அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சௌந்தரசுகன் -சிற்றிதழ் அறிமுகம் 54

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   06 , 2006  06:35:20 IST

தனி மனிதர்கள் நடத்தும் சிற்றிதழ்களே அவர்களின் விடாப்பிடியான தன்மையினால் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்பார் வல்லிக்கண்ணன். அவ்வகையில் குறிப்பிடவேண்டிய இதழ் 'சுந்தரசுகன்' சுந்தரசுகன் எனும் பெயரில் வெளிவந்து கொண்டிருந்த இதழ் இடையில் சௌந்தரசுகன் என பெயர் மாற்றப்பெற்று வெளிவந்து கொண்டிருக்கிறது.
'இறக்கும் வரை இதழ் வரும் ' எனும் முழக்கத்துடன் 1987ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இதழை ஆரம்பித்தார் சுகன். 19 ஆண்டுகளுக்கு மேலாக , இதுவரை (செப் 06) யில் 232 இதழ்கள் வெளியாகியுள்ளன. இவ்விதழின் ஆசிரியர் சு.சௌந்தரவதனா. நிறுவனர்: அமரர் தியாகி கே.வி.திருஞானம்.தற்போது 46 பக்கங்களில் பத்து ரூபாய் விலையில் வந்து கொண்டிருக்கிறது.

தொடக்கம் முதல் இன்றுவரை தொடர்ந்து மாத இதழாக வந்து கொண்டிருக்கிறது.கதை, கவிதை, கட்டுரை , நூல் ஆய்வு, நேர்காணல் , கடித இலக்கியம் , போன்ற பகுதிகள் வெளியாகிவருகின்றன. கடித இலக்கியம் பகுதியில் வெளியான கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி , தஞ்சை பிரகாஷ் , எம்.வி. வெங்கட்ராம் போன்றோரது கடிதங்கள் குறிப்பிடத்தக்கவை.

வல்லிக்கண்ணன் , பிரபஞ்சன் , தி.க.சி , அம்பை , கழனியூரன் , வா.மு.கோ.மு , இலக்குமிகுமாரன் , ஞானதிரவியம் , வெற்றிப்பேரொளி , உஷாராணி , சொ.பிரபாகரன் , பொன்னியின் செல்வன் , அன்பாதவன் - மதியழகன் சுப்பையா, வளவ.துரையன் , செந்தூரம் ஜெகதீஷ் , எஸ்.தங்கராஜ், இரவிச்சந்திரன் போன்ற பல படைப்பாளிகளின் படைப்புகள் இவ்விதழில் வெளிவருகின்றன.

முத்தொள்ளாயிரத்தை கதை வடிவில் இவ்விதழில் வளவதுரையன் எழுதிவருகிறார். இதே இதழில் புறநானூறை புதுக்கவிதை வடிவில் வெற்றிப்பேரோளி ஏற்கனவே எழுதியிருக்கிறார். ' தீபம்' இதழ் பற்றி வே. சபாநாயகம் இவ்விதழில் விமர்சனத்தொடர் எழுதினார். அத்தொடர் பின்னர் புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.

கரிசல் அறக்கட்டளை சார்பில் கி.ராசநாராயணன் வழங்கிய ' சிறந்த சிற்றிதழுக்கான விருது' 2002இல் சுந்தரசுகனுக்கு அளித்து சிறப்பு செய்யப்பட்டது. விக்கிரமன் 'சிறந்த சிற்றிதழுக்கு' அளித்த முதல் விருதும் இவ்விதழுக்குக் கிடைத்திருக்கிறது.

'சுந்தரசுகன்' சில முக்கிய சிறப்பிதழ்களையும் வெளியிட்டிருக்கிறது. 75வது இதழ் ' வியர்வை சிறப்பிதழாகவும் ' 2002 ஜீன் இதழ் 'வன்முறை எதிர்ப்பு சிறப்பிதழாகவும் 100வது இதழ் 'சிற்றிதழ் சிறப்பிதழாகவும் ' வெளிவந்திருக்கிறது.

இதழ் பணியோடு 'சுகன் பைந்தமிழ்தடாகம்' எனும் பெயரில் அவ்வப்போது இலக்கியக் கூட்டங்களையும், நடத்தி வருகிறார்.

ஆசிரியர் பற்றி

தற்போது 41 வயதாகும் சுகன் , பத்திரிக்கைப்பணியுடன் கதை , கட்டுரை , கவிதைகளையும் எழுதிவருகிறார். 1988இல் இவரது முதல் தொகுப்பான 'சுகந்த சுரங்கள்' வெளிவந்தது. பிறகு 1989இல் 'உயிரில் நடந்த உற்சவங்கள் ' காதல் லிபிகள் (1990), சாமக்கூத்து (1997) , பூஞ்சாலி (2003) ஆகிய கவிதை நூல்கள் வெளியாகியுள்ளன. தீராத தாகத்தோடு தொடர்ந்து சுகனை நடத்திவருகிறார் சுகன்.

சந்தாவிவரம்

தனி இதழ் - ரூ .10/
ஆண்டுக்கு - ரூ.120/
அரையாண்டுக்கு - ரூ.60

தொடர்பு முகவரி

சுகன்
"அம்மா வீடு"
சி- 46 - 2-ஆம் தெரு
நகராட்சி குடியிருப்பு
தஞ்சாவூர் - 613007
பேச (04362) 241607
செல்பேசி - 9442346334

- மு. யாழினிவசந்தி

வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.


கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி
ஆயுத எழுத்து
விழிப்புணர்வு
வடக்கு வாசல்
இனிய ஹைக்கூ
உழைப்பவர் ஆயுதம்
தை , மண்மொழி
தச்சன்
அதிர்வு , குழலோசை
தமிழ் நேயம்
யாதும் ஊரே
மது மலர்
தலித்முரசு
மீண்டும் கவிக்கொண்டல்
அநிச்ச
தமிழ் பணி
வல்லினம்
நறுமுகை
சோலைக்குயில்
கணையாழி
அணி
கிழக்குவாசல்
அணங்கு
தாமரை
கனவு
மெய்யறிவு
இனிய நந்தவனம்
அம்ருதா
பெண்ணியம்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...