???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்கக் கூடாது: பிரதமர் மோடி 0 அதிமுகவில் ஒருவருக்கு கூட திமுகவை விமர்சிக்க தகுதியில்லை: ஸ்டாலின் 0 ஆதாரம் இல்லாமல் 'கட்டப்பஞ்சாயத்து' குற்றச்சாட்டை வைக்கலாமா? தமிழிசைக்கு திருமா கேள்வி 0 ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாராயணசாமி 0 இரட்டை இலை வழக்கு: தேர்தல் ஆணையத்தில் விசாரணை 0 அமைச்சர் ஜெயக்குமார் மீது மதுசூதனன் திடீர் பாய்ச்சல்! 0 பேரறிவாளனுக்கு நீண்டகால பரோல் வழங்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை 0 ஜனநாயகத்துக்கு எதிராக பாஜக செயல்படுகிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு! 0 ஜி.எஸ்.டி வரி விதிப்பு: பொது விவாதத்துக்கு சீமான் அழைப்பு 0 நாகை தீயணைப்பு நிலையம் இடிந்து விழுந்து விபத்து 0 மேற்கு வங்கம் : திருநங்கை நீதிபதியாக நியமனம்! 0 மெர்சலை வெற்றி படமாக்கியதற்கு விஜய் நன்றி! 0 பேரறிவாளன் பரோல்: அற்புதம்மாள் முதல்வருக்கு மீண்டும் கடிதம் 0 சில நாட்களில் மற்றுமொரு அதிசயம் நடக்கும்: கருணாநிதியின் மருத்துவர் 0 தற்போதைய சூழலில் பராசக்தி படம் வந்தால் எப்படி இருக்கும்? ட்விட்டரில் ப.சி. கேள்வி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அண்ணா கண்ணன் - கவிதைத் திருவிழா 27

Posted : புதன்கிழமை,   நவம்பர்   22 , 2006  15:42:57 IST

அண்ணாகண்ணன்
இசைப் பாடல்கள்

நீ விழி திறந்தால்


நீ விழி திறந்தால் அதுவே என் விடியல்
நீ இமை மூடும் பொழுதே என் இரவு
(நீ விழி திறந்தால்.....

நீ கோபப்பட்டால் இங்கே கோடை வரும்
நீ வாய்மலர்ந்தால் இங்கே வசந்தம் வரும்
நீ மறைந்திருந்தால் இங்கே குளிரடிக்கும்
நீ மடைதிறந்தால் இங்கே மழைபிறக்கும்

நீ நடந்துவந்தால் இங்கே நடனமென்பார்
நீ நடனமிட்டால் மண்ணை நம்பமறுப்பார்
நீ உதடசைத்தால் இங்கே தலைகொடுப்பார் - கண்ணே
உன்னைப் பார்த்தே தெய்வச் சிலைவடிப்பார்.
(நீ விழி திறந்தால்.....

நீ பேசப் பேசப் பாடகர்க்கெல்லாம் பிழைப்பு கெடுகிறது
நீ பேசாதிருந்தால் அப்பொழுதும் ஒரு கீதம் கேட்கிறது.
உனக்கு முன்என்றும் உனக்குப் பின்என்றும் காலம் பிரிகிறது
தேசிய மலர்கள் பல இருந்தாலும் நீதான் பிரபஞ்ச மலர்.
(நீ விழி திறந்தால்.....

அதிருஷ்டத்தின் மீது நம்பிக்கையில்லை உன்னைக் காணும் வரை
சகுனத்தின் மீது நம்பிக்கையில்லை உன்குரல் கேட்கும் வரை
ஆண்டவன் மீது நம்பிக்கையில்லை உன்னைச் சேரும் வரை
முற்பிறவி பிற்பிறவி நம்பிக்கையில்லை உன் அன்பில் மூழ்கும் வரை.
(நீ விழி திறந்தால்.....

இதம் இதம் இதமே உன் இதயம் இதமே
இதைவிடப் பெரிய வரம்எது சதமே
நிதம் நிதம் நிதமே நெருக்கம் மிகுமே
நீ இருப்பதனால் என் வாழ்க்கை தகுமே!
(நீ விழி திறந்தால்.....


**** ***** ***** ******

வாடீ இரவைக் களவாடி

வாடீ இரவைக் களவாடி - என்
உள்ளம் தன்னை உளவாடி
[வாடீ
நிலவே எழுந்தாய் நீராடி - அட
நீதான் ஆழித் தேரோடி?
நெஞ்சம் புகுந்தாய் வேரோடி - இனி
நீயும் நானும் வேறோடி?
[வாடீ
என்னைக் காட்டும் கண்ணாடி - நீ
இந்திர லோகப் பெண்ணாடி!
உன்னை அடைவேன் போராடி - நான்
உயிரை மதிக்கும் போராளி!
[வாடீ
மூடி மறைவாய் மனம்ஊடி
ஓடித் தொலைவில் பரிவோடி
சாடிச் சிறைக்குள் அரசாடி
போடீ இதுவோர் மரபோடி?
[வாடீ
கூடி மகிழ்ச்சிப் பெருக்கோடி
தேடி மயக்கச் செருக்கோடி
ஆடி இனிக்கும் முறுக்கோடி
ஏடீ இதுபோல் இருக்கோடி!
[வாடீ
சூடிக் கொடுத்த சுடர்பாடி - மனம்
நீடித் திருக்கும் யுகம்கோடி - நினைக்
கூடேல் இதுவோர் பிறப்போடி? - நினைக்
கூடின் அதன்பின் இறப்போடி?
[வாடீ

**** ***** ***** ******

தொட்டுப் போகும்


தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

குரல் மின்னிடும் இசை உன்னதம்
உரு எங்கிலும் உயிர் பொங்கிடும்
கரு வண்டினம் வலம் வந்திடும்
அரு மலர்வனம் அதன் நறுமணம்

தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

அருள் தூறிடும் அமுதூறிடும்
பொருள் மீறிடும் புதையல் தடம்
தலையாட்டிடும் மழலை மனம்
தாலாட்டெனும் தனி மந்திரம்

தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

சிலை சித்திரம் நடை நாடகம்
ஒளிர் கீர்த்தனம் ஒயில் நர்த்தனம்
உரு மாறிடும் நிழல் ஓவியம்
கலை மேவிடும் மலை மாருதம்

தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

கரை யாவையும் கரைத்தே எழும்
சிறை யாவையும் மறுத்தே எழும்
குறை யாவையும் அறுத்தே எழும்
நிறை அன்பெனும் நிஜ சுந்தரம்

தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

விரல் தள்ளினும் விழி துள்ளிடும்
சுழல் காற்றிலும் சுடர் பூத்திடும்
மனம் ஆடிடும் குடை ராட்டினம்
களி காதலின் துளிப் பாற்கடல்

தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்


**** ***** ***** ******

கனவு இழுக்கிறது

எனையொரு கனவு இழுக்கிறது - அதில்
முழுமை இன்பம் முகிழ்க்கிறது.
[எனையொரு கனவு
காண்கின்ற திசைகளெல்லாம் நவநவநவநவம்
கேட்கின்ற ஒலிகளெல்லாம் லயலயலயலயம்
பேசிடும் மொழிகளெல்லாம் நயநயநயநயம்
யாவரின் உள்ளுக்குள்ளும் சுயசுயசுயசுயம் என்று
[எனையொரு கனவு
தீராத சொர்க்கம்போலே தினதினதினதினம்
கண்சொன்னால் கட்டுப்படும் கணகணகணகணம்
குன்றத்தில் ஏற்றிவைக்கும் குணகுணகுணகுணம்
குன்றாத அன்புபொங்கும் மனமனமனமனம் என்று
[எனையொரு கனவு
எல்லா அசைவுக்குள்ளும் நடநடநடநடம்
இலக்கணம் மாற்றுகின்ற திடதிடதிடதிடம்
தன்னிகர் இல்லாவண்ணம் தடதடதடதடம்
இன்னொரு பால்வெளிக்குள் இடஇடஇடஇடம் என்று
[எனையொரு கனவு
சோதியெழில் ஏந்திநிற்கும் முகமுகமுகமுகம்
சூழ்ந்துநிற்கும் சாந்தியங்கே மிகமிகமிகமிகும்
சத்தியத்தின் நித்தியத்தில் அகஅகஅகஅகம்
யோகமுள்ள வாழ்வுதாண்டும் யுகயுகயுகயுகம் என்று
[எனையொரு கனவு


**** ***** ***** ******

நலமா சுகமா?

நலமா சுகமா?
உடல் பொருள் உயிர் மனம் ஆன்மா
நலமா சுகமா?

அண்ணன் தம்பி அக்கா தங்கை அப்பா அம்மா
நலமா சுகமா?
கருமுதல் கடைவரை கேட்போம் மாமா
நலமா சுகமா?

வியாதிக்கில்லை சாதி; வலிக்கில்லை வேலி;
காவலை என்றும் வெல்லும் கவலை - இந்த
உலகத்தைக் கேட்போம் ஒவ்வொரு நாளும்
நலமா சுகமா?

ஏழை பணக்காரன் கைக்குழந்தை கிழவன்
பூனை முதல் யானை வரை - காணும்
ஒவ்வோர் உயிரையும் உரிமையில் கேட்போம்
நலமா சுகமா?

என்ன பகை இன்னும்? என்ன சண்டை இன்னும்?
இருப்பது சிறு காலமே - இதில்
எதற்கு மோதல்? பெருகட்டும் காதல்
பார்வை மூலமே கேட்டிடலாமே
நலமா சுகமா?

வார்த்தை இருக்கு வாழ்த்துவதற்கு
மனுசனுக்கு மனமிருக்கு - அட
இன்னும் இதிலே தாமதம் எதற்கு?
பாய்ந்து அணைத்துப் பரிவுடன் கேட்போம்
நலமா சுகமா?

சிக்கலுக்கெல்லாம் தீர்வு இருக்கு
ஆயிரம் பாதை திறந்து கிடக்கு
சிக்கெனப் பிடித்தால் விட்டிடும் பிணக்கு
கூட்டிப் பெருக்கு வாழ்க்கைக் கணக்கு
நட்பைப் பெருக்கு உலகம் நமக்கு
அக்கறையுடனே அடிக்கடி கேட்போம்
நலமா சுகமா?

- அண்ணா கண்ணன்

**** ***** ***** ******

'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து இளம் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் அண்ணா கண்ணன் சென்னையில் வசிக்கிறார். கவிஞர் , இதழாளர், ஆய்வாளர் என்ற பன்முக திறமை கொண்ட அண்ணா கண்ணனின் எழுத்தாக்கங்கள் 18 நூல்களாக வெளிவந்துள்ளன. அமுத சுரபியில் இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றிய அண்ணா கண்ணன் தமிழ் சிஃபியின் ஆசிரியராக பணிபுரிகிறார்.

வாசகர் கடிதம்:


கெந்தி விளையாடச் தெருச்சந்திக்காம் - கவிதை
சிந்தி விளையாட அந்திமழைக்காம் - தமிழ்
தந்து விளையாட அண்ணாகண்ணனாம் - வயது
பிந்தி விளையாட வந்தும்காதல் சொட்டியதே!

Sachithananthan.K
24 -11 -2006
tamilnool@rediffmail.com

தொடர்ந்து பல கவிஞர்களின் கவிதைகள் வலம் வர இருக்கின்றன.

கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.


பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க...

க.அம்சப்ரியா
உதயசங்கர்
கடற்கரய்
ஹரன்பிரசன்னா
சாரோன் செந்தில்குமார்
இரா.தமிழரசி
நல்லான் இராமசாமி
யவனிகா ஸ்ரீராம்
அரங்கமல்லிகா
ராஜா சந்திரசேகர்
சேவியர்
பாரதிகிருஷ்ணன்
கவிஞர் சுகுமாரன்
கீதாஞ்சலி பிரியதர்ஷனி
தேன்மொழி.எஸ்
தேவதேவன்
ம.திலகபாமா
கோ.வசந்தகுமாரன்
மதியழகன் சுப்பையா
முத்துமகரந்தன்
ரவிசுப்ரமணியன்
அழகுநிலா
அரிக்கண்ணன்
அய்யப்ப மாதவன்
அன்பாதவன்
ஜே.கே.73


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...