???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு 0 ஹைதராபாத்தில் மீண்டும் ஆணவக்கொலை முயற்சி: பெண்ணின் தந்தை வெறிச்செயல்! 0 முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் 0 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் 0 பாங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு! 0 தென்னிந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 51.99 லட்சம்! 0 கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அந்த நாள் ஊஞ்சல் 14 - யாழ்சுதாகர்

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2006  12:36:18 IST

திரை இசைபாடல்கள் பற்றிய அபூர்வ தகவல்கள் யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சலில்'....

இன்னொரு பாடகர் அல்லது பாடகியுடன் டி.எம்.எஸ் இணைந்து பாடும் பாடலை முதலில் டி.எம்.எஸ் ஆரம்பிக்காமல் , மற்றவர் ஆரம்பிக்க அதன் பின்பு டி.எம்.எஸ்ஸின் குரல் சற்றுத்தாமதமாக வரும் . பாடல்களில் - டி.எம்.எஸ். தமது அழுத்தமான முத்திரையைப் பதித்துக் கொண்டே உற்சாகமாக தாம் வந்துவிட்டோம் என்பதை குரல் குறிப்பால் உணர்த்தும் இடம் அருமை என்பதை சென்ற தொடரில் சில பாடல்களை உதாரணம் காட்டி வியந்திருந்தோம்.

அந்த வகையில் இன்னொரு பாடகருடன் டி.எம்.எஸ். பாடிய பாடல்களில் அவரது வருகையை ஆர்வத்துடிப்போடு எதிர்பார்க்க வைக்கும் இன்னும் சில பாடல்களை இந்த வாரமும் பார்க்கலாம்.

'தரிºÉõ' படத்தில் ' இது மாலை நேரத்து மயக்கம்...' என்ற பாடலை முதலில் எல்.ஆர். ஈஸ்வரி தான் ஆரம்பித்து வைப்பார். இளமை துள்ளும் குரலில் அவருக்கே இயல்பான நளினத்துடன் எல்.ஆர்.ஈஸ்வரி அந்தப் பாடலின் பல்லவியை முழுதாகப் பாடி முடித்ததும் - டி.எம்.எஸ் ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டே பாடலில் தமது பங்கை ஆரம்பிப்பார்.

அவர் பாடத் துவங்குவதற்கு முன்பாக அந்தச் சிரிப்பே ரசிக நெஞ்சங்களை சிலிர்க்க வைக்கும். ஆதாவது ' இந்த உலகத்தில் எதுவுமே நிலையானது இல்லை. எல்லாமே மாயை ' என்று சொல்லிக் கொண்டே ஒரு பட்டினத்தார் சிரித்தால் அøÄது ஒரு புத்தர் சிரித்தால் எப்படி இருக்குமோ அந்த அர்த்தத்தை தமது சலிப்பும் , கிண்டலும் கலந்த அந்¾ சிரிப்பொலியால் சிறைபிடித்துக் கொண்டு வந்து நமது செவிகளின் முன் கொண்டுவந்து நிறுத்துவார் டி.எம்.எஸ்.

(இதே போல ஒரு அர்த்தமும் , ஆழமும் பொதிந்த சிரிப்பொலியை வி.தட்சிணாமூர்த்தியின் இசையில் உருவான ' தேவி ' படத்தில் இடம்பெற ' அன்னையின் மடியில் துவங்கிய வாழ்க்கை.. மண்ணின் மடியில் முடிகிறது... ' என்ற பாடலின் பல்லவியில் முதல் இரண்டு வரிகளைப் பாடியதும் வெகு யதார்த்தமாக ஆனால் சிந்¾னையைத் தூண்டுகின்ற விதத்தில் அற்புதமாக வெளிப்படுத்துவார். டி.எம்.எஸ்.)

மெல்லிசை மன்னரின் இன்னிசையில் ' குமரிக் கோட்டம்' படத்தில் ஒரு பாடல். ' நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவதை சொன்னாள் ' என்ற பாடலை கிட்டத்தட்ட பாதிப்பாடல் வரை எல்.ஆர்.ஈஸ்வரி பாடிவிடுவார்.

எல்.ஆர்.ஈஸ்வரியின் இளமை ஊஞ்சலாடும் குரலை ரசித்துக் கொண்டே 'எப்போ வருவாரோ' என்று டி.எம்.எஸ்.…¢ன் வருகையை எதிர்பார்òது ஆவலோடு காத்துக் கொண்டிருப்போம்.

எல்.ஆர்.ஈஸ்வரி பலல்வியையும் , சரணத்தையும் பாடி முடித்ததும் அசத்தலான ஒரு பின்னணி ஒலிக்கும் . அந்த இசையைப் பின்னுக்கு தள்ளிக் கொண்டே ' நான் தொடர்ந்து போக... என்னை மான் தொடர்ந்ததென்ன..?' என்று துள்ளிக் குதித்துக் கொண்டே Ê.எம்.±ஸ். ENTER ஆகும் இடம் அருமை ! அருமை! அபாரம்!!

[ஊஞ்சல் இன்னும் ஆடும்]

யாழ் சுதாகர்


அற்புதமான பழைய திரைப்பட பாடல்களுக்கு இடையே யாழ்சுதாகரின் குரலை சென்னை 'சூரியன் எப்.எம்மில் ' நீங்கள் கேட்கலாம்.

ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் ,யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் செயலாளருமான யாழ்வாணனின் மூத்த புதல்வர் இவர்.

'தேவி' ,'சாவி' ,'பொம்மை' ஆகிய பத்திரிக்கைகளில் பணியாற்றிய யாழ்சுதாகர் பிரபல பெண்கள் மாத இதழான 'மங்கை'யில் ஆறு ஆண்டுகள் (1993 - 1998) பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார்.

'ஒரு யாழ்ப்பாணக் குயில் பேசுகிறது' (1986) ,'புலம் பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு யாழ்சுதாகர் பதிøகள்' ஆகிய புத்தகங்களை யாழ் சுதாகர் எழுதியுள்ளார்.

யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளை...அபூர்வமான ப¨Æய பாடல்களுடன்...கீழ் வரும் இணைய தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.
yazhkavi.blogspot.com

யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சல்' வாரந்தோறும் வெள்ளியன்று வெளியாகும்.

அந்த நாள் ஊஞ்சல் பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.


Article 1
Article 2
Article 3
Article 4
Article 5
Article 6
Article 7
Article 8
Article 9
Article 10
Article 11
Article 12
Article 13


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...