???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு 0 ஹைதராபாத்தில் மீண்டும் ஆணவக்கொலை முயற்சி: பெண்ணின் தந்தை வெறிச்செயல்! 0 முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் 0 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் 0 பாங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு! 0 தென்னிந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 51.99 லட்சம்! 0 கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அந்த நாள் ஊஞ்சல் 11 - யாழ் சுதாகர்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   14 , 2006  22:14:50 IST

திரை இசைபாடல்கள் பற்றிய அபூர்வ தகவல்கள் யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சலில்'....

தமிழ்த் திரைப் பட வரலாற்றில் முதன் முதலாக
ஸ்டீரியோ முறையில் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு
வெளிவந்த திரைப்படம் 'பிரியா'.

இந்தப் படத்தின் பாடல்களை இளையராஜா அவர்கள்
ஸ்டீரியோ முறையில் பதிவு செய்த போது
அதற்கு கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் பங்களிப்பும்
உதவியும் முக்கியமாக இருந்தது என்கின்ற தகவல்
பலருக்குத் தெரியாது.

ஆம்.கே.ஜே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் சொந்தத்
தேவைக்காக ஸ்டீரியோ தொழில் நுட்ப
சாதனங்களை வாங்கிக் கொண்டு வந்து தமது வீட்டில்
வைத்திருந்தார்.

இளையராஜா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்தக்
கருவிகளை அவரிடம் கொண்டு வந்து கொடுத்தார்
ஜேசுதாஸ்.

'பிரியா' படத்தின் பாடல் ஒலிப்பதிவு சென்னை பரணி
ஸ்டூடியோவில் நடந்த போது ஒவ்வொரு பாடலும் ஒலிப்
பதிவு செயப்படும் வரை இளையராஜாவோடு அருகில்
இருந்து ஒத்தாசைகளையும் தாமே முன் வந்து
வழங்கினார் ஜேசுதாஸ்.

பின்னாளில் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து பேசும் போது ஜேசுதாஸின் பெருந்தன்மையை மனம் திறந்து
பாராட்டி இருக்கிறார் இளையராஜா.
இளையராஜா சொல்கிறார்.

'பிரியா படத்திற்காக தமது கருவிகளைக்
கொடுத்தமைக்காக எந்தக் கட்டணத்தையும் ஜேசுதாஸ்
எங்களிடம் வாங்கவில்லை. அந்த ஒலிப் பதிவின் போது
அவர் செய்த உதவி அவரது சகோதரத்துவத்துக்கும்,ஆழ்ந்த
நட்புணர்வுக்கும், பெருந்தன்மைக்கும் எடுத்துக் காட்டாகும்'

[ஊஞ்சல் இன்னும் ஆடும்]

யாழ் சுதாகர்


அற்புதமான பழைய திரைப்பட பாடல்களுக்கு இடையே யாழ்சுதாகரின் குரலை சென்னை 'சூரியன் எப்.எம்மில் ' நீங்கள் கேட்கலாம்.

ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் ,யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் செயலாளருமான யாழ்வாணனின் மூத்த புதல்வர் இவர்.

'தேவி' ,'சாவி' ,'பொம்மை' ஆகிய பத்திரிக்கைகளில் பணியாற்றிய யாழ்சுதாகர் பிரபல பெண்கள் மாத இதழான 'மங்கை'யில் ஆறு ஆண்டுகள் (1993 - 1998) பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார்.

'ஒரு யாழ்ப்பாணக் குயில் பேசுகிறது' (1986) ,'புலம் பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு யாழ்சுதாகர் பதிøகள்' ஆகிய புத்தகங்களை யாழ் சுதாகர் எழுதியுள்ளார்.

யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளை...அபூர்வமான ப¨Æய பாடல்களுடன்...கீழ் வரும் இணைய தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.
yazhkavi.blogspot.com

யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சல்' வாரந்தோறும் வெள்ளியன்று வெளியாகும்.

அந்த நாள் ஊஞ்சல் பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.


Article 1
Article 2
Article 3
Article 4
Article 5
Article 6
Article 7
Article 8
Article 9
Article 10


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...