???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையசேவை முடக்கம் ரத்து! 0 ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு 0 புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் 0 பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 0 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி 0 தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி 0 கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு 0 மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] 0 மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் 0 தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் 0 தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் 0 துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு 0 தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அந்த நாள் ஊஞ்சல் 12 - யாழ் சுதாகர்

Posted : சனிக்கிழமை,   ஜுலை   22 , 2006  20:41:37 IST

திரை இசைபாடல்கள் பற்றிய அபூர்வ தகவல்கள் யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சலில்'....

'ஏழிசை அரசர்' டி.எம்.எஸ் அவர்கள், பாகவதரின் தீவிரமான ரசிகர். பாகவதரின் பாடல்களைக் கேட்டதால் தான் சினிமாவில் பாட வேண்டும் என்கிற ஆர்வமும் தாகமும் அவருக்கு அதிகமானதாம்.

அதனால் தானோ என்னவோ டி.எம்.எஸ்ஸின் துவக்க கால பாடல்களில், டி.எம்.எஸ்ஸின் குரலில் பாகவதரின் சாயலும் ,முத்திரைகளும் அதிகமாக இருக்கும்.

பாகவதரைப் போல பாடவேண்டும் என்பதற்காக டி.எம்.எஸ். அவரது பாடல்களை திரும்பத் திரும்ப உன்னிப்பாக கேட்டிருக்கிறார். கடம் மாதிரி வாய் சின்னதாக இருக்கும் மண் பானையை வாங்கி ,அதற்குள் தமது வாயை வைத்துக் கொண்டு பலவித குரல்களை எழுப்பி... அதில் பாகவதர் வாய்ஸ் எந்த இடத்தில் வருகிறது என்பதை கண்டுபிடித்து, அந்தக்குரலை நாளும் பொழுதுமாக மண்பானைப் பயிற்சி மூலமாக உருவாக்கிக் கொண்டாராம். பாகவதர் ஸ்டைலுக்குப் பழக்கப்படுத்திக் கொண்டாராம்.

டி.எம்.எஸ். பின்னணிப் பாடகரக அறிமுகமாகி... இரண்டு மூன்று ஆண்டுகள் மட்டுமே பாகவதர் பாதிப்புடன் பாடினார். அதற்குப் பிறகு தம்க்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கி, தமது கடின உழைப்பாலும் , கதாபாத்திரங்களுக்கும் , நட்சத்திரங்களுக்கும் ஏற்ப தமது குரலிலே வண்ணங்களையும், வித்தியாசங்களையும் காட்டக் கூடிய அளவுக்கு 'தனித்துவம்' பெற்ற பாடகராக முத்திரை பதித்தார்.

பாகவதரின் சாயலில் டி.எம்.எஸ். பாடிய சில பாடல்கள்:

1.கண்ணிருந்தும் குருடாய் இருந்து விட்டேன் (பட்டினத்தார்)

2. நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே(சதாரம்)

3. நாடகமெல்லாம் கண்டேன் ( மதுரை வீரன்)

4. வசந்த முல்லை போலே வந்து (சாரங்கதாரா)

5. ராதே உனக்கு கோபம் ( குலமகள் ராதை)

6. ஆடவேண்டும் மயிலே ( அமுதை விளிநாதர்)

7. வில்லேந்தும் வீரரெல்லாம் ( குலேபகாவலி)

8. ஏரிக்கரையின் மேலே (முதலாளி)

9. வாடாமலரே தமிழ்த்தேனே (அம்பிகாபதி)

10. முல்லை மலர் மேலே (உத்தம புத்திரன்)

11. வா கலாப மயிலே ( காத்தவராயன்)

12. பெண்களை நம்பாதே (தூக்குதூக்கி)

13. நான் பெற்ற செல்வம் (நான் பெற்ற செல்வம்)

14. தில்லையம்பல நடராஜா (சௌபாக்யவதி)

15. வாழ்ந்தாலும் ஏசும் ( நான் பெற்ற செல்வம்)

[ஊஞ்சல் இன்னும் ஆடும்]

யாழ் சுதாகர்


அற்புதமான பழைய திரைப்பட பாடல்களுக்கு இடையே யாழ்சுதாகரின் குரலை சென்னை 'சூரியன் எப்.எம்மில் ' நீங்கள் கேட்கலாம்.

ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் ,யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் செயலாளருமான யாழ்வாணனின் மூத்த புதல்வர் இவர்.

'தேவி' ,'சாவி' ,'பொம்மை' ஆகிய பத்திரிக்கைகளில் பணியாற்றிய யாழ்சுதாகர் பிரபல பெண்கள் மாத இதழான 'மங்கை'யில் ஆறு ஆண்டுகள் (1993 - 1998) பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார்.

'ஒரு யாழ்ப்பாணக் குயில் பேசுகிறது' (1986) ,'புலம் பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு யாழ்சுதாகர் பதிøகள்' ஆகிய புத்தகங்களை யாழ் சுதாகர் எழுதியுள்ளார்.

யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளை...அபூர்வமான ப¨Æய பாடல்களுடன்...கீழ் வரும் இணைய தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.
yazhkavi.blogspot.com

யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சல்' வாரந்தோறும் வெள்ளியன்று வெளியாகும்.

அந்த நாள் ஊஞ்சல் பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.


Article 1
Article 2
Article 3
Article 4
Article 5
Article 6
Article 7
Article 8
Article 9
Article 10
Article 11


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...