட்டதால்
எனது நிஜப்பெயரை வைத்துத்தான்
இக் கவிதையை நான் எழுதவேண்டும்
துரதிர்ஷ்டம்.

***** ***** ***** *****

பெண்களைக் கவிதைகளாகவும்
மௌனங்களைப் பூக்களாகவும்
வைத்திருந்தவனின் வீட்டிற்கு
விருந்திற்குச் சென்றேன்
அவன் இரண்டு கவிதைகளை
வாசிக்கக் கொடுத்தான்
ஒவ்வொரு வார்த்தைகளும்
பிரபஞ்சத்தின் ஒளியை
இருளின் சப்தத்தை வெளிப்படுத்திய போது
கைகளில் மகரந்த வாசனை வீசியது
என்னை அவனது தோட்டத்திற்கு
அழைத்துச் சென்று
உதிராத மலர்களை பறித்துத் தரும்போது
அவை என் அன்னையின் நறுமணத்தை நினைவூட்டின
அப்போது 30 வினாடிகளையும் ஒரு புவி ஈர்ப்பு விசையையும்
தாவரங்களில் தொங்கும் நீர்த்துளிகள்
தாங்கிக் கொண்டிருந்தன.

- தேவேந்திர பூபதி

***** ***** ***** *****


மதுரையில் வசிக்கும் கவிஞர் தேவேந்திர பூபதி வணிகவரித்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். 'பெயற்சொல் ', 'வெளிச்சத்தின் வாசனை' ஆகிய கவிதைத்தொகுப்புகள் வெளிவந்துள்ளன. உலக அரசியல் சார்ந்த கவிதைகளை எழுதியுள்ள இவரது படைப்புலகம் தத்துவார்த்த தேடலை அறிவார்ந்த உலகின் மோதலையும் அடிப்படையாக கொண்டது. நவீன கவிதைக்குரிய கற்பனை, கனவுத்தன்மை, இருண்மை எல்லாமும் பூபதியின் கவிதைகளில் காணக்கிடைக்கும்.

தொடர்ந்து பல கவிஞர்களின் கவிதைகள் வலம் வர இருக்கின்றன.

கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.


பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க...
கோசின்ரா
தென்றல்
ஜானகிராமன்
இன்பா சுப்ரமணியன்
அண்ணா கண்ணன்
க.அம்சப்ரியா
உதயசங்கர்
கடற்கரய்
ஹரன்பிரசன்னா
சாரோன் செந்தில்குமார்
இரா.தமிழரசி
நல்லான் இராமசாமி
யவனிகா ஸ்ரீராம்
அரங்கமல்லிகா
ராஜா சந்திரசேகர்
சேவியர்
பாரதிகிருஷ்ணன்
கவிஞர் சுகுமாரன்
கீதாஞ்சலி பிரியதர்ஷனி
தேன்மொழி.எஸ்
தேவதேவன்
ம.திலகபாமா
கோ.வசந்தகுமாரன்
மதியழகன் சுப்பையா
முத்துமகரந்தன்
ரவிசுப்ரமணியன்
அழகுநிலா
அரிக்கண்ணன்
அய்யப்ப மாதவன்
அன்பாதவன்
ஜே.கே.73


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...