அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மெய்யறிவு - சிற்றிதழ் அறிமுகம் 50

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   08 , 2006  05:52:31 IST

" .... .... .... ...
தாத்தா காலத்திலிருந்து
தொடர்ந்து நடந்தது.

ரெண்டு சாதி சண்டையினால்
நின்று போச்சு பண்டிகை

வருஷம் அஞ்சாயிடுச்சு
விவாதம் முடியல்ல
மாரியம்மனை பார்த்தாலே
மனசு துடிதுடிக்குது

மக்கள் குறை தீர்ப்பதில்
மகா சக்தி படைத்தவளே
வேண்டிய வரம் தருகின்ற
வீரியம் கொண்டவளே

எங்க கோரிக்கையெல்லாம்
ஒண்ணே ஒண்ணுதான்
உன் திருவிழா நடத்த
ஒரு வழிகாட்டு தாயே! ".

(பொன்குமார் - மெய்யறிவு ஆகஸ்ட் 2006)

தமிழ்ச்சூழலில் இலக்கியத்துக்காகவும் , அரசியல் கொள்கைக்காகவும் பல சிற்றிதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாத்திகச் சிந்தனையை மையப்படுத்தி ஒரு சில இதழ்களே வெளிவந்து கொண்டிருக்கின்றன.அவற்றில் குறிப்பிடத்தகக்து 'மெய்யறிவு' மாத இதழ். முதல் இதழ் செப்டம்பர் 2003ல் வெளிவந்தது. இதன் ஆசிரியர் , கவிஞர் குடந்தையான் , இணை ஆசிரியர் , டாக்டர் சரோஜா.

ஆரம்பத்தில் 24 பக்கத்தில் 5.00 ரூபாயில் வெளிவந்தது. தற்போது அதே அளவில் 10.00 ரூபாயில் வளிவந்துகொண்டிருக்கிறது.

கவிதை , சிறுகதை ,கட்டுரை , நூல்விமர்சனம் ஆகியவை இடம் பெற்று வருகின்றன. இவ்விதழில் இடம்பெற்று வரும் படைப்புகள் அனைத்தும் சமூக விழிப்புணர்வைத் தூண்டும் விதமாகவே அமைந்துள்ளன.

" மூடநம்பிக்கையொழிப்பு , பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்புதல், கடவுள் நம்பிக்கை , அது தொடர்பான மூட நம்பிக்கைகள் , வருணாசிரம பகுப்புகள் போன்ற கொடிய நோய்களைப் போக்குவதே மெய்யறிவின் நோக்கம். முக்கியமாக நோய்க்குக் காரணமானவர் யார் ? இந்த நோய் எதனால் ஏற்பட்டது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காமல், இருக்கும் நோயை தீர்ப்பதற்கான மருந்துகளைக் கொடுப்பதும் ,அந்த நோய் மற்றவர்களுக்கு வராமல் தடுப்பதுமே மெய்யறிவின் பணி ", என்கிறார் ஆசிரியர் குடந்தையான்.

பழனி எழில்மாறன் , டாக்டர் சரோஜா, கலையரசு, காவிரிச் செல்வன் , பெரணமல்லூர் சேகரன் , போன்றோரது படைப்புகள் இவ்விதழில் மெய்யறிவு என்பது உண்மையான அறிவு.

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு

எனும் வள்ளுவர் கூற்றுக் கேற்ப யார் எந்தக் கருத்தைக் கூறினாலும் அவற்றிலுள்ள பொய்மை நீக்கி உண்மைதனைக் கண்டறிவதே மெய்யறிவு என இதழுக்கான பெயர்க்காரணத்தை கூறுகிறார் ஆசிரியர்.

"அறிவை முதன்மைப்படுத்துவோம்!
மனிதர்களை ஒருங்கிணைப்போம்!"

எனும் கொள்கையை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது மெய்யறிவு.

இவ்விதழில் வெளியாகும் 'சித்தர்களைப் பற்றி சிந்திக்கிறேன் ' எனும் கலையரசுவின் தொடர்கட்டுரை சித்தர்களின் சித்து விளையாட்டுகள் குறித்த கட்டுக்கதைகளை உடைக்கிறது.

' தத்துவச் சிறைகளில் மனிதர்கள் ' எனும் காவிரிச் செல்வனின் தொடர்கட்டுரை , கடவுள் என்பது உண்மையா? என விஞ்ஞான பூர்வமான கருத்துக்களை ஆதாரப்பூர்வமான பேசுகிறது.

முன் பக்க - பின்பக்க அட்டையும் கூட ஏதோவொரு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியாகிறது.

ஆசிரியர் குறிப்பு

65 வயதாகும் கவிஞர் குடந்தையான் , இதுவரை ஆய்வுக் கட்டுரைகள் , நாவல்கள் , கவிதை , சிறுகதை என 30 நூல்கள் வெளியிட்டிருக்கிறார். போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தற்போது செý¨Éயில் வசித்து வருகிறார். இந்த வயதிலும் தொடர்ந்து சமூகப் பணியாற்றிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

' மெய்யறிவு' - சமூக மாற்றத்திற்கான கருவிகளில் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

சந்தா விவரம்

இரண்டாண்டு சந்தா - ரூ . 200 /
தனி இதழ் - ரூ. 10/
பத்தாண்டு - ரூ. 500/
ஆயுள் சந்தா - ரூ 1000/

முகவரி

எண் 3/433 - D
குபேரன் நகர் விரிவு 11 ஆவது தெரு
மடிப்பாக்கம் ,
சென்னை - 600091
தொலை பேசி - 044 - 65160851

- மு. யாழினிவசந்தி

வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.


கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி
ஆயுத எழுத்து
விழிப்புணர்வு
வடக்கு வாசல்
இனிய ஹைக்கூ
உழைப்பவர் ஆயுதம்
தை , மண்மொழி
தச்சன்
அதிர்வு , குழலோசை
தமிழ் நேயம்
யாதும் ஊரே
மது மலர்
தலித்முரசு
மீண்டும் கவிக்கொண்டல்
அநிச்ச
தமிழ் பணி
வல்லினம்
நறுமுகை
சோலைக்குயில்
கணையாழி
அணி
கிழக்குவாசல்
அணங்கு
தாமரை
கனவு


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...