அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பெண்ணியம் - சிற்றிதழ் அறிமுகம் 53

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   29 , 2006  04:53:30 IST

பெண்களுக்கானவையாக அழகுக்குறிப்புகளையும் , சமையல் குறிப்புகளையுமே பெரும் பத்திரிக்கைகள் வெளியிட்டு வருகின்றன .ஆண்களுக்கான போகப் பொருளாகவே பெண்களின் அழகியப் படங்களையும் அரைகுறை ஆடைப்படங்களையும் அவை வெளியிடுகின்றன. இத்தகைய வணிகச்சிந்தனையிலிருந்து மாறுபட்டு பெண்களின் பிரச்னைகள் குறித்தும் பெண்களின் விடுதலை குறித்தும் கொள்கை சார்ந்த அரசியல் இதழ்களும் இலக்கிய இதழ்களுமே முக்கியத்துவம் கொடுத்து பேசுகின்றன. அப்படியான ஒரு இதழாகவே வெளி வந்து கொண்டிருக்கிறது பெண்ணியம் மாத இதழ்

" வீட்டுக்கதவின்படியைதாண்டிவருவதே கேடு - என்ற விதி உடைத்துப் படைக்க வேணும் புதியோதோர் நாடு" என்பதை முழக்கமாகக் கொண்ட பெண்ணியம் இதழின் ஆசிரியர் , லலிதா ; பொறுப்பாசிரியர் இளையராஜா; இணை ஆசிரியர் நிர்மலா

"... ஒடுக்கப்பட்டோருக்கென்றே படைக்கப்பட்ட இவ்விருவகைக் கோட்பாட்டிலும் (மார்க்சிய, பெரியாரியக் கோட்பாடுகள்) உள்ள செழுமையான செயல்பாடுகளை முழுவதுமாக தன்வயப்படுத்தியும் தமிழ்ச் சமூகத்தில் அவ்வக்காலத்திலும் முன்னெழுத்து வரும் பெண்விடுதலை சிந்தனைகளை ஆய்ந்தறிந்து உள்வாங்கியும் பெண்ணியத்தை வளர்ப்பதன்றோ பெண்ணினத்தின் துரிதப்படுத்தும் எந்ற புரிதலையே பெண்ணியம் இதழ் தனது திசை வழியாகக் கொள்கிறது." என தனது ' திசையை'த் தெளிவுபடுத்துகிறது முதல் இதழ் ( ஆகஸ்டு 06) தலையங்கம்.

கவிதை , சிறுகதை , கட்டுரை , திறனாய்வு, நூல்- அகம் போன்ற பகுதிகள் இடம்பெற்றுள்ளன.ஓவியாவின் ' பெண்ணின் நிலை நேற்று இன்று நாளை ', ஏ.பி. வள்ளி நாயகத்தின் ' தோள்சீலைக்கலகம்', முழுமதியின் ' புதிய சிலை, புதிய கண்ணகி... புதுகோட்பாடு', புதிய மாதவியின் 'ஈழத்தின் கவிதை போராளிகள்', பொன் .குமாரின் ' நவீன இலக்கியத்தில் பெண்ணியம்' போன்ற முக்கியமான கட்டுரைகள் முதல் இதழில் வெளியாகியுள்ளன. எந்த நிறுவனங்களின் விளம்பரங்களும் இன்றி இதழ் வெÇ¢வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சந்தாவிவரம்

ஆண்டு நன்கொடை - ரு 120
தனி இ¾ழ் -ரு 10
வாழ்நாள் நன்கொடை - ரூ 1000
வெளிநாடு - 20 டாலர்

முகவரி

பெண்ணியம்
பாலாஜி டவர் , முதல்மாடி
4 , பாரதி தெரு ,
காவேரி நகர்
சைதாப் பேட்டை
சென்னை - 600015
தொலைபேசி - 044 - 24323096
செல்பேசி - 0 - 9840492427

- மு. யாழினிவசந்தி

வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.


கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி
ஆயுத எழுத்து
விழிப்புணர்வு
வடக்கு வாசல்
இனிய ஹைக்கூ
உழைப்பவர் ஆயுதம்
தை , மண்மொழி
தச்சன்
அதிர்வு , குழலோசை
தமிழ் நேயம்
யாதும் ஊரே
மது மலர்
தலித்முரசு
மீண்டும் கவிக்கொண்டல்
அநிச்ச
தமிழ் பணி
வல்லினம்
நறுமுகை
சோலைக்குயில்
கணையாழி
அணி
கிழக்குவாசல்
அணங்கு
தாமரை
கனவு
மெய்யறிவு
இனிய நந்தவனம்
அம்ருதா


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...