அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்! 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கணையாழி - சிற்றிதழ் அறிமுகம் 44

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   20 , 2006  23:01:11 IST

சிற்றிதழ்களின் வாழ்வுக்காலம் குறுகியது எனும் நியதியைத் தகர்த்துப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெகுசில இதழ்களே வெளிவந்துகொண்டிருக்கின்றன. அத்தகைய இதழ்களில் முக்கியமானது: 'கணையாழி' மாத இதழ். செய்திகளையும், சுவையான பகுதிகளையும் தாங்கிய இதழாகப் பத்திரிக்கையாளர்
கி. கஸ்தூரிரங்கனால் டெல்லி வாழ் தமிழர்களுக்காக 1965 இல் டெல்லியில் தொடங்கப்பட்டது.

இது டில்லிப் பத்திரிìகை. ஆயிரம் மைல்கள் கடந்து வந்து இங்கு வாழ்ந்து வரும் தமிழர்களுக்காக அவர்கள் சுவைத்து மகிழக் கூடிய விஷயங்களைப் பிரசுரிக்கும் நோக்கத்துடன் ஆர்வமுள்ள சில நண்பர்களின் கூட்டு முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் மாதப் பத்திரிக்கை. தேர்ந்தவர்களால், சுவைப்படப் எழுதப்படும் செய்திக்கட்டுரைகள், கதைகள், இலக்கியம், விஞ்ஞானம், கல்வி மற்றும் வாழ்க்கைக்குப் பயன்தரும் பல சுவையான குறிப்புகள் இவற்றைத் தாங்கி ஒவ்வொரு தமிழ்மாத முதல் வாரத்தில் உங்களைத் தேடி வரும்" எனும் அறிவிப்புடன் வெளிவந்தது.

கணையாழி, படிப்படியாகச் சில மாறுதல்களைப் பெற்றது. ஆரம்ப காலத்தில் பத்திரிக்கையாளருக்கு பெரும் பங்கு இடமளித்த கணையாழி பிறகு எழுத்தாளருக்கு இடம் அளிக்கத் தொடங்கியது.

1965 லிருந்து 1970 வரை டெல்லித் தமிழர்களுக்காக அரசியலை முதன்மையாகப் படுத்திய செய்திப் பத்திரிகையில் உலக நாட்டு நடப்புகள், இலக்கியத் தொடர் கட்டுரைகள். அரசியல் பேட்டிகள், பொருளியல் செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியன வெளியாகியது. 1970 லிருந்து 1975 வரை அரசியலுடன் புதுக் கவிதைகளுக்கும் இடம் அளிக்கப்பட்டது. சிறந்த கதைகள், நாடகங்கள், சமூகவியல் சிந்தனைகள் ஆகியவை இடம் பெறலாயின. 1975 லிருந்து 1980 வரை கதைகள் துணுக்குகளுக்கு முதன்மை தரப்பட்டது. அரசியல் செய்திகள் துணுக்குகளாக அளிக்கப்பட்டன. தொடர் கதைகளுக்கு இடம் அளிக்கப்பட்டது. 1980 முதல் 1985 வரை அரசியல் பெரும் பகுதி நீக்கப்பட்டு குறுநாவல்களின் ஆதிக்கம் தொடங்கியது.கதை கவிதைகளும் அதிகம் இடம் பெறத் தொடங்கின.

1995 முதல் கி. கஸ்தூரிரங்கனால் தொடர்ந்து நடத்தப்பட்ட கணையாழி, நின்று போகக் கூடிய சூழலில் தசரா அறக்கட்டளை அதன் பொறுப்பேற்றது. இப்போது தசரா அறக்கட்டளை கணையாழியை நடத்திவருகிறது. தமன் பிரகாஷ், சாமிநாதன், ராஜேந்நிரன் எனும் மூவரின் முதல் எழுத்துக்களைக் கொண்ட 'தசரா' 1994 அக்டோபரில் கலை இலக்கிய மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட அமைப்பாகும்.

"தமிழுக்குப் பெருங்காப்பியங்கள் பெரிய அணி என்றால் கணையாழி தமிழுக்குச் சிறிய அணி. சொல்லின் செல்வன் இராமனைச் சீதைக்கு அடையாளம் காட்டியது போலத் தமிழுக்கு நல்ல இலக்கியத்தைக் 'கணையாழி' அடையாளம் காட்டும்" என்று கணையாழியின் பெயர்க் காரணம் குறித்து 1968, அக்டோபர் இதழில் சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

'கணையாழி' 1965 முதல் 1991 வரை பெரிய வடிவிலும், 1991 ஜனவரி முதல் 1993 வரை டைஜஸ்ட் வடிவிலும் 1993 டிசம்பர் முதல் பழைய வடிவிலும் வெளிவந்தது. தசரா பொறுப்பேற்ற பின் பெரிய அளவில் ஒரே சீராக வெளிவந்து கொண்டிருக்கிறது. கி. கஸ்தூரிரங்கனை ஆசிரியராகவும் பத்திரிகையாளர் கே. சீனிவாசனை துணை ஆசிரியராகவும் கொண்டு கணையாழி தொடங்கப்பட்டது. எழுத்தாளர் அசோகமித்திரன் (ஐ. தியாகராஜன்) கணையாழியைச் சென்னையில் அச்சிட்டு டில்லிக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். கி. கஸ்தூரிரங்கன் வீடே அலுவலகமாக இருந்தது. தி. ஜானகிராமன், க.நா.சு,.இந்திராபார்த்தசாரதி, டி. எஸ். சுந்தராஜன், என். எஸ். ஜகந்நாதன், கே.பி. ரங்காச்சாரி, கே. எஸ். சீனிவாசன், சாலை இளந்திரையன் போன்றோரது தொடர்புடன் கணையாழி வெளிவந்தது.

நான்காவது இதழிலிருந்து அசோகமித்திரன் பொறுப்பாசிரியர் ஆக்கப்பட்¼¡ர். 1968 செப்டம்பர் திங்கள் முதல் இந்திரா பார்த்தசாரதி ஆசிரியர் குழுவில் இணைந்தார். இது முதல் கல்வியாளர் தொடர்பும் பாதிப்பும் கணையாழியில் ஏற்பட்டது. 1972 ஆம் ஆண்டிலிருந்து கே. சினிவாசன் ஆசிரியர் குழுவில் இல்லை. இந்திராபார்த்தசாரதி போலந்தில் இருந்த காலத்தில் முழுக்க அசோகமித்திரன் பொறுப்பில் கணையாழி இருந்தது. 1987 பிப்ரவரி திங்களில் இந்திரா பார்த்தசாரதி மீண்டும் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். 1988 ஜீன் திங்களில் அசோக மித்திரன் பொÚப்பிலிருந்து விலகிக்கொண்டார். ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர்களைப் பொறுத்துக் கணையாழியின் இலக்கியத்தன்மையில் ஏற்ற இறக்கம் இருந்திருக்கிறது. கணையாழியில் ஆசிரியர் பொப்றுபு மாறிமாறி அமைந்தால் ஒரு கலவைத் தன்மை பெற்றதாக இருந்தது .மாலன், மலர் மன்னன், இயக்குநர் ஜெயபாரதி, ஞாநி, அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரும் கணையாழிப் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறார்கள்.

'தசரா' அறக்கட்டளை பொறுப்பேற்ற பின் மய்திலி ராஜேந்திரன் பொறுப்பில் இருந்தது. தற்போது மய்திலி ராஜேந்திரன் ஆசிரியராக இருக்கிறார். கி. கஸ்தூரிரங்கனை கௌரவ ஆசிரியராக இருக்கிறார் அட்டை, ஆசிரியர் பகுதி, இலக்கியவிமர்சனம், மொழி பெயர்ப்பு, தொடர்புகள், குறுநாவல்கள், சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரைகள், நேர் காணல், பிறவிமர்சனங்கல் (நாடக விமர்சனம், திரை விமர்சனம் ,ஓவிய விமர்சனம், பிற கலை விமர்சனங்கள்) ஆகியன நிரந்தரப் பகுதிகளாகும்.

கடந்த சில ஆண்டுகளாக இளந்தலைமுறைப் படைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது கணையாழி. பல புதிய படைப்பாளர்களுக்கும் தற்போது இடமளித்து வருவது குறிப்பிடத்தக்கது.கணையாழி இன்று காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு பல்வேறு விதமான படைப்புகளையும் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழிலக்கியத்திற்கு கணிசமான பங்களிப்பைத் தொடர்ந்து அளித்து வருகிறது 'கணையாழி'

சந்தாவிவரம்:

1 ஆண்டு ரூ110.00
2 ஆண்டு ரூ200.00
ஆயுல் ரூ1,000.00

வெளிநாடு

1 ஆண்டு - 15 அமெரிக்கா (யு.எஸ்) டாலர்
2 ஆண்டு - 30 அமெரிக்கா (யு.எஸ்) டாலா
ஆயல - 150 அமெரிக்கா (யு.எஸ்) டாலா

முகவரி:

பழைய எண் - 7
புதிய எண் - 11
நானா தெரு,
தியாகராய நகர்
சென்னை - 600 017

தொலைபேசி : 24347354
24349191

- மு. யாழினிவசந்தி

வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.


கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி
ஆயுத எழுத்து
விழிப்புணர்வு
வடக்கு வாசல்
இனிய ஹைக்கூ
உழைப்பவர் ஆயுதம்
தை , மண்மொழி
தச்சன்
அதிர்வு , குழலோசை
தமிழ் நேயம்
யாதும் ஊரே
மது மலர்
தலித்முரசு
மீண்டும் கவிக்கொண்டல்
அநிச்ச
தமிழ் பணி
வல்லினம்
நறுமுகை
சோலைக்குயில்


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...