அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வெற்றியைக் கொண்டு வந்த மூன்று விஷயங்கள் - காந்தி கண்ணதாசன் நேர்காணல்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுன்   25 , 2006  00:35:46 IST

"துன்பங்களிலிருந்து விடுதலை" - இதுதான் கண்ணதாசன் பதிப்பகத்தின் முதல் புத்தகம். இன்று சிறந்த வெற்றி பதிப்பகமாக வளர்ந்திருக்கிறது . நேர்மை, கடவுள் நம்பிக்கை, கடின உழைப்பு இந்த மூன்று விஷயங்கள்தான் எனக்கு வெற்றியைக் கொண்டு வந்தது என்கிறார் கண்ணதாசன் பதிப்பக நிறுவனர் காந்தி கண்ணதாசன். அவர் தற்போதைய தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவரும் கூட.

1975ல் காந்தி கண்ணதாசன் சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மேற்படிப்புக்காக அப்பாவிடம் பணம் வாங்கக் கூடாது என்று உறுதியுடன் ஒரு ஏற்றுமதி வியாபாரத்தை தொடங்கி அது எதிர்பார்த்தளவு வெற்றியடையாததால் பின்பு அப்பா கவிஞர் கண்ணதாசனின் ஆலோசனையுடனும் ஆசியுடனும் 1976ல் தொடங்கியதுதான் கண்ணதாசன் பதிப்பகம். 1976லிருந்து 1981வரை 30 புத்தகங்களுக்கு மேல் வெளிவந்திருந்த நிலையில் திடீரென்று 1981 அக்டோபரில் கவிஞர் கண்ணதாசன் மறைந்து விட பதிப்பகத்தை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏகப்பட்ட சவால்கள். நடைமுறை சிக்கல்கள் அனைத்தையும் தாண்டி சமீபத்திய இந்தியா டுடே பத்திரிகையின் "தமிழகத்தின் சக்தி வாய்ந்த மனிதர்கள்" சர்வேயில் இடம் பெற்றுள்ளார். சாதனைப் பயணம் பற்றி அவருடன் உரையாடியதிலிருந்து.....

" 1975-ல் ஏற்றுமதி தொழில் நான் எதிர்பார்த்த அளவு போகல, நஷ்டம், அப்பாகிட்ட கேட்டேன். நான் எடுத்த முயற்சி தோற்றது, அப்பதான் அப்பா சொன்னார் பதிப்பகம் ஆரம்பிக்கலாம் என்று. முதல் புத்தகம் எக்கச்சக்கமா விற்பனையாச்சு. அப்பதான் அப்பா வெறும் அப்பா மட்டுமில்லை மிகப்பெரிய எழுத்தாளர், மக்களால் மதிக்கப்படுகிறவர் மிகப்பெரிய மனிதர்னு புரிஞ்சிக்கிட்டேன். வீட்ல எப்பவுமே 18 கார் நிற்கும். அப்பா இறந்தன்னைக்கு சாயங்காலம் ஒரு கார் கூட கிடையாது. இந்த வீடு அப்பா வாழ்ந்த வீடு. இந்த வீட்டை வாங்கிரணும்னு முடிவு பண்ணினேன். அவங்ககிட்ட ரேட் கேட்டேன். என்கிட்ட அவ்ளோ பணம் அப்போதைக்கு இல்ல. ஆனா கடைசியில நான் இந்த வீட்டை வாங்கிட்டேன். நீங்க ஒரு காரியத்தை செய்யணும்னு உறுதியா இருந்தா அதைச் செஞ்சிரலாம்.

1981 அக்டோபரில் அப்பா இறந்தவுடனே ஏகப்பட்ட சிக்கல்கள். நான் வேலைக்குப் போக வேண்டியிருந்தது. பதிப்பகத்தை நடத்த முடியல. ஒரு வேலைக்கும் போனேன். வேலை பார்த்துட்டே பதிப்பகத்தையும் பார்த்திட்டிருந்தேன். அப்பாவினுடைய இழப்பு மிகப்பெரியது. அப்பா இருந்தவரைக்கும் அறிவுரை சொல்ல ஆள் இருந்தது. நமக்கு ஒரு Spiritual guidance கிடைக்கும்னு நம்பினேன்.

1984ல் வேலையை விட்டேன் இனிமேல் மொத்த நேரத்தையும் பதிப்பக வளர்ச்சிக்காக செலவிடறதுன்னு முடிவு பண்ணி முழுக்க பதிப்பக வேலைகÇ¢ல் என்னை ஈடுபடுத்திகிட்டேன். புதுசா என்ன பண்ணலாம் பதிப்பகத்துறையிலன்னு யோசிச்சிட்டிருந்தப்பதான் தமிழ்ல பெரிய அளவில் சுய முன்னேற்ற நூல்களே இல்லைங்கிறதை கண்டுபிடிச்சேன். ஆங்கிலத்தில் இருக்கிற நல்ல சுய முன்னேற்ற நூல்களை தமிழ்ல கொண்டு வந்தா மக்களுக்கு பயனுள்ளதா இருக்குமேன்னு யோசிச்சேன். நானே வழக்கறிஞரா இருந்ததால முறைப்படி சம்பந்தப்பட்டவர்களிடம் காப்பிரைட் உரிமை வாங்கி தமிழ்ல நல்லபடியா மொழிபெயர்த்து வெளியிட்டோம். பெரிய லெவல்ல வெற்றி கிடைச்சது. எல்லா நேர்மையான EntrepreneurìÌõ ஒரு Spiritual guidance கிடைக்கும் ஏகப்பட்ட ஆங்கிலம் புத்தகங்கள் இருக்கிற இடத்துல ஏதொவொரு புத்தகத்தை எடுத்து இதை மொழிபெயர்க்கலாம்னு எப்Àடி எனக்கு தோÏது, Spiritual Power தான்.

பதிப்பகத்துக்காக நிறைய படிக்க ஆரம்பிச்சேன் ஓஷோவால அதிகம் ஈர்க்கப்பட்டேன். ஓஷோவை தமிழ் மக்களுக்கு முறையா அறிமுகப்படுத்தினா மக்கள் விரும்புவாங்கன்னு முடிவெடுத்து ஏராளமான ஓஷோ புத்தகங்களை தமிழ்ல கொண்டு வந்தோம். அது மிகப்பெரிய வெற்றி.

அதுக்கப்புறம் கம்ப்யூட்டர் புத்தகங்கள் 1994ல் கண்ணதாசன் பதிப்பகத்தை கணினி மயமாக்கினேன். 1995லேயே எங்களுக்கு தனி இ-மெயில் வைச்சிருந்தோம். தமிழ்ல கணினி மயமாக்கப்பட்ட முதல் பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம்தான். கம்ப்யூட்டர் பத்திய எங்கள் முதல் புத்தகம் "இன்டெர்நெட்" மிகவும் பரபரப்பா விற்பனையாச்சு.

கிராமத்துக்குள்ள பணம் இருக்கு, அந்த பணத்தை Use பண்ணனும், குறிப்பா நாங்க போட்ட கம்ப்யூட்டர் புத்தகங்கள் அனைத்துக்கும் பெண்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருந்துச்சு. அவங்க இந்த மாதிரியான புத்தகங்கள் மூலமா வீட்லயிருந்துகிட்டு கம்ப்யூட்டர் பத்தியும் முழுமையா தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பா இருக்குது.

ஒரு நல்ல புத்தகம் வெளியிட்டால் மக்களுக்குப் போய்ச் சேரணும்னா முறையா சந்தைப்படுத்தணும். முறையா சந்தைப் படுத்தும்போது மக்களிடம் நம்மைப் பற்றிய மதிப்பு உயரும். மக்களால் மதிக்கப்படுகிறவர்களால் மதிக்கப்படுகிற ஒரு நல்ல தொழில்ல நாம இருக்கோம் அப்டிங்கிற மனத்திருப்தி கிடைக்கும். மக்களுக்கும் முறையாகப் புத்தகங்கள் போய்சேரணுங்கிறதுக்காக மதுரை, பாண்டிச்சேரி, கோயமுத்தூர் மூன்று இடத்துலயும் கிளைகள் தொடங்கினோம். தமிழ்நாட்டை ஒரு மேப் போட்டு அங்க எங்கெல்லாம் நாங்க விநியோகம் பண்ணனும் யோசிச்சோம். இப்ப கிளைகள் எல்லாம் விற்பனை விஷயங்களை பாத்துகிறதால எங்களலால இன்னும் என்னென்ன நல்ல புத்தகங்களை கொண்டு வரலாம்னு யோசிக்க முடியுது.

ஜனாதிபதி அப்துல்கலாமோட புத்தகத்தை "அக்னிச்சிறகுகள்"ன்னு தமிழ்ல கொண்டுவந்தோம். இதுவரைக்கும் 2 லட்சம் பிரதிகளுக்கு மேல விற்பனையாயிருக்கு. மாணவர்களுக்கென்று 36 ரூபாய்க்கு மலிவு விலை பதிப்பு போட்டிருக்கோம். தமிழ்ப்புத்தக விற்பனையில் இது ஒரு மிகப்பெரிய சாதனை.

இந்தியாவுல எல்லோராலும் நல்ல மனிதன் என்று ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு ஆள் அப்துல்கலாம்தான். அவர் புத்தகம் இவ்வளவு காப்பி வித்ததற்கு அப்துல்கலாம்ங்கிற hype மிக முக்கிய காரணம். ஒரு கிராமத்துலயிருந்து ஒரு ஆள் வந்தார். சார் அப்துல்கலாம் புக் ஒரு காப்பி குடுங்க சார்ன்னு கேட்டார். எதுக்காக வாங்குறார்ன்னு ஒரு ஆர்வத்துல விசாரிச்சப்போ அவர் சொன்னார். சார் என்காலம் முடிஞ்சுப் போச்சு, இப்ப படிக்கிற புள்ளைங்களாவது நல்லா படிச்சு நல்ல பிள்ளைங்களா வரட்டும். எங்க ஊரு பள்ளிக்கூடத்து புள்ளைங்களுக்கு குடுக்கிறதுக்குதான் சார். ஊருக்கு இரண்டு அப்துல்கலாம் வந்தாகூட நல்லதுதானே.

ஒரு தொழில் பண்ணும் போது, தடைகள் வரும், தோல்விகள் வரும் எல்லாம் எதிர்பார்த்தமாதிரி நடக்காது. ஆனால் நீங்க நேர்மையாகவும், கடவுள் நம்பிக்கையுடனும் உழைக்கத் தயங்காதவராகவும் இருந்தீங்கன்னா உங்களுக்கு சிக்கல்கள் நேரும்போதெல்லாம் ஏதாவதொரு வடிவத்துல தீர்வுகளும் உங்க¨Ç நோக்கி வந்துகொண்டிருக்கும் இது மற்றவர்கள் மூலமாகவும் நிகழலாம். உங்கள் உள்ளுணர்வுகள் மூலமாகவும் நிகழலாம்.

2008ல் உலகபுத்தகக் கண்காட்சியை சென்னைக்குக் கொண்டுவருவதே என்னுடைய முக்கிய வேலை. அதற்கான ஆயுத்தங்களை நாங்கள் ஆரம்பித்துவிட்டோம் , வாசகர்கள் சினிமாவுக்கு போகலாம் பீச்சுக்கு போகலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு புத்தகங்களுக்காக பணம் செலவழிக்கிறார்கள் நல்ல புத்தகங்களை பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள் அவர்களைப் பாராட்ட நாங்கள் எடுக்கும் சிறு முயற்சி இது... "
என்று சொல்லிவிட்டு மெலிதாக புன்னகைக்கிறார் காந்தி கண்ணதாசன்.

பெரிய பெரிய விஷயங்களைக்கூட தன்னடக்கத்துடன் கூறும் காந்தி கண்ணதாசனின் பண்பும் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம்.


சந்திப்பு - என்.எஸ்.ராமன்


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...