![]() |
ம.திலகபாமா - கவிதைத்திருவிழா 10Posted : வியாழக்கிழமை, ஜுலை 06 , 2006 07:46:00 IST
போகசக்தி
எனக்கென்று எப்பவும் பயிர் வளர்க்கின்றேன் ஆசை ஆசையாய் புதுமுளை வாசத்தில் மகிழ்ந்து குழந்தை தழுவலில் கரைந்து பூ விரிந்து மணம் எனக்குள் கரைய வழியும் தேன் என் விரல் நனைக்க சிலநேரம் அதன் நிழலில் குளிர்ச்சியாலும் காதலெனும் பெயரோடிருக்க எனைச் சிறைவைக்க சந்திரன்கள் நினைக்கையிலெல்லாம் என் பயிரைக் குறிவைக்க தூரப் போகின்றேன் இது எனதல்ல என்றுணர்த்தி இப்போ நானும் சுதந்திரமாய் நான் வளர்த்த கன்று நூறாவது தலைமுறைக்கு சுதந்திரங்களை விளைவித்துக் கொண்டிருந்தது போகசக்தியாய் வானும் நிலவும் சேர்ந்திருப்பதாய் பலர் சொல்லித் திரிய என்னோடு நெருக்கமென்று நிலவும் காண்பித்து திரிய நானோ எப்போழுதும் தூரத்தில் நிலவோடும் ஒட்டாது ***** ***** ***** ***** புத்தம் காதலால் வாழ்ந்து விட நான் நினைக்க காதலால் வென்று விட நீ தீர்மானிக்கின்றாய் வென்று விட்ட உனக்கு என் தோல்வியையும் தந்து விட்டு காதலை எல்லைப்புற மரத்தில் கட்டித் தொங்க விட்டு என் அஞ்ஞாத வாசம் தொடங்குகின்றது பரி நிர்வாணமாய் ***** ***** ***** ***** கழுவேறுமா ஆதிக்கங்கள் கதிர் வேலன் தேவியாய் உருமாறியிருக்க சமணத் துறவி பாண்டியாய் விழிகள் உருட்ட கழுவேத்தும் திருவிழாவில் அடிக்கப் படும் மேளங்களில் காதுகளை எட்டாத நேசகுரல்கள் மனிதனின் அரசியல் மதங்களாய் மனிதனின் பொறாமை வரலாறுகளாய் மனிதனின் ஆதிக்கங்கள் இலக்கியங்களாய் நாக்கு சிவப்பேற வெற்றிலை போட்ட பின்பும் போகாத நெஞ்செரிச்சல்கள் தூக்கிச் சுமந்த கல்வெட்டுக்கள் சரியாக வாசித்து அர்த்தப் படுத்தப் படாது பாரமாக முதுகெலும்புடைக்க கழுவேற்றிய நூற்றாண்டுகள் ஓடிக் கடந்த பின்னும் போகாத உயிருடன் சிரித்து தொலைக்கும் இராட்சத ஆதிக்கங்கள் பார்க்கின்ற சிலையுள்ளும் வாசிக்கின்ற எழுத்துள்ளும் நடத்துகின்ற நட்புள்ளும் ***** ***** ***** ***** விழிகளின் நிழல் ஏழுமலை ஏழு கடல் தாண்டி ஒளித்து வைத்திருந்த விழி இரண்டின் ஈரப் பதத்தில் அவ்வப் போது வேர் கொள்கிறது மனது சிமிட்டும்விழி இமைகள் வழியும் காமத்தையும் துடைத்தெறிந்து விட்டு முளைக்கப் போகிற தனது விதைகளுக்காய் நெஞ்சை உழுது விட்டுச் செல்கின்றன விழி வழி வழியும் ஒளிகள் வண்ணங்கள் விதைத்துப் போக வான விட்கள் முளைக்கின்றன உயிர்ச்சக்தியை மீட்டுக் கொண்டு மீண்டும் ஒளித்து வைக்கிறேன் இன்னுமொரு கோடையில் எனக்குக் குளிராகப் போர்த்த பத்திரப் படுத்திய இறந்த காலத்தை ¿¢கழ்காலத்தில் சுவைத்து எதிர்காலத்திற்கு அதை முளைக்க வைக்கிறேன் என்றும் தேவை விழிகளின் நிழல்களென ***** ***** ***** ***** கட்டையடுக்கல்கள் ந்ிராகரிப்பு நெருப்பை வீசியெறிய முன்னாலிட்டு குளிர் காயத் துவங்குகின்றாய் போகட்டும் ¿¢ரத்தரமில்லை குளிர் காயல்கள் காற்றுக் காலம் வர சுற்றிச் சுழலும் காற்றோடு கனன்று உனைச் சிறை வைக்கக் கூடுமொரு நாள் எரிக்கும் கோடைக் காலம் எதிர் நிற்க வெந்து உரியும் முகத் தோல்கள் நான் எரிந்ததை நெருப்பாய் நீ உணரும் வரை என் தீக்குளிப்புகள் எனக்கான நிரூபணங்களாக இல்லாது உனக்கெதிரான கட்டையடுக்கலாய் ***** ***** ***** ***** வேர் விடும் கணுக்கள் வேர் ஊன்றிய மண்ணாய் மாற்றிப் போனாய் வீழ்த்தும் பள்ளம் தோன்ற பலர் அள்ளிப் போக பார்த்திருந்தாய் அழத் தேவையில்லை யென ஆறுதல் சொன்ன வேளையில் காற்றுக்கு நீ சரிந்து வீழ கணுவிலிருந்தும் வேர் விடும் னம்பிக்கையாய் மாற அன்று பத்திரப்படுத்தத் துவங்குவாய் என்னை உயிராக - ம.திலகபாமா சிநேகமாய் ,சில வேளைகளில் கோபமாய் கவிதைகள் எழுதும் திலகபாமாவின் பயணம் மீட்சியை நோக்கியதாக இருக்கிறது. சிவகாசியில் பணிபுரியும் திலகபாமாவிற்கு சிற்பி இலக்கிய பரிசும் ,கவிதை உÈவு விருதும் கிடைத்திருக்கின்றது. திலகபாமாவின் படைப்புகள் : சூரியாள் (கவிதை - 2002) சிறகுகளோடு அக்னி பூக்களாய் (நீள்கவிதை - 2002) எட்டாவது பிÈவி (கவிதை - 2003) கூர்பச்¨ºயங்கள் (கவிதை - 2004) நனைந்த நதி (சிறுக¨¾ - 2004) தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன. கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும். பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க... கவிஞர் சுகுமாரன் கீதாஞ்சலி பிரியதர்ஷனி தேன்மொழி.எஸ் தேவதேவன் கோ.வசந்தகுமாரன் மதியழகன் சுப்பையா முத்துமகரந்தன் ரவிசுப்ரமணியன் அழகுநிலா அரிக்கண்ணன் அய்யப்ப மாதவன் அன்பாதவன் ஜே.கே.73
|
|