???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொண்டர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி 0 ஸ்டாலின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து! 0 குடியரசுத் தலைவர், முதல்வர் பொங்கல் வாழ்த்து 0 நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்: ராகுல் காந்தி 0 வைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ எச்சரிக்கை 0 இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து 0 முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பெரியார் விருது! 0 போகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு 0 வைரமுத்து மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது: ஸ்டாலின் 0 எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: ராமதாஸ் 0 துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் 0 இஸ்ரோவின் புதிய தலைவருக்கு கனிமொழி வாழ்த்து 0 டிடிவி ஆதரவாளர்கள்: 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடி நீக்கம் 0 செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம்: நீதிமன்றத்தில் டிடிவி தரப்பு 0 தீ விபத்து ஏற்பட்ட மும்பை உணவக விடுதியின் உரிமையாளர்கள் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அந்த நாள் ஊஞ்சல் 13 - யாழ்சுதாகர்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   28 , 2006  23:03:45 IST

திரை இசைபாடல்கள் பற்றிய அபூர்வ தகவல்கள் யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சலில்'....

டி.எம்.எஸ் அவர்கள் இன்னொரு பாடகருடன் அல்லது பாடகியுடன் ஒரு பாடலைப் பாடும் போது இணைந்து பாடும் பாடகர் அல்லது பாடகி , பாடலின் பல்லவியை ஆரம்பித்த பிறகு டி.எம்.எஸ்.ஸின் குரல் ஒலிக்கின்ற பாடல்களை ரசிப்பது ஒரு ஆர்வம் கலந்த சுவையான அனுபவம்!

இப்படி அமையும் பாடல்களில் மற்றொரு பாடகர் அல்லது பாடகி பாடலை ஆரம்பித்து முடிக்கின்ற போது , டி.எம்.எஸ். பாடலைப் பாடத் துவங்குகிற இடம் கலகலப்பாக இருக்கும் அல்லது ஆர்ப்பாட்டமாக இருக்கும் . 'இதோ ... நான் வந்து விட்டேன் என்பதை அவர் சொல்லாமல் சொல்லுவது போல அவரின் Ìரலில் தனித்துவமான ஒரு உற்சாகமும் அவருக்கே இயல்பான முத்திரைகளும் வந்து விழும்.

இந்த வகையில் அமைந்த சில பாடல்களை இப்போது பார்ப்போம்.

' இரு மலர்கள்' படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் கவிஞர் வாலி புனைந்த 'மன்னிக்க வேண்டுகிறேன்' என்ற பாடலை முதலில் பி.சுசீலா தான் ஆரம்பித்து வைப்பார்.மிக இனிமை சொட்ட அந்தப்பாடலை அவர் ஆரம்பிப்பார் சுசீலா. அவர்கள் 5 வது வரியைப் பாடி முடிந்ததும் 'தித்திக்கும் இதழ் உனக்கு ...என்றென்றும் அது ±னக்கு' என்று டி.எம்.எஸ். பாட ஆரம்பிக்கும் போது 'தித்திக்கும் ' என்ற இடத்தில் தனியாக ஒரு 'குயில் முத்திரை பதித்து மொத்த காத்து மண்டலமுமே தித்திப்பதைப் போன்ற ஒரு பிரமையை ரசிக நெஞ்சங்களில் தோற்றுவிப்பார் .

இதே போல ' நாளை நமதே' படத்தில் நாளை நமதே என்ற பாடலை
'அன்பு மலர்களே நம்பி இருங்களே.. நாளை நமதே ' என்று எஸ்.பி.பி.தான் பாடலை முதலில் துவங்கி வைப்பார்.

நளினம் கொஞ்சும் நந்தவனக் குரலில் எஸ்.பி.பி அவர்கள் அந்த பாடலை ஆரம்பிப்பார். அவர் பல்லவியைப் பாடி முடித்ததும் ஆர்ப்பாட்டமான ஒரு பின்னணி ஒலிக்கும் . அந்த இசையோடு கைகோர்த்Ðக் கொண்டே 'நாளை நமதே இந்த நாளை நமதே' என்று சொல்லிக் கொண்டே டி.எம்.எஸ் துள்ளி வரும் அழகு ரசிக நெஞ்சங்களை சிலிர்க்க வைக்கும் . பரவசத்தில் மிதக்க வைக்கும் .இவை போன்ற ஆர்வம் கலந்த ரசனைத் தன்மையைக் கிளர்த்தெழச் செய்யும் .மேலும் கீர்த்தி மிகு பாடøகளைப் பற்றி அடுத்த வாரமும் பார்ப்போம்...

[ஊஞ்சல் இன்னும் ஆடும்]

யாழ் சுதாகர்


அற்புதமான பழைய திரைப்பட பாடல்களுக்கு இடையே யாழ்சுதாகரின் குரலை சென்னை 'சூரியன் எப்.எம்மில் ' நீங்கள் கேட்கலாம்.

ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் ,யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் செயலாளருமான யாழ்வாணனின் மூத்த புதல்வர் இவர்.

'தேவி' ,'சாவி' ,'பொம்மை' ஆகிய பத்திரிக்கைகளில் பணியாற்றிய யாழ்சுதாகர் பிரபல பெண்கள் மாத இதழான 'மங்கை'யில் ஆறு ஆண்டுகள் (1993 - 1998) பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார்.

'ஒரு யாழ்ப்பாணக் குயில் பேசுகிறது' (1986) ,'புலம் பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு யாழ்சுதாகர் பதிøகள்' ஆகிய புத்தகங்களை யாழ் சுதாகர் எழுதியுள்ளார்.

யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளை...அபூர்வமான ப¨Æய பாடல்களுடன்...கீழ் வரும் இணைய தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.
yazhkavi.blogspot.com

யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சல்' வாரந்தோறும் வெள்ளியன்று வெளியாகும்.

அந்த நாள் ஊஞ்சல் பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.


Article 1
Article 2
Article 3
Article 4
Article 5
Article 6
Article 7
Article 8
Article 9
Article 10
Article 11
Article 12


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...