![]() |
கீதாஞ்சலி பிரியதர்ஷனி - கவிதைத் திருவிழா 13Posted : வியாழக்கிழமை, ஆகஸ்ட் 03 , 2006 08:47:07 IST
மீதம் இருப்பவை
மென் காற்றின் தீண்டல் கலைந்திராத சிகையென உன் அலங்காரம் இன்றுள்ளது யாரோ ஒருத்தியின் குரலில் வரிகள் கடந்து தீராத காதலை இசைக்கிறது மின்குளிர் காலத்து அகதியின் உலை நெருப்பு உன் காமம் போல் கனிகிறது, இன்று வரை யாருடைய அழுகையையும் சொல்லாத என் கைத் தொலைபேசி நதியில் விழுகிறது இன்று என்னுடன் பயணிக்கும் வியாபாரி தன் விற்பனை நோட்டில் காதல் கடிதம் தயாரிக்கிறான் வீசும் கடல் காற்றில் நிமிட முள் துடிக்க அசைந்து சென்று கொண்டிருக்கிறது. இப்படகு திசை வெளிகள் நீரால் சூழப்பட்டிருக்கின்றன. ***** ***** ***** புதிய புதிர்கள் என்னிடமும், உன்னிடமும் சொற்கள் தளர்வாய் உரசிச் செல்ல வெட்கப்பட்டதேயில்லை இன்றுபோல். பழகின சாயங்கள் மொழியை வளர்த்தன இருவரிடமும். வெட்டுப்பட்ட இடத்தில் இருந்து கசியும் இந்த குளிர்வு ஏதுமற்ற குருதியின் நெடி நிறமற்றிருக்கிறது. நம்மை வழிபடுபவர்களின் கோரிக்கைகளை எந்த கடவுள்களாவது மொழி பெயர்ப்பார்களா. வரிவடிவம் ஏதுமற்று அலையும்படி விதிக்கப்பட்ட தேய்ந்து போன ஓசைகளால் ஒரு போதும் நிரப்பமுடிவதில்லை இந்த அறையை.நெடுங் கனவு முடிந்து பார்த்தேன்.யாரோ சிலர் இந்த கவிதையை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என் எழுதுகோலை எடுத்து. ***** ***** ***** வெளிச்சவேளை இயல்புமாறி கொட்டித்தீர்க்கிறது பருவம் கடந்த மழை குழந்தைகள் சொல்லும் சாகஸக் கதைகள் போல நீ பேசாத ,இந்த வேளைகளில் மௌனத்தை தொட்டு என் நாட்களை அடையாளம் காண்கிறேன் யாருக்காகவும் காத்து கொண்டிருக்காமல் என் தோட்டத்து தளிர் நிறம் மாறிக் கொண்டிருக்கிறது. நேற்று நீ உலர்த்தின ஈர உடை பகல் வேளை காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது எப்போதும் அச்சத்தை தராத இந்த வீட்டை நேசிக்கும் மெலிந்த சிறக¨ºப்பாய் பகல் நகர்கிறது பதப்படுத்தப்பட்ட வெளிறிய இறைச்சியாய் தெளிந்து கொண்டிருக்கிறது மழைக்குப் பிந்திய வானம். ***** ***** ***** செம்பட்டு - சில குறிப்புகள் தரைக்குமேலே சில விமானங்களும் எப்போதாவது கழுகுகளும் செல்கின்றன மொழிபெயர்ப்பாளரின் பேரக்குழந்தைகள் வெளியே விளையாடிக் கொண்டிருக்கின்றன மதியவேளையில் அகலமாய் மரித்த பறவைகளின் உடல்களின் மேல் அதிகாரத்தை செலுத்தும் ஈக்கள் சில. நீரின் அதிகாரம் செல்லாத இடத்தில் அலையும் காற்றுக்கு பதில் சொல்வது யார்.ஜைனத் துறவிகளின் உடல்கள் மேல் பாயும் சில கழுகுகள் நீரில் அமிழ்ந்து விடுகின்றன. ஆடி மாதபெரும் காற்றில் அலைகிறது உடலற்ற ஒரு சுவாசக் காற்று. இன்னமும் குற்றங்கள் மிச்சமிருப்பதால் மலைகளுக்கு பின்னே ஒளிகிறது சூரியன். - கீதாஞ்சலி பிரியதர்ஷனி கீதாஞ்சலி பிரியதர்ஷனி அவர்கள் 1963, ஏப்ரல் 14ல் சேலம் மாவட்டம் மேய்சேரியில் பிறந்தார். தற்போது திருச்சியில் வசித்து வருகிறார். இவர் கதை, கவிதை, கட்டுரை மற்றும் விமர்சனம் என்று பன்முகத்தளத்தில் இயங்கி வருகிறார். 'அவனைப்போல் ஒரு கவிதை' என்ற கவிதைத் தொகுதியும் 'மறந்து போன குரல்கள்' என்ற சிறுகதை தொகுப்பும் வெளியாகி உள்ளது. விரைவில் சிறுகதை தொகுப்பும் நவீனம் ஒன்றும் வெளியாக உள்ளது. தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன. கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும். பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க... கவிஞர் சுகுமாரன் தேன்மொழி.எஸ் தேவதேவன் ம.திலகபாமா கோ.வசந்தகுமாரன் மதியழகன் சுப்பையா முத்துமகரந்தன் ரவிசுப்ரமணியன் அழகுநிலா அரிக்கண்ணன் அய்யப்ப மாதவன் அன்பாதவன் ஜே.கே.73
|
|