அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 50 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பார்வதி தேவி சிலை கண்டுபிடிப்பு! 0 எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் 0 மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து 0 உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! 0 பயங்கரவாத தாக்குதல்: தமிழக வீரர் உட்பட 3 பேர் வீர மரணம் 0 மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு; கதறி அழுத போலீஸ்! 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அணங்கு - சிற்றிதழ் அறிமுகம் 47

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   17 , 2006  15:20:51 IST

"குடும்பத்தின் வயிற்றுப் பாட்டுக்காகப் பாலியல் தொழிலாளியாக மாற்றப்பட்ட பெண்கள், விற்கப்பட்ட பெண்கள் என சமூகமே வித்தழைத்தின்ற மாடு மாதிரி நிலம் பாரித்து வீங்கிப்போய் உள்ளது. நிலத்தையும் நீரையும் தெய்வமாக வணங்குகிறவர்கள், அதனால்தான் விற்றுக்கொண்டிருக்கிறார்கள், பெண்ணையும் தெய்வமாக வணங்குபவர்கள் பெண்களையும் எல்லா சந்தையிலும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்...

பெண்ணியத்தை ஏற்காத மாற்று அரசியலோ மனித விடுதலை அரசியலோ ஒரு போதும் உருவாக முடியாது. சுதந்திரமான பயமற்ற பேச்சும் விவாதமுமே அதற்கான தொடக்கம்".

எனும் அறிவிப்புடன் ஜீன் - ஆகஸ்டு 06 இல் வெளிவந்திருக்கும் சிற்றிதழ், 'அணங்கு'-காலாண்டிதழ். இவ்விதழின் ஆசிரியர், மாலதி மைத்ரி. பெண்களுக்கான இதழ்கள் பல வந்துகொண்டிருந்தாலும் நவீன இலக்கியத்தில் பெண்ணிய படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்திருக்கிறது, 'அணங்கு', 64 பக்கங்களைக் கொண்ட இவ்விதழில் கதைகள், கட்டுரைகள், நூல்விமர்சனம், மொழி பெயர்ப்புக் கட்டுரைகள், நேர்காணல், கருத்தரங்கு குறித்த விவாதங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

"இந்த மகான்கள் சகல உரிமைகளுடன் சுகபோகத்துடன் இங்கு வாழ்ந்து வரும்போது இத்தொழிலுக்குப் பல்வேறு வாழ்வியல் நிர்ப்பந்தங்களாலும் வறுமையாலும் தள்ளப்பட்ட பெண்கள் மட்டும் சமூகத்தால் ஒதுக்கப்படுவதும் பழிக்கப்படுவதும் ஏன்?" எனும் கேள்வியை எழுப்புகிறது, சபாதிவானின் நடனமாதர் பற்றிய 'டெல்லி மும்பை டெல்லி' எனும் ஆவணப்படம் குறித்த மாலதி மைத்ரியின் விமர்சனக் கட்டுரை.

ஆப்பிரிக்க அமெரிக்காவில் அடிமைகளாக வாúந்து எழுத்து சுதந்திரம் பெற்று எழுதத் தொடங்கிய கருப்பினப் பெண்கள் பற்றிய 'பெண் இயந்திரம்' எனும் கட்டுரையும் முதல் இதழில் இடம் பெற்றுள்ளது.

பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மார்க்ரித் த்யூராவின் 'உயிர்க்கொல்லி' எனும் மொழிபெயர்ப்புக் கட்டுரையும் மலையாளத்தில் எழுதிவரும் 'அனிதாதம்பியின்' நேர் காணலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது கவிதையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மனித உரிமை மீறல் குறித்து பிப்ரவரி 22லிருந்து 24 வரை டில்லி மார்க்ஸ்முல்லர் பவனில் நடைபெற்ற கருத்தரங்கு பற்றிய மாலதி மைத்ரியின் 'கண்காணிப்பு தணிக்கை தண்டனை' கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.

பெண்ணியம், பெண்ணெழுத்து குறித்த சில எழுத்தாளர்களின் கருத்துகள் 'உதயம் நேர்காணல்கள்' தொகுப்பிலிருந்து சில பகுதிகள் இடம் பெற்றுள்ளன. பொன்னீலன், மனு‰யபுத்திரன், சாரு நிவேதிதா போன்ற சிலருடைய கருத்துகளுக்கு மாலதி மைத்ரியின் எதிர்வினையும் இடம் பெற்றுள்ளது.

தொடர்சியான செயல்பாட்டின் வாயிலாக பெண்ணியத்திற்கு வளம் சேர்க்கும் இதழாக 'அணங்கு' பரிணமிக்கும் என நம்பலாம்.

சந்தா விவரம்:

தனி இதழ் - ரூ.25.00

படைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப வேண்டிய முகவரி:

'அணங்கு'
1, மாதா கோயில் வீதி,
ரெயின்போ நகர்,
புதுச்சேரி - 605 011.
பேசி - 9443090175.
மின்னஞ்சல் : malathimaithri@rediffmail.com

- மு. யாழினிவசந்தி

வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.


கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி
ஆயுத எழுத்து
விழிப்புணர்வு
வடக்கு வாசல்
இனிய ஹைக்கூ
உழைப்பவர் ஆயுதம்
தை , மண்மொழி
தச்சன்
அதிர்வு , குழலோசை
தமிழ் நேயம்
யாதும் ஊரே
மது மலர்
தலித்முரசு
மீண்டும் கவிக்கொண்டல்
அநிச்ச
தமிழ் பணி
வல்லினம்
நறுமுகை
சோலைக்குயில்
கணையாழி
அணி
கிழக்குவாசல்


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...