![]() |
அந்த நாள் ஊஞ்சல் 15 - யாழ்சுதாகர்Posted : வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 18 , 2006 19:18:55 IST
திரை இசைபாடல்கள் பற்றிய அபூர்வ தகவல்கள் யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சலில்'....
இன்னொரு பாடகருடன் அல்லது பாடகியுடன் இணைந்து பாடும் பாடல்களில் குயில் குதூகலத்துடன் டி.எம்.எஸ். செய்யும் வித்தைகள் பற்றி சென்ற வாரங்களில் பார்த்தோம்.இந்த வாரமும் இதே சுவாரஸ்யங்களை நிறைவுபடுத்தும் சில பாடல்களைப் பற்றிப் பார்க்கலாம். விஜயபாஸ்கரின் இசையில் உருவான படம் 'கல்யாணமாம் , ¸øÂ¡ணம்' இந்தப் படத்தில் 'இளமை நாட்டிய சாலை ' என்ற பாடலை முதலில் எஸ்.ஜானகி அவர்கள் தான் பாட ஆரம்பிப்பார். பல்லவி முழுவதையும் அவர் பாடி சரணத்திலும் சில வரிகளைப் பாடிய பின்பு... எதிரொலியுடன் கூடிய ஒரு 'ஹம்மிங்' கொடுத்தபடி... 'ஆòதங்கரையில் காத்திருந்தாள் பாமா' என்று சொல்லிக் கொண்டே மண்வாசனை கமகமக்க டி.எம்.எஸ். உள்ளே வரும் அழகே தனி. ஆர். கோவர்த்தனம் அவர்களின் இசையில் வெளிவந்த படம் ' பட்டணத்தில் பூதம்'. இந்தப் படத்தில் 'அந்த சிவகாமி மகனிடம் சேதி கேளுங்கள்'என்ற பாடலை பல்லவியில் ஆரம்பித்து பாதித்தூரம் வரை சுசீலா பாடி விடுவார். அவர் பாடி முடிந்ததும்...விஸ்தாரமான ஒரு 'எக்கோ' வுடன் -'கம்மிங் 'கொடுத்தபடி டி.எம்.எஸ். பாடலோடு இணைகின்ற அழகைப் பாராட்ட கைவசம் என்னிடம் வார்த்தைகள் இல்லை. குடியிருந்த கோயில் 'படத்தின்' 'துள்ளுவதோ இளமை' பாடலை விட்டு விட்டீர்களே என்று கேட்கிறீர்களா? எப்படி விட முடியும் ? விடாமல் துரத்துகின்ற வசீகரப் பாடல்களில் இதுவும் ஒன்றாச்சே... எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கû துள்ளல் நடைபோடும் துடிப்பான குரலில் பல்லவியைப் பாடி , சரணத்தையும் முடித்ததும் 'பா...பப்பப்பா...' என்று போதையூட்டும் உற்சாகத்தைக் காற்றிலே ஊற்றிக் கொண்டே டி.எம்.எஸ். பறந்து வரும் அழகு ..பரவசம்! ராமு Àடத்தில் ' கண்ணன் வந்தான்' பாடலை சீர்காழி கோவிந்தராஜன் அவர்கû ஆரம்பித்து சரணத்தையும் பாடி முடித்தபிறகு 'கருணை என்னும் கண் திறந்து காக்க வேண்டும் ' என்று சொல்லிக் கொண்டே டி.எம்.எஸ். உள்ளே வருகின்ற போது .. அந்த ஆரம்ப நெகிழ்ச்சியில் ....பரவசத்தில் கல்மனசு கூட கற்பூரமாகி உருகும். 'ஒளிவிளக்கு' படத்தில் 'ருக்குமணியே பறபÈபÈ' பாடா¨Ä எல்.ஆர்.ஈஸ்வரி ஆரம்À¢த்துவைப்பார். அவர் பாடிக்கொண்டிருக்கும் போதே...ப்ளீஸ் ஒன்ஸ் அகெய்ன்' என்று டி.எம்.எஸ் . சொல்லுவார். அந்த ஒரு வார்த்தையே... அவரது கம்பீரமான வருகையை கனத்த ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைக்கும். [ஊஞ்சல் இன்னும் ஆடும்] யாழ் சுதாகர் அற்புதமான பழைய திரைப்பட பாடல்களுக்கு இடையே யாழ்சுதாகரின் குரலை சென்னை 'சூரியன் எப்.எம்மில் ' நீங்கள் கேட்கலாம். ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் ,யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் செயலாளருமான யாழ்வாணனின் மூத்த புதல்வர் இவர். 'தேவி' ,'சாவி' ,'பொம்மை' ஆகிய பத்திரிக்கைகளில் பணியாற்றிய யாழ்சுதாகர் பிரபல பெண்கள் மாத இதழான 'மங்கை'யில் ஆறு ஆண்டுகள் (1993 - 1998) பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். 'ஒரு யாழ்ப்பாணக் குயில் பேசுகிறது' (1986) ,'புலம் பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு யாழ்சுதாகர் பதிøகள்' ஆகிய புத்தகங்களை யாழ் சுதாகர் எழுதியுள்ளார். யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளை...அபூர்வமான ப¨Æய பாடல்களுடன்...கீழ் வரும் இணைய தளத்தில் கேட்டு ரசிக்கலாம். yazhkavi.blogspot.com யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சல்' வாரந்தோறும் வெள்ளியன்று வெளியாகும். அந்த நாள் ஊஞ்சல் பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும். Article 1 Article 2 Article 3 Article 4 Article 5 Article 6 Article 7 Article 8 Article 9 Article 10 Article 11 Article 12 Article 13 Article 14
|
|